முதன்முறையாக தமிழகத்தில் ‘தல’ சிலை; இன்று திறப்பு விழா

முதன்முறையாக தமிழகத்தில் ‘தல’ சிலை; இன்று திறப்பு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fans launching Ajith Statue at Kumbakonam todayசினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் உழைத்து முன்னேறியவர் நடிகர் அஜித்.

இவரே ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்ற பிறகும், இவருக்கான கூட்டம் நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

திரையுலகில் இன்றுடன் இவர் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

எனவே அஜித் ரசிகர்கள் இதை பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ரசிகர்கள் இன்று அஜித் சிலையை திறந்து வைக்கின்றனர்.

இந்த சிலையை உருவாக்க ரூ. 1 லட்சம் வரை செலவாகியுள்ளதாம்.

20 கிலோ எடையில், 4 அடி உயரத்திற்கு கண்ணாடி இழைகளால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் முன்னிலையில் இன்று இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

Fans launching Ajith Statue at Kumbakonam today

ajith statue

தனுஷின் உதவி முன் உதாரணமாக அமையும்… பிரசன்னா

தனுஷின் உதவி முன் உதாரணமாக அமையும்… பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Prasannaவறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயிகளின் குடும்பத்திற்கு நடிகர் தனுஷ் உதவினார் என்பதை பார்த்தோம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ- 50 ஆயிரம் கொடுத்தார். மேலும் தன்னால் முடிந்தவரை இன்னும் செய்வேன் என உறுதியளிந்திருந்தார்.

இந்நிலையில் தனுஷின் இந்த உதவி குறித்து நடிகர் பிரசன்னா தன் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது….

நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். இது போல் பலரும் உதவி செய்ய இது முன் உதாரணமாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Dhanush help will Inspire many to contribute says Prasanna

Prasanna‏Verified account @Prasanna_actor
God bless @dhanushkraja for his extraordinary gesture to help poor farmers. This will inspire many to contribute. #helpTNfarmers

தல ஸ்பெஷல் நாளில் தளபதி ரசிகர் ஜிவி பிரகாஷ் ட்ரீட்

தல ஸ்பெஷல் நாளில் தளபதி ரசிகர் ஜிவி பிரகாஷ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith gv prakashஅஜித் சினிமாவில் நுழைந்து நாளையோடு (ஆகஸ்ட் 3) 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

எனவே இதனை தல ரசிகர்கள் படு உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் கூட திரையிடப்பட உள்ளன.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தான் நடித்துள்ள நாச்சியார் படத்தின் மோசன் போஸ்டரை நாளை வெளியிடுகிறாராம்.

ஜிவி. பிரகாஷ் தளபதி நடிகரின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாச்சியார் படத்தை பாலா இயக்க, நாயகியாக ஜோதிகா நடித்துள்ளார்.

GV Prakashs Naachiyar motion poster release on 3rd August

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய ஏஆர். ரஹ்மான்-அட்லி.?

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய ஏஆர். ரஹ்மான்-அட்லி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay-atleeவிஜய் என்றாலே உடனே நினைவுக்கு வருவது அவரது டான்ஸ்தான்.

அதுபோல் தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது பாடிவிடுவார்.

எனவே, அட்லி இயக்கத்தில்உருவாகிவரும் மெர்சல் படத்தில் நிச்சயம் விஜய் பாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

காரணம்… மெர்சல் தயாரிப்பாளருக்கு இது 100வது படம்.

மேலும் விஜய்யும் ஏஆர். ரஹ்மானும் சினிமாவில் நுழைந்து தற்போது 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

இத்தனை சிறப்புமிக்க படத்தில் விஜய் தன் சொந்த குரலில் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இப்படத்தில் விஜய் பாட வாய்ப்பை எதுவும் ஏஆர் ரஹ்மான் ஏற்படுத்தவில்லையாம்.

எனவே ரஹ்மான் மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

Vijay doesnot sung any song in Mersal movie

 

ரஜினி-அஜித்துடன் ஓவர்; விஜய்-சிவகார்த்திகேயனுக்காக கருணா வெயிட்டிங்

ரஜினி-அஜித்துடன் ஓவர்; விஜய்-சிவகார்த்திகேயனுக்காக கருணா வெயிட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karunakaranகலகலப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாகரன்.

குறைந்த காலக்கட்டத்திலேயே மளமளவென நிறைய படங்களில் நடித்து விட்டார்.

ரஜினியுடன் லிங்கா, தனுஷ்டன் தொடரி, அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்துவிட்டார்.

மேலும் உப்பு கருவாடு என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார்.

ஆனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பீர்களா? எனக் கேட்டுள்ளார்.

அவருடன் நடிக்க காத்திருக்கிறேன் என ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதனைக் கண்ட சிவகார்த்திகேயன், அது விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

Karunakaran wish to act with Vijay and Sivakarthikeyan

பிக்பாஸ்ல யாரையும் தப்பா பேசாதே… சதீஷுக்கு சிம்பு அட்வைஸ்

பிக்பாஸ்ல யாரையும் தப்பா பேசாதே… சதீஷுக்கு சிம்பு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dancer sathishதமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களை அல்லது பேசாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போலிக்கிறது.

அந்தளவிற்கு நிகழ்ச்சி பாப்புலாராகிவிட்டது.

மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த நிகழ்ச்சி பற்றி தங்களை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகைகள் ஸ்ரீபிரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் ரோபோ சங்கர், நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ், ஓவியா ஆதரிக்கும் வேளையில் மற்ற போட்டியாளர்களை ஏதாவது சொல்லி கமெண்ட் செய்து வருகிறார்.

முக்கியமாக ஜீலியை திட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதனை பார்த்த சிம்பு சதீஷுக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார்.

யாரையும் தவறாக பேச வேண்டாம். நமக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

கண்டிப்பாக தவறுகளை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.

Dont scold anybody in Bigg Boss show Simbu advice to Dancer Sathish

More Articles
Follows