கமல் ரஜினி விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவரும் ஜாகுவார் தங்கத்தின் மாமனாருமான டி.எஸ்.ராஜா காலமானார்

கமல் ரஜினி விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவரும் ஜாகுவார் தங்கத்தின் மாமனாருமான டி.எஸ்.ராஜா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் , சண்டைக் கலைஞரும், எம்.ஜி.ஆர். நகர் தி.மு.கவின் முன்னாள் வட்ட செயலாளருமான டி. எஸ்.ராஜா (வயது 88) உடல்நல குறைவால் இன்று காலை காலமானார்.

டி.எஸ். ராஜா பற்றிய குறிப்பு :- இவர்,காலம் சென்ற எம்.ஜி.ஆர்.அவர்களிடம் நீண்ட காலம் உடனிருந்தவர்.

கமல் , ரஜினி, விஜய், படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவர்.

என்.டி.ஆர். அமிதாப், ஜித்தேந்திரா, தர்மேந்திரா, பிரான். ரஞ்சித் ஆகியோருக்கு டூப் கலைஞராகவும் நடித்தவர்.

கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் அன்பு பாராட்டியவர்.

சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரின் 113வது வட்ட தி.மு.க.செயலாளராகவும் இருந்தவர்.

ஸ்டண்ட் யூனியன் துவக்குவதற்கு முனைப்பாக செயல்பட்டவர்.

ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியன் துவக்கிய முன்னோடிகளில் இவர் முதன்மையாக செயல்பட்டவர்.

அதிக திரைப்படங்களில் நடித்தவர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 வருடங்கள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் ( பெப்சி) செயலாளராகவும் இருந்தவர்.

நடிகரும், தயாரிப்பாளரும், கில்டு தலைவருமான ஜாகுவார் தங்கத்தின் மாமனரான இவரது இறுதி சடங்கு இன்று (30.6.2022 வியாழன்) மாலை 4 மணிக்கு
எண்:- 67,
அழகிரி தெரு
எம்.ஜி.ஆர்.நகர்
சென்னை 600078ல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

பின்னர்
நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 ஆண்டுகள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய சங்க முன்னோடியும், எம்.ஜி.ஆர். நகர் தி. மு.க. முன்னாள் வட்ட செயலாளரும், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் அவர்களின் மாமனாருமான மூத்த நடிகர், சண்டைக் கலைஞர் டி.எஸ்.ராஜா அவர்கள் இன்று காலை காலமானார்.

அவரது உடலுக்கு திமுக தலைமை நிலைய செயலாளரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரும் திமுக செயற்குழு உறுப்பினருமான க. தனசேகரன் உடன் இருந்தார்.

DS Raja father-in-law of Jaguar Thangam who played stunt actor in Kamal Rajini Vijay films has passed away

‘ஆரிராரோ…’ பாடல் பாடிய யேசுதாஸையே அழவைத்த ‘ஜோதி’ பட இசையமைப்பாளர்

‘ஆரிராரோ…’ பாடல் பாடிய யேசுதாஸையே அழவைத்த ‘ஜோதி’ பட இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக Radio City FMல் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை DSP அய்யா, காவல் துறைக்கே சவாலான கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை திருட்டை வைத்து, அதை முழுநீள திரைப்படமாக எடுத்ததிற்கு படக்குழுவினரை மிகவும் பாராட்டி மேலும் இதுபோன்ற உண்மை சம்பவங்களை சமூக விழிப்புணர்வுக்காக மேலும் பலபடங்கள் எடுக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியின்போது இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது…

“சென்ற வாரம் “போவதெங்கே” என்ற காதல் பாடல் வெளியானது.

அதை தொடர்ந்து “ஆரிராரோ” என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம்.

இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது.

குழந்தைகளை பெற்ற அப்பாக்களும், அப்பாக்களை போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்ப திரும்ப கேட்க கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்சனைக்கு தீர்வாகவும், ரொம்ப எமோஷனலாகவும், திரில்லராகவும் வந்திருக்கிறது.

முன்காண் காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் கண்கலங்கி இப்படியொரு படம் வருவது பெரியவிசியம் என பாராட்டினர். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு நிச்சயம் வெற்றி பெரும்” என கூறினார்.

இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்” கூறியதாவது…

“இதுவரைக்கும் நான் மியூசிக் பண்ண படங்கள் எல்லாத்துக்கும் பின்னணி இசை மட்டுந்தான் பண்ணிருக்கேன். முதன்முறையாக ஜோதி படத்துலதான் பின்னணி இசையோடு சேர்த்து முழு ஆல்பம் பண்ணிருக்கேன்.

முதலில் பாடலே இல்லாமல்தான் படம் என்னிடம் வந்தது. படத்தை பார்த்தபின் இயக்குனர் மிகவும் உணர்வுபூர்வமாக படத்தை எடுத்திருக்கிறார் என்று எண்ணினேன். அந்த உணர்வை சிலவற்றை பாடல் மூலம் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து சொன்னேன்.

தயாரிப்பாளரும் செலவை பொருட்படுத்தாமல் ஒத்துக்கிட்டார். அனைத்து பாடலுக்கும் லைவ் எடுத்தோம், கிளைமேக்ஸ்ல வரும் பாடலை யேசுதாஸ்சார் பாடியிருக்கார்.

பாடும்போது அவருக்கே கண்கலங்கிவிட்டது, பாடல் ரொம்ப நல்லா இருக்கு, நீண்ட நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் பாடியிருக்கேன்னு சொன்னாரு. அவர் அப்படி சொன்னது எங்களுக்கு வரபிரசாதமாக அமைஞ்சிருக்கு.

அந்த பாடலுக்கு ட்யூன் போடும்போது எனக்கே மனசு ஒருமாதிரி ஆயிடுச்சி.அதன் தாக்கம் அப்படியே இருந்தது, அதுல இருந்து மீண்டு வரதுக்கே ரொம்ப நாளாச்சி” என கூறினார்.

நடிகர் “வெற்றி” கூறியதாவது….

“இந்தப் படம் 8 தோட்டாக்கள் படத்தின் நீட்சி என்றே சொல்லலாம். காரணம், அந்த படத்துல என் பொருளான துப்பாக்கியை தொலைத்துவிட்டு அதை கண்டுபிடிக்க தேடி அலைவேன்.

இந்த படத்துல ஒரு கர்ப்பிணி பெண்ணிடமிருந்து திருடப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க தேடி அலைவேன்.

இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் கேட்டவுடன் ஸ்கிரிப்ட் நல்லாருக்கு, ஆனா புது teamமா இருக்கு எப்படி பண்ணபோறாங்கனு நெனைச்சேன், சூட்டிங் ஸ்பாட்டுக்குபோய் அவுங்க மேக்கிங் ஸ்டைலை பார்த்ததும் மிரண்டுவிட்டேன்.

ரொம்ப experience டீம்ன்னு தெரிஞ்சிது. டீம் மேல முழு நம்பிக்கை வந்துடுச்சி. முப்பது நாள் இரவு பகலா ஒரே SCHEDULE லில் எடுத்து முடித்துவிட்டனர். அதுலாம் டீமோட ஆசாத்தியமான விசியம். தயாரிப்பாளர் அனுப்பிய ஆடியன்ஸ் review வீடியோவை பார்த்தேன் .

நா நெனைச்ச மாதிரியே படம் நல்லா வந்திருக்கு. இந்த படம் பட்டித்தொட்டியெங்கும் சென்று எனக்கு தாய்மார்களின் அன்பை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்.” என கூறினார்.

பாடலாசிரியர் “கார்த்தி நேத்தா” கூறியதாவது…

“முதன் முதலில் இயக்குனர் என்னிடம் கதையை சொன்னவுடனே நான் மிரண்டுவிட்டேன். அவர் சொன்ன அதே உணர்வில் எனக்கு மெட்டுகளும் வந்ததால் பத்தே நிமிடத்தில் பாடலை எழுதி முடித்துவிட்டேன்.

