இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் ஜிப்ரான் இசை..; ஊரடங்கில் இசைக்கலைஞர்களுக்கு உதவி.!

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் ஜிப்ரான் இசை..; ஊரடங்கில் இசைக்கலைஞர்களுக்கு உதவி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghibran music directorஇசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர்.

பல்வேறு புதுவித இசைமுயற்சிகளால், ரசிகர்களிடம் பெரும் புகழை குவித்துள்ளார்.

அவரது பாடல்கள் மட்டுமல்லாமல் அவரது பின்னணி இசையும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

“சாஹோ” படத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் குவித்த அவர், தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT Non Fungible Token எனும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார்.

இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத்தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நிவாரண நிதி அமைப்பிற்கும், இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத்துறை சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…

படத்தில் இடம்பெறாத “சாஹோ” பட ஹீரோ தீம் இசையை, NFT ( Non-Fungible Token ) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழ்நாடு முதலமைச்சர் M.K. ஸ்டாலின் அவர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த 50% , கொரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும்.

இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையிக் செய்யப்பட்ட NFT ( Non-Fungible Token ) முயற்சி ஆகும்.

இந்த இசை தொகுப்பினை, பட இயக்குநரை தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை, இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் அப்போது காட்சியின் தன்மை கருதி, வேறு வகையிலான இசைத்துணுக்கை செய்தோம். அதனால் இந்த இசையினை எங்குமே வெளியிடவில்லை.

இந்த NFT ( Non-Fungible Token ) வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென கேட்ட போது, இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…

இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பினை உயரிய விலை ஒன்றை அளித்து வாங்கலாம்.

இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும் எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றார்.

Music director Ghibran’s new initiative in covid 19

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன்

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VR Nagendranபல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குனருமான V.R.நாகேந்திரன்.

சில தினங்களாக இவர் தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பலரும் இவருடன் இணைந்து இந்த சேவையில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

V.R.நாகேந்திரன் அவர்கள் கூறுகையில், “ஒரு நாள் என் வீட்டு வாசலில் இரண்டு நபர்கள் வந்து உணவு கிடைக்குமா என்று கேட்டனர், கொடுத்தேன். இந்த ஊரடங்கு காலத்தில் சிலர் உணவை கேட்டு பெறுகின்றனர் ஆனால் பலர் யாரிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் பசியால் வாடுகின்றனர்.

தினமும் என்னால் முடிந்த அளவு பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

யாரிடமும் உதவியை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்க நினைத்தேன். என் மகளின் பள்ளி செலவுகாக வைத்திருந்த தொகையை வைத்து சென்னை அசோக் நகரில் நான் வசிக்கும் இடத்தில் ’பசித்தவர்கள் எடுத்து கொள்ளலாம்’ என்ற பலகை போட்டு உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு தினமும் காலை 8 முதல் 8.30 வரை, மதியம் 1 முதல் 1.30 வரை கொடுத்து வந்தேன்.

இந்த விஷயத்தை அறிந்து என் இயக்குனர் சுசி கணேசன், மற்ற இயக்குனர்கள் லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், என் நண்பர்கள், என் அடுக்கு மாடி குடியிருப்பின் செயலாளர் உள்ளிட்ட பலர் அவர்களது பங்களிப்பு இந்த நற்செயலில் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு நிதியுதவி அளித்தனர். இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் என்னை ஊக்குவித்தனர்.

50 உணவு பொட்டலங்களாக ஆரம்பித்த இந்த செயல் தற்போது 400 பொட்டலங்களை எட்டியுள்ளது. தூய்மை பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், துணை இயக்குனர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் என பலரும் இந்த உணவு பொட்டலங்களை தினம் எடுத்து செல்வதை பார்க்கையில் உள்ளத்தில் ஒரு ஆனந்த பூரிப்பு ஏற்படுகிறது” என்றார்.

“தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் நாமும் நம்மால் இயன்ற உதவிகளை இல்லாதவருக்கு செய்வோம்.

கொரோனா என்னும் சங்கிலியை உடைத்தெறிவோம். உதவி என்னும் சங்கிலியை தொடர்வோம்” என்று V.R.நாகேந்திரன் கூறினார்.

