துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்..; காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்

Ajith (2)கடந்த வாரம் நடிகர் அஜித் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைஃபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி புதிய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அந்த போட்டோக்களையும் அந்த வீடியோக்களையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித் மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக இன்று காலை பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்கு (வாடகை காரில்) வந்தார்.

அப்போது அங்கு எஸ்.ஐ. தேர்வுக்கான நேர்முக தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்ள வந்த நபர்கள் அஜித்தை பார்க்க திரண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அருகே இருந்த ரசிகர்கள் பலரும் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அஜித்துடன் செஃல்பி எடுக்க நீண்ட நேரமாக ரசிகர்கள் காத்திருந்தனர்.

சுமார் 3 மணி நேரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார் நடிகர் அஜித்.

அதன் பின்னர் வெளியே வந்து ரசிகர்களிடம் கை அசைத்து காரில் ஏறி சென்றுவிட்டார் அஜித்.

நீண்ட நேரமாக காத்திருந்தும் அஜித்துடன் செர்ஃபி எடுக்க முடியாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Fans disappoints over ajith’s reaction

Overall Rating : Not available

Latest Post