படிப்பா.? நடிப்பா.? மகளுக்காக மௌனம் கலைத்த கௌதமி

படிப்பா.? நடிப்பா.? மகளுக்காக மௌனம் கலைத்த கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautami daughterநடிகர் கமல்ஹாசனுடன் 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கவுதமி, தன் மகளின் எதிர்காலத்திற்காக கமலை பிரிகிறேன் என அண்மையில் அறிவித்தார்.

அதன் பின்னர், தன் மகளை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி வருவதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

கௌதமி மகள் சுபலட்சுமிக்கு தற்போது 17 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு தன் மகள் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கவுதமி.

அதில்.. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கு நன்றி. என் மகள் பள்ளிப் படிப்பில் கவனமாக இருக்கிறாள்.

எனவே, தற்போது நடிப்பில் கவனம் செலுத்த எந்த ஐடியாவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Gautami ‏@gautamitads
Ty everyone fr d warm wishes fr my baby bt its false news. She is focusd on school right now! No plans fr acting

மீண்டும் ரஜினியுடன் மோதுவாரா விஜய்?

மீண்டும் ரஜினியுடன் மோதுவாரா விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijayசூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களில் ஜீனியர் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாது.

காரணம் ரஜினி படத்துடன் தங்களால் போட்டி போட முடியாது என்பதால்தான்.

ஆனால் பாபா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், அதற்கு அடுத்த வந்த சந்திரமுகி படத்துடன் விஜய்யின் சச்சின் படம் வெளியானது.

இத்துடன் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் வெளியானது.

சந்திரமுகியின் மாபெரும் வெற்றியில் சச்சின் படம் என்னவானது? என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் அடுத்த வருடம் 2017 தீபாவளியை குறிவைத்து ரஜினியின் 2.ஓ படம் தயாராகி வருகிறது.

இதே நாளில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படமும் ரிலீஸ் ஆகலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஹ்ம்…. மீண்டும் ரஜினியுடன் மோதுவாரா விஜய்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

‘உன்னால் செய்ய முடியும்…’ விக்னேஷ் சிவனை பாராட்டிய நயன்தாரா

‘உன்னால் செய்ய முடியும்…’ விக்னேஷ் சிவனை பாராட்டிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara vignesh shivanஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுமுதல் தொடங்கியது.

இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில்…

சூர்யா நடித்த காக்க காக்க படத்தை ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு சென்று பார்த்தேன்.

இன்று அவருக்கு ஆக்ஷன் சொல்கிறேன். எனது கனவு நிஜமாகும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நயன்தாரா….

‘உன்னால் கனவு காண முடிந்தால், செய்ய முடியும்’ என்று பதிலளித்துள்ளார்.

Nayanthara ‏@NayantharaU

Retweeted Vignesh ShivN
If you can Dream it…You can Do it. Super best wishes to the TeamTSK

அடுத்த வருஷம் பொங்கல்-தீபாவளி ரெண்டுமே தளபதி ஸ்பெஷல்?

அடுத்த வருஷம் பொங்கல்-தீபாவளி ரெண்டுமே தளபதி ஸ்பெஷல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay new stillsபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் பாடல்கள் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படம் அடுத்த வருடம் 2017 பொங்கல் விருந்தாக வருகிறது.

இதனையடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இதன் சூட்டிங் பிப்ரவரி 2017ல் துவங்குகிறது.

இப்படத்தை 2017 தீபாவளிக்கு வெளியிடக்கூடும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் அடுத்த வருடம் பொங்கல், தீபாவளி இரண்டிலும் இளைய தளபதி விஜய்யின் விருந்து இருக்கும்.

ஆண்களை அசிங்கப்படுத்திய ஊர்வசி.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஆண்களை அசிங்கப்படுத்திய ஊர்வசி.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress urvasiதமிழில் பிரபல டிவி சேனலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார்.

இதுபோன்ற நிகழ்ச்சியை கைரளி டிவி சேனலில் ஜீவிதம் சாக்ஷி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஊர்வசி.

இதில் பிரச்சினையுள்ள குடும்பங்களை அழைத்து பேசி, பஞ்சாயத்து செய்கிறார்.

அதில் பெரும்பாலும் ஆண்களை அசிங்கமாக பேசுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்களும், மற்றவர்களும் மனித உரிமை ஆணயத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இதனால் கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊர்வசிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வெயிட் போட்டா ஹீரோதான்… அனிருத்துக்கு ஆசை காட்டும் ப்ரெண்ட்ஸ்

வெயிட் போட்டா ஹீரோதான்… அனிருத்துக்கு ஆசை காட்டும் ப்ரெண்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh photosதமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹிரோவாகி வரும் காலம் இது.

ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இளைஞர்களை தன் பாடல்களால் கவர்ந்த அனிருத்தையும் ஹீரோவாக எதிர்பார்க்கிறார்களாம் அவரது நண்பர்கள்.

மச்சான்.. நீ இன்னும் ‘வெயிட்’ போட்டா ஹீரோ ஆகிவிடலாம் என்கிறார்களாம்.

எனவே கூடிய விரைவில் அனிருத்தையும் ஹீரோவாக பார்க்க வாய்ப்பு ஏற்படலாம்.

அனிருத்தும் மாரி, வணக்கம் சென்னை, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் தலைகாட்டி சென்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows