ஒரே திரையில் ஒன்றாக தோன்றும் கமல்ஹாசன்-சல்மான்கான்

ஒரே திரையில் ஒன்றாக தோன்றும் கமல்ஹாசன்-சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and salman khanகமல் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதன் ஹிந்தி உரிமையை இயக்குனர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளனர்.

எனவே இப்பட தொடர்பான புரமோஷன் பணிகளில் தற்போது இறங்கி இருக்கிறார் கமல்.

இதனையடுத்து சல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்’ என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன்.

ஒரே திரையில் இருவரும் ஒன்றாக தோன்ற இருப்பது இதுவே முதன் முறையாகும்.

நான் போலி பகுத்தறிவாளனா..? தமிழிசைக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பதிலடி

நான் போலி பகுத்தறிவாளனா..? தமிழிசைக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal reaction to Tamilisai Soundararajans complaint on Duplicate atheistபா.ஜ.கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நடிகர் கமல்ஹாசன் குறித்து கூறும்போது…

அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பித்தார் கமல். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார்.

ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். அப்படி பேசி போலி வே‌ஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது…

லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது. ஒரே நேரத்தில் சட்ட மன்ற, நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது.

என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன் தான்.

ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்பது ஒரு கூக்குரல். அது அவர்களாவே சொல்கிறார்கள்.

இனி என் தொண்டர்கள் அவ்வாறு அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’ என்றார்.

நடிகர் கமல்ஹாசனின் வீடு முதலில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருந்தது.

மேலும் தான் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா என்ற பாடலில் பாடி ஆடினார்.

இதனையடுத்து கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என அழைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal reaction to Tamilisai Soundararajans complaint on Duplicate atheist

ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் இரவில் கதை சொன்ன பரத் நீலகண்டன்

ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் இரவில் கதை சொன்ன பரத் நீலகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shraddha Srinath to romance with Arulnith for Bharath Neelakandans movieஇவன் தந்திரன், விக்ரம் வேதா, உள்ளிட்ட படங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எஸ்.பி.சினிமா சார்பில் சங்கர் தயாரிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார்.

பரத் நீலகண்டன் இயக்குகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

படம் பற்றி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:

வழக்கமாக, இரவில் கதை கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் கதை சொல்ல டைரக்டர் பெங்களூர் வந்தார்.

இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். மிகவும் பிடித்தது. நடிக்க ஒப்புக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Shraddha Srinath to romance with Arulnith for Bharath Neelakandans movie

சித்தார்த்-கேத்ரீன் தெரசா நடிக்கும் பட சூட்டிங் தொடங்கியது

சித்தார்த்-கேத்ரீன் தெரசா நடிக்கும் பட சூட்டிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trident Arts Production No 3 Shoot Kick started in Chennaiசித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை சாய் சேகர் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தை ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக மோதவிருக்கிறார்.

முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்து சாய்சேகர் கூறியதாவது…

“முழுக்க முழுக்க நகரப் பின்னணியில் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் காதல், ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்க உள்ளோம்.

இந்தப் படத்தில் முதற்கட்டமாக 10 நாள் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்.இதில் ஹிரோயின் கேத்ரின் தெரசா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும்.” என்றார்.

Trident Arts Production No 3 Shoot Kick started in Chennai

Trident Arts Production No 3 movie pooja stills

BREAKING : விஜய்சேதுபதியை பாராட்டி சிம்புவை தாக்கிய ராபர்ட் மாஸ்டர்

BREAKING : விஜய்சேதுபதியை பாராட்டி சிம்புவை தாக்கிய ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

robert masterநடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ள படம் “ஒண்டிக்கு ஒண்டி”.

ஜேஎம் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

சற்றுமுன் இப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பேரரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் ராபர்ட் பேசும்போது…

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் பழக்கமே இல்லை. ஆனால் அழைத்த உடன் அவர் வந்து விட்டார்.

ஆனால் நன்கு பழக்கமான ஒருவர் (சிம்பு) அழைத்தும் வரவில்லை.

ஒருவேளை நான் அந்த அளவுக்கு வரவில்லை என நினைக்கிறார் போல.

ஆனால் சந்தானம் அழைத்தால் அவர் செல்கிறார். ஒருவேளை அவர் அந்த உயரத்திற்கு வந்து விட்டார் என நினைக்கிறார் போல…

ஒரு நாள் எனக் கும் வருவார். நானும் முன்னேறுவேன்.”

எனப் பேசினார்.

Exclusive சுதந்திர தினத்தன்று சூப்பர் ஸ்டாரின் 2.0 பட டீசர் வெளியீடு

Exclusive சுதந்திர தினத்தன்று சூப்பர் ஸ்டாரின் 2.0 பட டீசர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar plans to release 2point0 Teaser on 15th August 2018லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் இணைந்துள்ள படம் 2.0.

ரூ. 500 கோடியில் தயாராகும் இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளார் ஷங்கர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு மேலாக இதன் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்ற நிலையில் இப்படத்தை இந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 29ல் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்தார் ஷங்கர்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்ளுக்கு பெரும் விருந்தாக வருகிற சுதந்திர தினத்தன்று 2.0 பட டீசரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

Shankar plans to release 2point0 Teaser on 15th August 2018

More Articles
Follows