கஜா புயல் முன்னெச்சரிக்கை.; முதன்முறையாக அரசுக்கு கமல் பாராட்டு

First time Kamal praises TN Govt for Gaja cyclone precaution stepsகண்ணா … நான்வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்… என கடந்த 25 ஆண்டுகளாக தன் அரசியல் பிரவேசம் குறித்து பேசி வந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் அரசியல் ஆசை இல்லை என பலமுறை சொன்ன, கமல்ஹாசன் திடீரென ஜெயலலிதா மறைவிற்கு பின் அரசியல் களத்தில் குதித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படும் தமிழக அரசின் செயல்பாடு சரியில்லை என்பதே பெரிய குற்றச்சாட்டாக இருந்தது.

பல சந்தர்ப்பங்களில் கேரள முதல்வரை பாராட்டியும் தமிழக அரசை திட்டி தீர்த்தார்.

இந்நிலையில் முதன்முறையாக தமிழக அரசை பாராட்டியுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பாராட்டு பதிவில்…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் @maiamofficial களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

First time Kamal praises TN Govt for Gaja cyclone precaution steps

Overall Rating : Not available

Latest Post