கொரோனாவினால் வீர மரணமடைந்த காவலர்களுக்கு இசையஞ்சலி.; ஜிப்ரான் இசையில் பார்வையற்ற திருமூர்த்தியின் ‘வீரவணக்கம் ஆன்தம்’

கொரோனாவினால் வீர மரணமடைந்த காவலர்களுக்கு இசையஞ்சலி.; ஜிப்ரான் இசையில் பார்வையற்ற திருமூர்த்தியின் ‘வீரவணக்கம் ஆன்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவல்துறை உங்கள் நண்பன் என்பது தமிழ்நாடு காவல் துறையின் தாரக மந்திரம். இது வார்த்தையாக மட்டும் நின்றுவிடாமல் செயல் வடிவமாக கொரோனா சமயத்தில் வெளிப்படுத்தியவர்கள் நம்முடைய காவல் துறையினர்.

கொரோனா சமயத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு காவல் துறையினர் இரவும் பகலும் மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்து சேவை செய்து வந்தனர்.

கொரோனா கோரப் பிடியில் பல காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் பலியானார்கள்.

அவர்களுடைய தன்னலமற்ற தியாகத்தை நினைவுக்கூறும் வகையில் தற்போது ‘வீர வணக்கம் அந்தம்’ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்த போலீஸ் வாரியர்ஸை கெளரவிக்கும் விதமாக இந்த ஆல்பத்தை உருவாக்கியவர் திருவள்ளுர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய திரு வருண்குமார் ஐ,பி.எஸ். அவர்கள். இந்த ஆல்பத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

‘தேசத்துக்காக’ என்ற இந்தப் பாடலை ‘செவ்வந்தியே மதுவந்தியே’ புகழ் மாற்றுத்திறனாளி திருமூர்த்தியும், தலைமை காவலர் சசிகலாவும் இணைந்து பாடியுள்ளனர்.

ஒளிப்பதிவை FIVETH ANGLE STUDIOS நிறுவனம் செய்துள்ளது.

இந்த ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த ஆல்பத்தை உருவாக்கிய மதிப்புக்குரிய திரு வருண்குமார் ஐ.பி.எஸ். மற்றும் அவருடைய குழுவினரை பாராட்டும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா சமயத்தில் பொது மக்களுக்காக காவல் துறையினர் அர்ப்பணித்த காட்சிகள் நெகிழவைக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இந்த ஆல்பத்தை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் காவல்துறைக்கு ராயல் சல்யூட் அடிக்கத் தோன்றும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் :

ஆக்கம்: வருண்குமார் ஐ. பி. எஸ்

இசை : ஜிப்ரான்

ஒளிப்பதிவு : மனோஜ் நாகராஜன் (Fifth Angle Studios)

பாடகர்கள் : திருமூர்த்தி, சசிகலா (தலைமை காவலர்)

Here is a tribute song made in memory of the police officers who lost their lives in this Covid situation. The music was composed by #Ghibran and made by Thiruvallur District SP #Varun Kumar.

@VarunKumarIPSTN @GhibranOfficial

Link : https://t.co/Pv5JBN9Uzt

தமிழ்நாட்டில் தியேட்டர்களை பிடிப்பதில் ‘அண்ணாத்த’ அடாவடி..? ஏக்கத்தில் ‘எனிமி’ தயாரிப்பாளர்

தமிழ்நாட்டில் தியேட்டர்களை பிடிப்பதில் ‘அண்ணாத்த’ அடாவடி..? ஏக்கத்தில் ‘எனிமி’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம் ‘எனிமி’.

இந்த படம் நவம்பர் 4ல் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்தனர்.

ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வர இருப்பதால், எனிமி படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் சிலர் தடுக்கிறார்கள் என அப்பட தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில்…

“எனிமி படத்தை தயாரித்துள்ள வினோத் நான். எங்க படத்தை நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம்.

ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம் (அண்ணாத்த) வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல்.

‘‘இறங்கி விடலாம்தான். ஆனால்..; ‘அண்ணாத்த’ உடன் மோதலில் இருந்து விலகியது ‘மாநாடு’’

அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் நான் ஆதரவு கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தையே (அண்ணாத்த) திரையிட்டால் எப்படி?.

அப்படியே எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை.

என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 தியேட்டர்கள் தான். அது கிடைத்தாலே போதும்.

நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆபர் தந்தும் நாங்கள் தான் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை.

எனவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்டவைகள் ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

‘எனிமி’ படம் தீபாவளிக்கு வெளிவராமல் போனால் நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார்.

இவ்வாறு வினோத் அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.

(ஆனால் இது உண்மையா? என தெரியவில்லை என்றே தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.)

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்துள்ள நிறுவனம் சன் பிக்சர்ஸ்.

இந்த நிறுவனம் திமுக அரசுக்கு உறவினர் முறை.

மேலும் ‘அண்ணாத்த’ படத்தை முதல்வரின் மகனும், நடிகருமான உதயநிதி MLAவின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால்தான் சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Enemy producer requests TFPC to help him get 250 screens!

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகாவுடன் இணையும் யோகி பாபு

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகாவுடன் இணையும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினேகா, வெங்கட் பிரபு நடிப்பில் அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படமான ‘ஷாட் பூட் த்ரீ’ வேகமாக வளர்ந்து வருகிறது.