இந்த படத்துல மூனு பாடலை எழுதியிருக்கிறேன். இந்த “ஆரிராரோ” பாடலில் வரும் அப்பா கதாப்பாத்திரம் போன்றுதான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

இந்த பாடலை எழுத கொடுத்த நேரத்தில் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமாகி இருந்தது. அந்த நேரத்தில் என் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இப்பாட்டின் சூழல் இருந்ததால் என் குழந்தைக்கு எழுதுவதாகவே நினைத்து இப்பாடலை எழுதினேன். மிகவும் அழகாகவும், ஆழமான வரிகளாகவும் வந்துள்ளது.” என கூறினார்.

தயாரிப்பாளர் “SPராஜாசேதுபதி” கூறியதாவது…

“எனது சொந்த ஊரான கடலூரில் நடந்த உண்மை சம்பவந்தான் இந்த படத்தின் கரு. அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தையும், இதன் பின்னணியும் ஆராயும்போது மனசு ரொம்ப பாதிச்சிது. திரைப்படக் கல்லூரியில் படித்த AV கிருஷ்ண பரமாத்மா எமோஷனல் சார்ந்த ஸ்கிரிப்டை சிறப்பாக handle பண்ணுவார்.

அவரு இயக்கிய குறும்படத்தில் அதை பாத்திருக்கேன். அதனால் இந்த சம்பவத்தை படமாக்க இவர் சரியாக என்று நம்பினேன். DSP சாந்தி அவர்களை சந்தித்து இதை சார்ந்த தரவுகளை ஆராய்ந்து விறுவிறுவென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் என்ன விறுவிறுப்பு இருந்ததோ அதே விறுவிறுப்பை கமர்ஷியலாக முழுநீள திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்காண் காட்சியில் படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் அப்படியே சென்றடைந்திருக்கிறது. இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

நான் படத்தொகுப்பாளராக பணியாற்றிய முதல் படம் சதுரங்க வேட்டை படத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கோள் காட்டி ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதனால் இதுபோன்று சமூக பிரச்சனை சார்ந்த படங்கள்தான் எடுக்க வேண்டும் என தீர்க்கமாக இருந்த எனக்கு பார்வையாளர்கள் இப்படி சொன்னது எனக்கு மனநிறைவளிக்கிறது.

‘ஜோதி” படம் வரும் ஜூலையில் வெளியாக இருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையரங்குகளில் பார்த்து எங்களுக்கு பேராதரவு கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

2nd Single Aariraaro https://youtu.be/f5dB4Lubwuc

ஆரிராரோ

The “Jothi” team attended a special event on Radio City FM for the second song “Ariro” release

திரைப்பட விநியோகத்தில் வியக்க வைக்கும் இளம் விநியோகஸ்தர் சாய்கார்த்திக்

திரைப்பட விநியோகத்தில் வியக்க வைக்கும் இளம் விநியோகஸ்தர் சாய்கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு இயக்குனர் நட்டிகுமாரிடம் திரைப்பட வணிகத் திறனைக் கற்றவர் சாய் கார்த்திக் கவுட்.

தன் இளம் வயதிலேயே பல படங்களை விநியோகித்து, தற்போது டோலிவுட்டின் இளைய விநியோகஸ்தரானார்.

இண்டஸ்ட்ரியில் அனைவராலும் கார்த்திக் ஜாடி என்று அன்புடன் அழைக்கப்படும் சாய்கார்த்திக், படிப்படியாக வளர்ந்து சமீபகாலமாக தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

பிரகாசம் மாவட்ட சாய் கார்த்திக்கின் மகனான சாய் கார்த்திக், 1993 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பிரகாசம் மாவட்டம் கிடலூரில் ஜே.வி.பிரசாத் கவுட்-பீவி சுப்பம்மாவுக்கு மகனாகப் பிறந்தார்.

பிரகாசம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சாய் கார்த்திக், கர்னூல் மாவட்டத்தில் தனது கல்வியை முடித்ததே பெரிய காரியம்.

ஸ்ரீசைலத்தில் உள்ள ஜிபிஎச்எஸ் பள்ளியில் 10ம் வகுப்பையும், கர்னூலில் உள்ள வித்யா விகாஸ் ஜூனியர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் முடித்தார்.

அதன் பின்னர் உயர்கல்விக்காக ஹைதராபாத் சென்று பாக்யாநகரில் பிஎன்ஏ படிப்பை முடித்துள்ளார்.