Director VR Nagendran provides food to poor people

வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில் ஆல்பம் சாங்

வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில் ஆல்பம் சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன், ஒரு தனித்த ஆல்பம் பாடலை, மறைந்த பாடகர், சரித்தர புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்…

இது என் வாழ்நாளின், பொக்கிஷமான மறக்கவியலாத அனுபவம், திரு SP பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் முழுதிலும், ஒரு ரசிகனின் மனோபாவத்தில் தான் இருந்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவு, அவருடனான எனது முதல் சந்திப்புகள், சரியாக 10 வருடங்களுக்கு முன்பானது. கோடம்பாக்கத்தில் நான் சவுண்ட் இன்ஞ்சினியராக வேலை பார்த்த ஸ்டுடியோவில் அவர் தன் பாடல்களின் பதிவுக்காக அடிக்கடி வருவார். “100 வருட இந்தியா சினிமா” விழாவிற்காக அவர் பாடிய பாடலுக்கு நான் தான் சவுண்ட் இன்ஞ்சினியராக வேலை பார்த்தேன்.

அப்போது தான் முதன் முதலில் அவரது டைரியில் எனது பெயர் சவுண்ட் இன்ஞ்சினியராக இடம்பெற்றது.

“காத்தாடி மேகம்” பாடல் அனுபவம் குறித்து கூறுகையில்..

திரு.SP பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு தனித்த ஆல்பம் பாடலில் பணிபுரிய வேண்டுமென பல நாட்களாக கனவு கொண்டிருந்தேன்.

முன்பே தனித்த ஆல்பம் பாடல்களில் அவர் பங்கு கொண்டிருந்தாலும் அவையாவும் ஆன்மிகம் குறித்ததாகவும், தத்துவார்த்தம் மிக்க பாடல்களாகவும் மட்டுமே இருந்தன. அந்த சமயத்தில் கவிஞர் குட்டி ரேவதியுடன் வேறொரு பணியில் இருந்தபோது என் கனவு குறித்து கூறினேன். அவரும் மகிழ்ச்சியடைந்தார்.

இந்த பாடலுக்காக திரு.SP பாலசுப்பிரமணியம் அவர்களை அணுகியபோது, புதுமுக இசையமைப்பாளர் என்கிற எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக பாட சம்மதித்தார்.

அவர் அமெரிக்க சுற்று பயணத்தில் இருந்த போது, இப்பாடலின் டிராக்கை இணையம் வழியே அவருக்கு அனுப்பினேன். டிராக்கை கேட்டவர் மிகவும் மகிழ்ந்து என்னை பாரட்டினார். பிற்பாடு இசைஞானி இளையராஜா அவர்களுடன் வேறு சில பாடல் பணிகளில், அவர் தொடர்ந்து பணியாற்றியதால் நான் நான்கைந்து மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இசைஞானி இளையராஜா அவர்களுடன் ஒரு பாடல் பதிவு தடைபட்ட நேரத்தில், விரைந்து வந்து, எனது பாடலை பாடி தந்தார். பாடல் பதிவின் போது ‘உனக்கு நிறைய திறமை இருக்கிறது, நல்லபடியாக வர வாழ்த்துக்கள்’ என வாழ்த்தினார். பாடல் ஒலிபதிவிற்கு பிறகு அவரை வைத்து வீடியோ எடுக்க ஆசை பட்டேன், ஆனால்திடீரென நிகழ்ந்த அவரது மறைவு, நாம் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான நிகழ்வு. ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக என்னுடன் உள்ளது.

“காத்தாடி மேகம்“ பாடலின் தாமதம் குறித்து கூறுகையில்..

அவர் மறைந்த நிலையில் கோடான கோடி ரசிகர்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்பு, அனுதாபமாக இப்பாடலின் மீது விழ வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் தான் பாடலின் வெளியீட்டினை தள்ளி வைத்தேன். இப்போது அவரது பிறந்த நாளில் அவரது நினைவாக இப்பாடலை வெளியிடுவது மகிழ்ச்சி.

Late singer SPB’s album song out

திமுக ஆட்சி எப்படியிருக்கு..? ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதியளித்த பின் சீமான் பேட்டி

திமுக ஆட்சி எப்படியிருக்கு..? ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதியளித்த பின் சீமான் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinநடிகரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோர் இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

அப்போது முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிதிக்கு, சீமான் நிதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“எனது தந்தை இறப்பின் போது இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதுவே ஆறுதலாக இருந்தது. அவர் அதோடு விட்டிருக்கலாம்.

ஆனால், அவர் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி என்னை நெகிழ வைத்துவிட்டார்.

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

7 பேர் விடுதலை முடிவில் உறுதியாக இருப்பதாக பேசினார்.

பிளஸ் 2 தேர்வு குறித்தும் பேசினோம்.

மாணவர்களின் உயிரே முக்கியம். இந்த ஒரு வருடம் தேர்வு எழுதாவிட்டால் ஒன்றும் ஆகாது என்ற என்னுடைய கருத்தையும் தெரிவித்தேன்.