பிரசன்னா – சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன், அவரது அடுத்த படத்தை தற்போது மும்முரமாக தயாரித்து இயக்கி வருகிறார்.

‘ஷாட் பூட் த்ரீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.

சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் பூவையார் (மாஸ்டர்), பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் மைய வேடங்களில் நடிக்கின்றனர்.

நான்கு குழந்தைகளை சுற்றிய கதையான ஷாட் பூட் த்ரீ-யின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

‘மகாபாரத கதையில் ஹீரோ துரியோதணன்.; திரவுபதியாக சினேகா’

கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி அருணாச்சலம் வைத்யநாதன் கூறுகையில்,…

“குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும்.

அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம்.

குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்,” என்றார்.

பொதுவாக குழந்தைகளை வைத்து படத்தை இயக்குவது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், அதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக நாங்கள் மாற்றியுள்ளோம்.

ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்படுவதற்கு முன்னர் 20 முறை ஒத்திகை பார்க்கப்படுகிறது என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் கூறினார்.

சினேகா மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டோருடன் பணிபுரிவது கூறிய அவர்,…

“நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. வெங்கட் பிரபுவை இயக்குவது ஜாலியான அனுபவம். யோகி பாபு தனது தனித்துவ பாணியில் படத்திற்கு மெருகு சேர்க்கிறார். குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றனர்,” என்றார். அன்புக் கொரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம் என்று அருண் வைத்தியநாதன் மேலும் கூறினார்.

“கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள்.

OTT தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் கதையை ஆனந்த் ராகவ்வுடன் இணைந்து கொரோனாவுக்கு முன்னரே நான் எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்தி உள்ளோம்,” என்று அருணாச்சலம் வைத்யநாதன் கூறினார்.

படத்தின் ஒளிப்பதிவை சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் கையாள, வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா இசையமைக்கிறார்.

படத்தொகுப்புக்கு சதீஷ் சூரியாவும், கலைக்கு ஆறுசாமியும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரித்து இயக்குகிறார்.

Arunachalam Vaidyanathan’s Shot Boot Three starring Sneha Venkat Prabhu taking shape at brisk pace

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா.? தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் அறிக்கை

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா.? தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டார் நடிகர் விவேக்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

மேலும் பொதுமக்கள் யாரும் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.” எனவும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அடுத்த நாள் திடீரென உயிரிழந்தார்.

இதனால் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என தகவல்கள் பரவியது.

‘‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்’

இதனையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதன் பின்னர் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதார ஆணையத்திற்க கடிதம் ஒன்று அனுப்பியது.

அதில் நடிகர் விவேக் மரணம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமாறு குறிப்பிட்டு இருந்தது.

அதன்படி விசாரணை மேற்கொண்ட தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்து விட்டதாக வல்லுநர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comedy Actor Vivek’s death not related to vaccine, Union govt’s AEFI panel confirms

சினிமாக்காரர்கள் வாழ்த்தல.. மீடியா பேட்டி எடுக்கல..; நொந்து போன நந்தா பெரியசாமி

சினிமாக்காரர்கள் வாழ்த்தல.. மீடியா பேட்டி எடுக்கல..; நொந்து போன நந்தா பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதர்ஷ் குரானா இயக்கத்தில் டாப்ஸி நாயகியாக நடித்துள்ள ஹிந்தி படம் ‘ராஷ்மி ராக்கெட்’.

ஓட்டப்பந்தய வீராங்கனை பற்றிய இந்தப் படத்தின் கதையை தமிழ் திரைப்பட இயக்குனரான நந்தா பெரியசாமி எழுதியிருந்தார்.

இந்த ஹிந்திப் படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தை ஹிந்தி திரைப்பட பத்திரிகை விமர்சகர்களும் ஊடகங்களும் பாராட்டி வருகின்றன.

ஆனால், இந்தப் படம் குறித்து தமிழ் பத்திரிகைகள் எதையும் குறிப்பிடவில்லை என வேதனையுடன் நந்தா பெரிய சாமி தன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘வெண்பாவுக்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்..; நந்தா பெரியசாமியின் பெரிய மனசு’

அதில்… “ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிக்காக அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கே சினிமாக்காரர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த ஒரு மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை.

கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் படத்தின் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்… வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக், வெண்பா, சிவாத்மிகா, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை இயக்கி முடித்துள்ளார் நந்தா பெரியசாமி.

இந்த படம் தீபாவளிக்கு பிறகு தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

Director Nandha Periyasamy’s sad post on facebook

பிரேக்கிங் நியூஸ் அப்டேட் : அமெரிக்க ரோபோக்களுடன் நடிகர் ஜெய் செம ஃபைட்

பிரேக்கிங் நியூஸ் அப்டேட் : அமெரிக்க ரோபோக்களுடன் நடிகர் ஜெய் செம ஃபைட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.

ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, பிக்பாஸ் சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ், போன்றோர் நடிக்கின்றனர்.

அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக் கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர் பணியாற்றியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, பிக்பாஸ் சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, இத்திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…..

Breaking news updates Actor Jai Fights with American Robots

More Articles
Follows