நட்டிகுமாரிடம் பயிற்சி பெற்றதால், திரைப்படங்களில் ஆர்வம் கொண்டு பிரபல இயக்குனர்-தயாரிப்பாளரான நத்திகுமார் வடாவின் சீடரானார்.

ஏறக்குறைய 8 ஆண்டுகள் நட்டிகுமாருடன் பணியாற்றிய சாய்கார்த்திக் அவரிடம் பல திறமைகளை கற்றுக் கொண்டிருக்கிறார்.

விநியோகத் துறையில் எப்படி வெற்றி பெறுவது?, எந்தச் சிரமங்களைச் சமாளிப்பது? என்பது குறித்து தனது வழிகாட்டியான நட்டி குமாரிடம் கற்றுக்கொண்டதாக சாய்கார்த்திக் தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தராக இருந்து பல படங்களை தயாரித்து இளைய விநியோகஸ்தராக நற்பெயர் பெற்றதற்கு நட்டிகுமார் தான் காரணம் எனவும் சாய்கார்த்திக் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குணாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தலைவராக .. சாய் கார்த்திக் முதல் நாடிஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், க்விடிஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், விசாகா டாக்கீஸ், எல்கா மீடியா அட்வர்டைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், விநியோகஸ்தராக முழு அனுபவத்தைப் பெற்று தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.

குணாஸ் தனது முத்தம் என்ற பெயரில் என்டர்டெயின்மென்ட்டை நிறுவினார்.

அனைத்து தென் மொழிகளிலும் விநியோகம் சாய்கார்த்திக் செய்கிறார்.

தயாரிப்பாளராக நட்டிகுமார் இயக்கத்தில் விநியோகஸ்தராக பல படங்களை விநியோகம் செய்த சாய்கார்த்திக் சமீபத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார்.

பத்மஜா ஃபிலிம் ஃபேக்டரி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் வீவி ருஷிகாவை வைத்து பல படங்களை செய்து வருகிறார்.

ருஷிகா தனக்கு ஒரு சகோதரியாக நிறைய உதவுவதாகவும், இருவரும் தொடர்ச்சியாக பல படங்களில் இணைந்து நடித்து வருவதாகவும் சாய்கார்த்திக் கூறினார்.

ருஷிகா இயக்கிய இக்ஷூவை சாய்கார்த்திக் இணைத் தயாரிப்பாளராகவும் மற்றும் கைத்தறிகளின் வாழ்க்கையைப் பற்றிய விஜய்குமார் படுகுவின் தமசோமா ஜோதிர்கமயா படத்தைத் தயாரித்து விநியோகிக்கிறார்.

#SaiKarthik #Sai #Karthik #சாய்_கார்த்திக் #சாய்கார்த்திக்

@jadisaikarthik @saikarthikjadi
Instagram: @saikarthikjadi
Twitter : @jadisaikarthik

Sai Karthik Sai Karthik சாய் கார்த்திக் சாய்கார்த்திக்

Saikarthik is an amazing young distributor in film distribution

‘KGF’ பட வெற்றி எதிரொலி : முதல் படமே பான் இந்தியா படம்.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜோடி

‘KGF’ பட வெற்றி எதிரொலி : முதல் படமே பான் இந்தியா படம்.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது.

‘கேஜிஎஃப்’ டைரக்டர் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் உடன் இணையும் யஷ்

இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார்.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.

இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை என் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

இந்நிலையில் தமிழில் வெளியான ‘குரங்கு பொம்மை’ எனும் படத்திற்கு இசையமைத்த கன்னட திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளரான அஜனீஸ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாய கங்கா..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், ‘பனாரஸ்’ படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், இயக்குநர் ஜெய தீர்த்தா, நடிகர் சுஜய் சாஸ்திரி, கதாநாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மோன்டோரியோ ஆகியோருடன், தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி.கே. ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர் ஜெய தீர்த்தா பேசுகையில்…

” பனாரஸ் படத்திற்கு முன்பாக கன்னடத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘பெல்பாட்டம்’ படத்தை தமிழில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார்.

நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. வீதியோர நாடகக் கலைஞனாக பயணத்தைத் தொடங்கி, படங்களை இயக்கி வருகிறேன். பனாரஸ் படத்தில் காசியை பின்னணியாக கொண்டு காதல் கதையை உருவாக்கி இருக்கிறேன்.

