EXCLUSIVE ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்ற நடிகை ரவீனா ரவி

EXCLUSIVE ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்ற நடிகை ரவீனா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டப்பிங் கலைஞர் நடிகை என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா ரவி.

சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ரவீனா ரவியின் நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சந்மோஷம் விருது என்ற நிகழ்ச்சியில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார் நடிகை ரவீனா ரவி.

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் என்ற விருதை ராக்கி படத்திற்காக பெற்றுள்ளார்.

மேலும் 2022 ஆண்டிற்கான சிறந்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் என்ற விருதை ‘லவ் டுடே’ படத்திற்காக பெற்றுள்ளார்

ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்றுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் ரவீனா.

மேலும் இதே மேடையில் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை லவ் டுடே படத்தில் உள்ள பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீனா ரவி

Raveena Ravi received two awards at Santhosam awards event

சமூகத்துடன் ஒன்ற முடியாதவர்களுக்கு விடியல் தரும் ‘தமிழ்க்குடிமகன்’.; இயக்குனருக்கு சேரன் பாராட்டு

சமூகத்துடன் ஒன்ற முடியாதவர்களுக்கு விடியல் தரும் ‘தமிழ்க்குடிமகன்’.; இயக்குனருக்கு சேரன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து பல்வேறு தரப்பினர் இடமிருந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது, “இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை உடைப்பதற்காக தனி மனிதனாக போராடும் ஒருவனை பற்றிய கதைதான் இது. குலத்தொழில் முறையை இன்று ஒழித்து விட்டோம். ஆனால் அதை மையப்படுத்தி உருவான சாதியை இதுவரை ஏன் ஒழிக்க முடியவில்லை?

ஒவ்வொருவரும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையிலேயே தான் சாதி உருவானது. தொழில் ‘சார்ந்து’ உருவானதால் தான் அதற்கு சாதி என்ற பெயரே வந்தது. அதுகுறித்த புரிதல் இங்கே பலருக்கும் இல்லை. இப்போது பலரும் தாங்கள் செய்து வந்த தொழிலில் இருந்து வேறுவேறு தொழிலுக்கு மாறி விட்டனர். அதனால் அவர்களை இதற்குமுன் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்த சாதியை வைத்து அழைக்க வேண்டிய தேவை இல்லை.

அதற்கு பதிலாக சாதி என்கிற இடத்தில் தமிழ்க்குடிமகன் என குறிப்பிட வேண்டும். இப்படி செய்யும்போது குறிப்பிடத்தக்க இடைவெளியில் சாதியை முழுமையாக அழித்து விடலாம். சாதி என்கிற வார்த்தை என்னை அழுத்துகிறது, அதனால் சமூகத்துடன் ஒன்றி வாழ முடியவில்லை என்று பலரும் குமுறுகிறார்கள்.

அதற்கு ஒரு விடிவு தரும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. குறிப்பாக உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் கதையாலும் பாடல்களாலும் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது வி ஹெச் மியூசிக் சார்பாக இந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குநர் சேரனின் ஒத்துழைப்பு மிக அபரிமிதமானது. இந்த படத்தில் நடிக்கும்போது அவர் என்னிடம் இந்த சாதிய அமைப்பை உடைக்க முடியவில்லை. ஆனால் இந்தப்படம் அதை உடைக்கும் விதமாக இருக்கிறது என்று நெகிழ்ந்து போய் பாராட்டினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் படத்தை வெளியிடும் திட்டம் இருக்கிறது” என்கிறார் இசக்கி கார்வண்ணன்.

*நடிகர்கள்* ; சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர்.

*தொழில்நுட்ப கலைஞர்கள்*

எழுத்து-இயக்கம்: இசக்கி கார்வண்ண

இசை: சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்

படத்தொகுப்பு: கார்த்திக்

கலை: வீரசமர்

நடனம்: தினேஷ்

சண்டை பயிற்சி: சக்தி சரவணன்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

தமிழ்க்குடிமகன்

Cheran talks about story line of Tamilkkudimagan

-@directorcheran says Dir @esakkikarvanna5 has rightly conveyed the message that I wanted to & he shares my thoughts for the society

ICYMI the #Tamilkkudimagan Teaser ▶️https://youtu.be/gfpSbRacy1o

@Dir_SAC @PriyajoOfficial @deepshikhaoffi @actordhruvva @LalDirector @r_stills

.@rajeshyadavdop @SamCSmusic @srkarthik07 @Veerasamar @dineshashok_13 @VHouseProd_Offl @onlynikil

JUST IN உஸ்பெகிஸ்தான் நாட்டில் பர்ஸ்ட் டைம் எனக்கு..; ‘ராங்கி’ மீட்டிங்கில் த்ரிஷா பேச்சு

JUST IN உஸ்பெகிஸ்தான் நாட்டில் பர்ஸ்ட் டைம் எனக்கு..; ‘ராங்கி’ மீட்டிங்கில் த்ரிஷா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் திரிஷா பேசியதாவது…

“இந்த படம் ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த படம். அதற்காக என்னை தேர்வு செய்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி.