இவ்வாறு சீமான் பேசினார்.

புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு…` ஆட்சி நல்லா இருக்கு. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

துறை அதிகாரிகள் நல்லா வேகமா இயங்குறாங்க. மருத்துவத் துறையில அண்ணன் மா.சுப்ரமணியன் சிறப்பா இயங்குறாரு ” என்றார் சீமான்.

Seeman praises MK Stalin and Ma Subramanian

சூர்யா-கௌதம் மேனனின் ‘நவரசா’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த பி.சி.ஸ்ரீராம்

சூர்யா-கௌதம் மேனனின் ‘நவரசா’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த பி.சி.ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Navarasaஇயக்குனர் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ படம் இயக்குநர் பாண்டிராஜுடன் ஒரு படம் என நடித்து வருகிறார் சூர்யா.

தற்போது இந்த படங்களின் சூட்டிங் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார் சூர்யா.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள ஆந்தாலஜி படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீராம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

‘நவரசா’ வரும் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சூர்யா மற்றும் கௌதம் மேனனின் வெற்றி கூட்டணி ‘காக்க காக்க’ & ‘வாரணம் ஆயிரம்’ படங்களில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PC Sree ram gives update on Suriya’s Navarasa

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ படங்களைத் தந்தவர் ஜி.என்.ரங்கராஜன்.. அவர் வீட்டுக்கு என் பெயரை வைத்தார்.; கமல் இரங்கல்

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ படங்களைத் தந்தவர் ஜி.என்.ரங்கராஜன்.. அவர் வீட்டுக்கு என் பெயரை வைத்தார்.; கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘மகராசன்’, ’கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.

90 வயதான இவர் ஜிஎன் ரங்கராஜன் இன்று காலை காலமானார்.

அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த இரங்கல் அறிக்கையில்…

நான்‌ சினிமாவில்‌ நுழைந்த காலம்‌ தொட்டு இறக்கும்‌ தறுவாய்‌ வரை என்‌ மீது மாறாத பிரியம்‌ கொண்டவர்‌ இயக்குநர்‌ ஜி.என்‌. ரங்கராஜன்‌. கடுமையான உழைப்பால்‌ தமிழ்‌ சினிமாவில்‌ தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக்‌ கொண்டவர்‌.

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ பல திரைப்படங்களைத் தமிழ்‌ ரசிகர்களுக்குத்‌ தந்தார்‌. அவரது நீட்சியாக மகன் ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனும்‌ சினிமாவில்‌ தொடர்கிறார்‌.

கல்யாணராமன்‌, மீண்டும்‌ கோகிலா, கடல்‌ மீன்கள்‌, எல்லாம்‌ இன்பமயம்‌, மகாராசன்‌ என என்னை வைத்துப் பல வெற்றிப்‌ படங்களைத்‌ தந்தவர்‌. என்‌ மீது கொண்ட மாறாத அன்பால்‌, தான்‌ கட்டிய வீட்டிற்கு ‘கமல்‌ இல்லம்‌’ என்று பெயர்‌ வைத்தார்‌. இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக்‌கூடும்‌.

ஜி.என்‌.ஆர்‌ தன்‌ வீட்டில்‌ இல்லையென்றால்‌ ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ்‌ ரோட்டில்தான்‌ இருப்பார்‌ என்றே எங்களை அறிந்தவர்கள்‌ சொல்வார்கள்‌. சினிமாவில்‌ மட்டுமல்ல, மக்கள்‌ பணியிலும்‌ என்னை வாழ்த்தியவர்‌. எப்போதும்‌ எங்கும்‌ என்‌ தரப்பாகவே இருந்தவர்‌.

சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம்‌ செய்து பொலிவோடு இருக்க வேண்டும்‌. கமல்‌ பார்த்தால்‌ திட்டுவார்‌ என்று சொல்லி வந்தார்‌ எனக் கேள்வியுற்றேன்‌. தான்‌ ஆரோக்கியமாக இருப்பதையே நான்‌ விரும்புவேன்‌ என்பதை அறிந்தவர்‌.

நிபந்தனையற்ற தூய பேரன்பினைப்‌ பொழிந்த ஓர்‌ அண்ணனை இழந்துவிட்டேன்‌. அண்ணி ஜக்குபாய்க்கும்‌, தம்பி இயக்குநர்‌ ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனுக்கும்‌ குடும்பத்தார்க்கும்‌ என்‌ ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌”

இவ்வாறு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan’s emotional tweet on director Ranga Rajan’s death

More Articles
Follows