தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், பா.இரஞ்சித், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, பிரேம் பெண்கள் மைய தலைவர் வைசாலி சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது…
“இது பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம்.
பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் தைரியமாக எதிர்க்கிறார்கள்.
அந்த தைரியத்தின் வெளிப்பாடாக இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.
இந்த சங்கம் ரொம்ப வீரியமாக செயல் பட வேண்டும்.
சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி கூறும் போது, அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் ஆடைதான் காரணமா?
அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும்.
அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.
நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும்” என்றார்.