படத்தின் பாதி வெற்றிக்கு இசை தான் முக்கியம். இதில் இசை சிறப்பாக வந்துள்ளது.

நான் படத்தை சில தினங்களுக்கு முன் பார்த்தேன். படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளும் அருமையாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் முக்கியமான காட்சிகளை உஸ்பெகிஸ்தான் நாட்டில் பாடமாக்கினோம். நான் அங்கே செல்வது இதுதான் முதல் முறை. நாங்கள் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் பேசுவது எங்களுக்கு புரியவில்லை.

பின்னர் புரிந்து கொண்டு காட்சிகளை பாடமாக்கினோம்.. முக்கியமாக மிலிட்டரி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் சரவணன் துப்பாக்கி முதல் அனைத்துமே ரியலாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

எனவே அதன்படி தான் மிலிட்டரியின் துணை கொண்டு காட்சிகளை படமாக்கினோம்.

இது ஆக்ஷன் படம் என்றாலும் நம்பும் படியாக ஆக்ஷன் காட்சிகளே இருக்கு. நாங்கள் என்னதான் அதிகப்படியான உழைப்பை கொடுத்திருந்தாலும் இந்த படத்தின் வெற்றி ரசிகர்கள் கையில் தான் உள்ளது.

டிசம்பர் 30-ஆம் தேதி இந்த படம் தியேட்டர் வெளியாகிறது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்” என்று பேசினார் நடிகை திரிஷா.

ராங்கி

Trisha open talk at Raangi Press meet

தென்காசியில் அஜித்… தெறிக்க விட்ட ரசிகர்கள்..; ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

தென்காசியில் அஜித்… தெறிக்க விட்ட ரசிகர்கள்..; ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் என்பதையும் தாண்டி பைக் ரேசர், போட்டோகிராபர், சமையல் கலைஞர், பைலட், கார் ரேஸர், துப்பாக்கி சுடுதல் வீரர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அஜித்.

இவர் தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பைக்கில் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.

இந்தியாவிலும் சில வெளிநாடுகளிலும் சமீபத்தில் சுற்று பயணம் செய்தார். அந்த வீடியோக்கள் வைரலானது.

இந்த நிலையில் தென்காசியில் நடிகர் அஜித் பைக்கில் பயணிப்பதாக ஒரு வீடியோ வைரலானது.

இதனை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்தனர். ஆனால் அந்த பைக்கில் பயணம் செய்ததது அஜித் அல்ல என் தெரிய வந்துள்ள நிலையில் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Did Actor Ajith travelled in bike at Tenkasi roads

த்ரிஷாவின் ‘ராங்கி’ பட ஓடிடி & டிஜிட்டல் உரிமை அப்டேட்டை வெளியிட்டது லைகா

த்ரிஷாவின் ‘ராங்கி’ பட ஓடிடி & டிஜிட்டல் உரிமை அப்டேட்டை வெளியிட்டது லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

இதன் திரைக்கதையை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத எம் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சி எஸ் சத்யா இசையமைக்க சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ராங்கி படத்தின் ஓடிடி உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை பெற்ற நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனமும் சேட்டிலைட் டிஜிட்டல் உரிமையை சன் டிவியும் பெற்றுள்ளதாக அறிவித்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ராங்கி

RAANGI Satellite & Digital rights have been acquired by SunTV & sunnxt respectively!

‘வாரிசு’ தயாரிப்பாளர் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

‘வாரிசு’ தயாரிப்பாளர் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன்-தில் ராஜு படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரைப்பட தயாரிப்பாளர் இதற்கு முன்பு பவன் கல்யாண் (கப்பர் சிங்), அல்லு அர்ஜுன் (துவ்வாடா ஜெகநாதம்) ஆகியோருடன் சூப்பர்ஹிட்களை வழங்கியுள்ளார்.

மேலும் தற்போது பவன் கல்யாணை ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் இயக்கி வருகிறார்.

தமிழ்/தெலுங்கு இருமொழித் திரைப்படமாக பிப்ரவரி 2023 இல் திரைக்கு வரும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Sivakarthikeyan signs new movie with ‘Varisu’ producer Dil Raju

More Articles
Follows