பெற்றோரே உலகம்.. சினிமாவே உயிர்.; நடிகைகளின் குரல் ரவீனா ரவி அறிக்கை

பெற்றோரே உலகம்.. சினிமாவே உயிர்.; நடிகைகளின் குரல் ரவீனா ரவி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் திரையில் பல முன்னணி நடிகைகளின் நடிப்பையும் அழகையும் பார்த்து ரசித்தாலும் அந்த நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் டப்பிங் கலைஞர்தான்.

இப்படியாக தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் ரவீனா ரவி. பல முன்னணி நடிகைகளுக்கு இவரே குரல் கொடுத்து வருகிறார்.

மேலும் நிறைய படங்களில் கதையின் நாயகியாகவும் நடத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான ராக்கி வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தன் சினிமா பயணம் குறித்து நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அனைவருக்கும் வணக்கம் ,

இந்த செப்டம்பர் 2022

திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கலைஞராக என் பத்து வருடங்கள் நிறைவடைகிறது…
இந்த திரை பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற கடமை பட்டிருக்கிறேன்..

ரவீனா ரவி

கடவுளுக்கு என் முதற்கண் நன்றி

சிறுவயதுமுதல் இன்று வரை எல்லா படிகளிலும் எனக்கு துணை நிற்கும் பெற்றோரின் அளவுகடந்த அன்பிற்கு நன்றி…என்னை எப்போதும் ஊக்குவிக்கும் என் தந்தை இன்று என்னோடு இல்லை…ஆனால் என்மீது எல்லையற்ற பெருமிதம் கொள்வார் என நம்புகிறேன்..

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள்…என் அம்மாவே என் குரு , ஸ்ரீஜா ரவி அவர்கள்..இன்று வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்ததுடன் , ஐந்து மாநில விருதுகள் பெற்று நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையிலிருக்கிறார்..
என் உயிர், என் உலகம் எல்லாமே என் பெற்றோர் ரவீந்திரநாதன் மற்றும் ஸ்ரீஜா ரவி அவர்கள் தான்..

என் நண்பர்கள் , என் உற்றார் உறவினர்கள் , என் மீது அன்புள்ளம் கொண்டு துணைநிற்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்… இது தொடரும் என நம்புகிறேன்..

இதுவரை 104 இயக்குனர்களிடம் நான் பணிபுரிந்திருக்கிறேன்…அவர்கள் அத்தனை பேரும் ஒரு கலைஞராக என்னை மேம்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறார்கள்…

ரவீனா ரவி

நான் பணியாற்றிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் , உதவி இயக்குனர்களுக்கும் , ஒளிப்பதிவு கலைஞர்களுக்கும் , ஒலிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்… என் பயணத்தில் அவர்கள் பங்களிப்பு ஈடுஇணையற்றது…

இந்த நன்றி மடல் நான் குரல் கொடுத்த கதாநாயகிகளுக்கு நன்றி கூறாமல் நிறைவடையாது…வெள்ளிதிரையில் அவர்கள் குரலாக ஒலிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை…

ஒவ்வொரு திரைப்படத்தின் வாய்ப்பு வரும்பொழுதும் அதை எனக்கு தெரியப்படுத்தும் பின்னணி குரல் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த தருணத்தில் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
இரண்டு வயதில் தொடங்கிய இந்த பயணத்தின் மிகப்பெரிய தூண்
“SICTADAU” சங்கம்

ஊடக நண்பர்கள் அளித்த தொடர் ஆதரவு ஒரு நடிகையாகவும் நான் வெள்ளித்திரையில் தோன்ற உறுதுணையாக நின்றது..

அதோடு சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி…உங்கள் பாராட்டுக்களும் விமர்சனங்களும் என்னை மெருகேற்றிக்கொள்ள துணை நிற்கிறது…
நன்றி நன்றி நன்றி நெஞ்சார்ந்த நன்றி

பின்னணி குரல் அளிப்பதில் ஆத்ம திருப்தி…என் மனதிற்கு நெருக்கமான இந்த தொழிலை தொடர்ந்து செய்ய உங்கள் ஆதரவே முக்கியமான காரணம்… எனக்கு மட்டுமில்லை செய்யும் தொழிலிற்கு உண்மையாக இருந்தால் எல்லோருக்கும் கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைத்தே தீரும்…

இப்படிக்கு
ரவீனா ரவி
நடிகை – டப்பிங் கலைஞர்

ரவீனா ரவி

Dubbing Artist Actress Raveena Ravi thanks note

‘சொப்பன சுந்தரி’ சூட்டிங்கை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

‘சொப்பன சுந்தரி’ சூட்டிங்கை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.

சொப்பன சுந்தரி

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள பாடல்களை அஜ்மல் இசையமைத்திருக்கிறார்.

டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

சொப்பன சுந்தரி

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொப்பன சுந்தரி

Aishwarya Rajesh completes Soppana Sundari movie shoot

வெந்து தணிந்தது காடு.. போட்டோஸுக்கு சபாஷ் போடு.; STR படத்தில் COOL SURESH

வெந்து தணிந்தது காடு.. போட்டோஸுக்கு சபாஷ் போடு.; STR படத்தில் COOL SURESH

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்ன சின்ன கேரக்டர்கள் தான் என்றாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கூல் சுரேஷ்.

இவர் பல படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்திற்கு இவர் செய்த பிரமோஷன் பெரிய அளவில் மக்களிடையே ரீச் ஆனது.

சிம்புவின் தீவிர ரசிகரான இவர் எந்த ஒரு வார்த்தையை பேசினாலும் ‘வெந்து தணிந்தது காடு.. என சொல்லி வணக்கத்தை போடு” என்றே சொல்லுவார்.