இந்த படத்தில் காதல் என்பது அழகை பார்த்து வருவதில்லை. இதயபூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் தான் காதல் உண்டாகிறது என்பதனை, மர்மங்கள் நிறைந்த காசியை கதைக்களமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கிறேன்.

இதன் பின்னணியிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது. திரைப்பட படைப்புகளுக்கு மொழி பேதம் இல்லை. என்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் படம், தமிழ் ரசிகர்களின் முன்னிலையில் தான் விருதினை பெற்றது.

அந்த வகையில் சிறந்த திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பதில் தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள். இதற்காக நான் பெருமிதம் அடைகிறேன். ‘பனாரஸ்’ திரைப்படம் தமிழிலும் வெளியாவதை பாக்கியமாக கருதி, உங்களின் ஆதரவை கேட்கிறேன். என்னுடைய இயக்கத்தில் தயாரான ஏழு படங்களில் ஐந்து படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

’பனாரஸ்’ படத்திலும் நடிகர் ஜையீத் கானை கதாநாயகனாக அறிமுகம் செய்திருக்கிறேன். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை தமிழில் பாடலாசிரியர் பழனி பாரதி எழுதியிருக்கிறார்.

நேற்று வெளியிடப்பட்டிருக்கும் ‘மாய கங்கா.. ’என்ற பாடலையும் அவரே எழுதியிருக்கிறார். இந்த ‘பனாரஸ்’ படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை காமராசன் எழுதியிருக்கிறார். ஒத்துழைப்பு வழங்கிய ஒளிப்பதிவாளர் அத்வைதா, இசையமைப்பாளர் அஜனீஸ் உள்ளிட்ட படக் குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகன் ஜையீத் கான் பேசுகையில்…

” பனாரஸ் படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் ஜிகே ரெட்டி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரும், என்னுடைய தந்தையும் பால்யகால நண்பர்கள். நடிகனாக வேண்டும் என்று தீர்மானித்தவுடன் எதிர்ப்பு தெரிவித்த என்னுடைய பெற்றோர்களை, தயாரிப்பாளர் திலக்ராஜ் அவர்கள் தான் சமாதானம் சொல்லி, நடிப்பு பயிற்சி கல்லூரிக்கு என்னை அனுப்பி வைத்தார். அங்கு நடிப்புடன் நடனம், சண்டைக் காட்சிகளையும் கற்றுக் கொண்டேன்.

முதல் படமே பான் இந்திய அளவில் வெளியாகும் திரைப்படம் என்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ‘பனாரஸ்’ படத்தின் கதை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றது. படக்குழுவினர் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கடினமாக பணியாற்றியிருக்கிறோம்.

இதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் சூழலில், கதாநாயகியுடன் காதல் காட்சிகளில் நடிப்பது சவாலாக இருந்தது.

காசி புதிரும், மர்மங்களும் நிறைந்த நகரம். அதனால் இந்த பாடல் காட்சியில் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் பார்த்துவிட்டு விமர்சிக்க வேண்டும்.

‘பனாரஸ்’ படத்தின் தெலுங்கு பதிப்பை ‘புஷ்பா’ பட புகழ் இயக்குநர் சுகுமார் வெளியிட்டார். ஹைதராபாத்திலும் ‘பனாரஸ்’ படக்குழுவினருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

தமிழிலும் ‘பனாரஸ்’ படக்குழுவினருக்கு பேராதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி பேசுகையில்…

” தயாரிப்பாளர் திலகராஜ் என்னுடைய நீண்டகால நண்பர். அவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கை தமிழில் வெளியிடுவதற்கு பெருமிதம் கொள்கிறேன்.

இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகன், கதாநாயகியின் நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. காட்சிகளும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன.

இதற்காக இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் என்பது அவசியம். ஆரோக்கியத்தை பேணி காப்பது நம் கையில்தான் இருக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

அதனை இன்றிலிருந்து தொடங்கினால்.. மூன்று மாதத்திற்குள் உங்கள் உடலில் மாற்றம் தெரியும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஒழுக்கம் இதனை கடைப்பிடித்தால், ஆரோக்கியத்துடன் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.” என்றார்.

