தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு தான் அறிவித்தப்படியே ரூ. 1 கோடியை ரஜினிகாந்த் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், ரஜினியை சந்திக்க, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சட்டையை கழற்றி எரித்துவிட்டு, சாலையில் போராடுவோம் என்று போலீசாரிடம் கூறினர்.
பின்பு அனுமதி அளிக்கப்படவே ரஜினியின் உதவியாளரிடம் கடித்தை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், நதிகள் இணைப்பு சாத்தியமாகும் என்றார் நரேந்திர மோடி.
மேலும் இத்திட்டத்திற்கு தன் பங்காக, ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த்.
இதுவரை இரண்டும் நடைபெறவில்லை.
எனவே, விவசாயிகளின் நல்லெண்ண துாதராகச் சென்று, ஒரு மாதத்திற்குள், பிரதமர் மோடியை சந்தித்து, ஒரு கோடி ரூபாயை ரஜினிகாந்த் வழங்க வேண்டும்.
அவர் அதற்கான நிதியை வழங்காவிட்டால், அவர் வீட்டின் முன், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்றார்.