இவரின் ப்ரோமோஷனை கண்டு இந்த படக்குழுவினர் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கூல் சுரேஷ் வித்தியாசமான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த போட்டோ சூட்-க்கு எஸ் டி ஆர் என்று பெயரிட்டுள்ளார்.

அதாவது SureshTakingRevenge.

இந்த போட்டோக்கள் தற்போது வைரல் ஆகியுள்ளது.

ஒருவேளை கூல் சுரேஷ் ஏதாவது படத்தில் நாயகனாக நடிக்க உள்ளாரா ?

YoutubeNayagan Cool Sureshs STR New Dimension

#SureshTakingRevenge

Concept, Styling & Direction @njsatz
Outfit #SagoBridalStudio

#Thivakar #NJStudio @babu4love #MobyAntony #ArunsamPhotography @onlynikil https://t.co/I8X1J3RXqz

பார்வையற்றவர்களுடன் VTK படம் பார்த்து சிலிர்க்க வைத்த சிலம்பரசன்

பார்வையற்றவர்களுடன் VTK படம் பார்த்து சிலிர்க்க வைத்த சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் அப்புகுட்டி சித்தி இதானி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சிம்புவின் உடல் எடை குறைப்பு வித்தியாசமான நடிப்பு.. கௌதம் மேனனின் வித்தியாசமான படைப்பு என ரசிகர்களை இந்த படம் கவர்ந்திருந்தது.

முக்கியமாக ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் கண் பார்வையற்றவர்களுக்காக இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகர் சிலம்பரசன் கலந்து கொண்டு பார்வையற்றவர்களுடன் படம் பார்த்தார்.

பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னணி ஹீரோக்கள் வருவதில்லை.

ஆனால் சிம்பு வந்து அமர்ந்திருந்து பார்வையற்ற ரசிகருடன் படம் பார்த்தது அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 காலகட்டம்.. 3 நாயகிகள்.. ஒரே ஒரு ஹீரோ.; ‘நித்தம் ஒரு வானம்’ என்ன சொல்லும்?

3 காலகட்டம்.. 3 நாயகிகள்.. ஒரே ஒரு ஹீரோ.; ‘நித்தம் ஒரு வானம்’ என்ன சொல்லும்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் ‘நித்தம் ஒரு வானம்’.

இந்த திரைப்படம் நல்ல உணர்வை தரக்கூடிய ஒரு பயண படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. Ra. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், Viacom 18 ஸ்டுடியோஸ்ஸூடன் இணைந்து தயாரித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் பேசுகையில்…

“நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். ‘நித்தம் ஒரு வானம்’ நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும்.

மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் நிறைய கதாநாயகிகள் இருந்தாலும் , இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் ‘நித்தம் ஒரு வானம்’ இருக்கும்.

அசோக்செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகிகளான ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜ்சேகர் மூவருக்கும் சமமான கதாபாத்திரம் கதையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூவரும் அதை சிறப்பாக செய்துள்ளனர்.

இவர்களது கதாபாத்திரம் அனைத்து வயதில் உள்ள பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

மேலும் இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசுகையில்…

“நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும்.

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுச் சுவருக்குள் அடைந்து கிடக்கும் நமக்கு ஃபீல் குட் படங்கள் பெரும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ‘நித்தம் ஒரு வான’த்தை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் உற்சாகமாக.

‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் மூன்று வித்தியாசமான காலக்கட்டம் மற்றும் நிலப்பரப்புகளில் அதாவது சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசையமைப்பாளர்: கோபி சுந்தர்,
ஒளிப்பதிவு: விது அய்யனா,
எடிட்டிங்: ஆண்டனி,
கலை: கமல் நாதன்,
பாடலாசிரியர்: கிருத்திகா நெல்சன்,
நடன இயக்குநர்: லீலாவதி குமார்,
நிர்வாகத் தயாரிப்பு: S. வினோத் குமார்,
ஒலிக்கலவை: T. உதயகுமார்,
உடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்,
சண்டை பயிற்சி: விக்கி,
படங்கள்: ஷேக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One),
விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா,
ப்ரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன்,
நிர்வாகக் கட்டுப்பாடு: மோகன் கணேசன்,
விஷூவல் புரோமோஷன்ஸ்: Feed Of Wolf

‘பொன்னியின் செல்வன்’ உடன் போட்டியா.? தனுஷ் படத்திற்கு இந்த நிலைமையா.? ரசிகர்கள் டென்ஷன்

‘பொன்னியின் செல்வன்’ உடன் போட்டியா.? தனுஷ் படத்திற்கு இந்த நிலைமையா.? ரசிகர்கள் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற வாரம் செப்டம்பர் 30 உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் 5 மொழிகளில் வெளியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி திரிஷா ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கும் சென்று படத்தை பிரமோட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் வெளியாவதற்கு முந்தைய நாள் செப்டம்பர் 29 இல் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வில்லன் ஹீரோ என இரு வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ்.

செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய இடத்தில் நடித்துள்ளார். யுவன் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

பொதுவாகவே தாணு படங்கள் என்றால் ப்ரமோஷன் வேற லெவலில் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் ‘நானே வருவேன்’ படத்திற்கு இதுவரை எந்த ஒரு பெரிய விழாவும் நடைபெறவில்லை.

மேலும் படம் தொடர்பாக பிரஸ்மீட் இசை வெளியீட்டு விழா என எதுவும் நடைபெறவில்லை என்பதால் தனுஷ் ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

More Articles
Follows