இந்த விழாவில் நாயகன் ஜையீத் கான் மற்றும் நாயகி சோனல் மோன்டோரியோ மேடையில் “ரவுடி பேபி….” பாடலுக்கு நடனமாடியது வருகைத் தந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

‘KGF’ film success reverberations: First film is Pan India film.; ‘Banaras’ couple in ecstasy

‘கேஜிஎஃப்’ டைரக்டர் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் உடன் இணையும் யஷ்

‘கேஜிஎஃப்’ டைரக்டர் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் உடன் இணையும் யஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே ஜி எஃப் 1, கேஜிஎஃப் 2 படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல்.

இந்த இரு படங்களிலும் யஷ் நாயனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக அறியப்பட்டார் யஷ்.

இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றி அடைந்தது.

மீண்டும் இவர்கள் கேஜிஎஃப் 3 படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்க சென்று விட்டார் பிரசாந்த் நீல்.

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இப்படத்தில் ‘கேஜிஎப்’ நாயகன் யஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Yash joins Prabhas in ‘KGF’ director Prasanth’s direction

ஆரம்பிக்கலாங்களா.. பாத்துக்கலாம்..; ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறவிப்பு

ஆரம்பிக்கலாங்களா.. பாத்துக்கலாம்..; ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது.

திரைத்துறையின் உச்சபட்ச ஆக்‌ஷன் த்ரில்லர்”, “ஆண்டவரின் வெற்றி மேஜிக்”, “தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ் திறமைகளின் நடிப்பு கண்காட்சி”, “ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ இன்னும் இன்னும் பல பாராட்டுக்கள்!!!

கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிப்படமான ‘விக்ரம்’ படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்னும் கனமழை போல, பொழிந்து கொண்டு இருக்கிறது.

இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ளன.

சூர்யாவுக்கு 1.. பஹத்துக்கு 1 கார்த்திக்கு 1.; விக்ரம் படத்தை பிரித்து மேயும் லோகேஷ்

இந்த திரைப்படம் இந்திய வர்த்தக வட்டாரங்களை மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை, சர்வதேச சந்தைகளையும் பிரமிக்க வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் பிரமாண்ட விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம், என ‘விக்ரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.

முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து, டிரெய்லரில் வரும் ‘பாத்துக்கலாம்’ வரை ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் கொண்டாட்ட ஆரவாரமாக அமைந்தது.

விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து 100% நேர்மறையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஓப்பனிங்கை பெற்றது.

வெளியான வேகத்தில் திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியது, வெளியான மூன்று-நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்படம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.

‘விக்ரம்’ இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது, இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், அட்டகாசமான கவர்ச்சியும், ஃபஹத் ஃபாசிலின் அசத்தலான நடிப்பும், விஜய் சேதுபதியின் அதிபயங்கரமான வில்லத்தனமும், சூர்யாவின் வெறித்தன கேமியோவும் ரசிகர்களை உச்சக்கட்ட பரவசத்தில் ஆழ்த்தியது.

தவிர, இயக்குநர் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) கட்டமைப்பும், ‘கைதி’ திரைப்படத்தில் இருந்து சில கதாபாத்திரங்களை வரவழைத்து, எதிர்காலத் திரைப்படங்களுக்கு அவற்றை விரிவுபடுத்தியது என இப்படம் பன்மடங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கிரீஷ் கங்காதரனின் கண் கவர் ஒளிப்பதிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் மனம் மயக்கும் இசையமைப்பும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.

விக்ரம் திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட்-கோர் ஆக்சன் திரைப்பட ஆர்வலர்கள் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படத்தை புகழ்பெற்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் திரையரங்குகளில் ‘விக்ரம்’ என்ற பிரம்மாண்டமான ஆக்‌ஷன்-பேக் த்ரில்லரைப் பார்ப்பதற்கு முன்பாக பார்த்தார்கள், இது இரு திரைப்பட உலகங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள நிறைய பங்களித்தது என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தினை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜூலை 8, 2022 முதல் கண்டுகளிக்கலாம்.

OTT release date of ‘Vikram’ announced

More Articles
Follows