தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குனர் சித்திக் இஸ்மாயில்.
இவர் மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன படங்களை தமிழில் ரீமேக் செய்து இயக்கி உள்ளார்.
விஜய், சூர்யா, வடிவேலு, தேவயாணி் இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளை இன்றளவும் நம்மால் மறக்க முடியாது.
அதே போல விஜயகாந்த், வடிவேலு நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தையும் இவரே தமிழ் இயக்கி இருந்தார். இந்த படத்திலும் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தன.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துக் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வயது 69 ஆகிறது.
கூடுதல் தகவல்கள்…
1989 ஆம் ஆண்டில் முதல் மலையாள படத்தை இயக்கினார். 1984 ஆம் ஆண்டு சஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார் இந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
2010 ஆம் ஆண்டில் மலையாளத்தில் திலீப் & நயன்தாரா நடித்த ‘பாடிகாட்’ என்ற படத்தை இயக்கினார். இதன் பின்னர் இதே படத்தை தமிழில் விஜய்யை வைத்து ‘காவலன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
அதன் பின்னர் ஹிந்தியில் 2011 ஆண்டில் ஹிந்தியில் சல்மான் கான் நடித்த பாடிகாட் என்ற படத்தையும் இயக்கி பாலிவுட்டில் நுழைந்தவர் சித்திக்.
2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் மம்முட்டி நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.
இதே படத்தை தான் தமிழில் அரவிந்தசாமி மற்றும் அமலாபால் நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இந்த படம் தமிழில் 2018 ஆம் ஆண்டில் வெளியானது.
இவர் மலையாளத்தில் இயக்கிய பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மோகன்லால் வைத்து பிக் பிரதர் என்ற படத்தை இறுதியாக இயக்கி இருந்தார்.
Director Siddique hospitalised following heart attack