சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பேரரசு

சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and director perarasuதம்பி ராமையா மகன் உமாபதி நடிக்க, இன்பசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

இவ்விழாவில் பேரரசு பேசும்போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று அழைத்து புதிய பட்டத்தை கொடுத்தார்.

சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டாராக்கிய விஜய் பட தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டாராக்கிய விஜய் பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakarthikeyanதம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.வி.சேகர், பேரரசு, பொன்வண்ணன், இயக்குநர் விஜய், இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் விஜய்யின் புலி படத்தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் கலந்து கொண்டு பேசும்போது சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என அழைத்தார்.

அடுத்த லெவலுக்கு செல்லும் சூப்பர் ஸ்டாரின் ‘காலா’

அடுத்த லெவலுக்கு செல்லும் சூப்பர் ஸ்டாரின் ‘காலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajini shootதனுஷ் தயாரித்து ரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

கடந்த மாதமே இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு மே 28ஆம் தேதி இதன் சூட்டிங்கை மும்பையில் தொடங்கியது படக்குழு.

இதுவரை வசனம் மற்றும் பாடல் காட்சிகளை படம் பிடித்தார்களாம்.

நேற்று படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியதாக செய்திகளும் படங்களும் வந்துள்ளன.

இத்தகவலை இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்… தான் மிகவும் மதிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசியோடு இன்று முதல் ஸ்டண்ட் காட்சிகளை இயக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதன் ஆக்சன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சண்டைக் காட்சிகளை சிலவற்றை முடித்துவிட்டு சற்றுமுன் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.

Stunt Master Dhilip Subbarayan tweets about Kaala fight

rajini kaala fight

தங்கர் பச்சான் சொல்வதை நம்ம MLA-MP செய்வார்களா..?

தங்கர் பச்சான் சொல்வதை நம்ம MLA-MP செய்வார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thangar Bachan request to Tamilnadu MPs and MLAsஇயக்குனரும் நடிகருமான தங்கர்பச்சான் தற்போது நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளை குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

அனைவருக்கும் வணக்கம்.

நீரின்றி அமையாது உலகு. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதாவர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும் நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள்.

பதவியில் இருந்தவர்களும், அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் அதைப்பற்றி சிந்தனையே இல்லாமல் சொல்வதற்கெல்லாம் துணையாய் இருந்து தலையை ஆட்டினார்கள். இதையெல்லாம் பொறுப்பற்ற மக்களும் கண்டுகொள்ளவில்லை. தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவும் இல்லை.

நாம் எல்லோருமே தண்ணீர் என்பது பூமியின் அடியிலிருந்து தான் கிடைக்கிறது என இன்றுவரை நினைத்துக்கொண்டு இருக்கிறோம். பணம் கொடுத்தால் தண்ணீர் கிடைக்கும் என எந்தப் பொறுப்பையும் உணராத மக்களாகிய நாமும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வருமானமே இல்லாமல் வங்கியில் சேர்த்து வைத்திருந்தப் பணத்தை எடுத்து எடுத்து செலவு செய்து கொண்டிருந்தால் இறுதியில் நம் கணக்கில் என்ன இருக்குமோ அந்த நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள நீர் ஆதாரங்களின் நிலை.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த காவிரி நதி கை நனைக்கக்கூட தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய் கிடக்கிறது. தாயின் மார்பிலிருந்து பால் வராமல் இரத்தம்தான் வருகிறது எனத் தெரிந்தும் இரத்தத்தைக் குடித்துக்கொண்டே இருக்கிறோம்.

நாம் 40 இலட்சம் ஏக்கரில் காவிரி நீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலங்கள் இன்று 8 இலட்சம் ஏக்கர்களாக மாறிவிட்டன. அந்த எட்டு இலட்சத்தில் ஒரே ஒரு ஏக்கரில் கூட இந்தப் பருவ விவசாயத்தை செய்ய முடியவில்லை.

விவசாயிகள் காவிரி நீருக்காக கதறிப் பார்த்தார்கள், நீர் வராமல் தற்கொலை செய்துகொண்டார்கள், நிர்வாணமாக தலை நகரத்தின் நடுவீதியில் ஓடிப்பார்த்தார்கள் ஒருவருக்கும் உறைக்கவில்லை. தாங்கள் ஆட்சியில் நீடித்தால் போதும் என ஆள்பவர்கள் அவர்களை கைவிட்டு விட்டார்கள்.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது பற்றி எத்தனையோ முறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் மத்திய அரசை ஆண்டவர்களும்,ஆள்பவர்களும் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

மத்திய அரசை ஆள வருபவர்கள் தாங்கள் எந்தக்காலத்திலும் தமிழகத்தை ஆளவே முடியாது என்பது புரிந்து விட்டதால் இருக்கின்ற கர்நாடகத்தை தங்கள் பிடியில் வைத்துக் கொள்வதற்காக ஏதாவதொரு பொய்யையும், காரணத்தையும் சொல்லி ஐந்து ஆண்டுகால ஆட்சியை முடித்துக் கொள்கிறார்கள்.

இதன் விளைவாகவே 8 இலட்சம் ஏக்கரில் காவிரி நீரைக் கொண்டு பயிர்செய்த கர்நாடகம் தற்போது 40 இலட்சம் ஏக்கர்களாகவும், 40 இலட்சம் ஏக்கர் பயிர்செய்த நாம் இன்று 8 இலட்சம் ஏக்கர்களாகவும் சுருங்கி விட்டோம்.

தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கமும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவிரி நீர் சிக்கலைத் தீர்ப்பதற்காக கர்நாடக அரசியல் கட்சிகள்போல் ஒன்றிணைந்து செயல்படாமல் அவரவர்களின் ஆதாயத்துக்குத் தகுந்த மாதிரி செயல்பட்டு பதவி சுகத்தை அனுபவித்ததின் விளைவாகத்தான் காவிரிக்கு இந்த கதி ஏற்பட்டிருக்கிறது.

பொழிகின்ற நீரை சேமிக்க வக்கில்லாமலும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கத் தெரியாமலும், நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தெரியாமலும், குறைந்த அளவு நீரைக் கொண்டு இனியாவது விவசாயத்தைச் செய்யத் தவறிவிட்டவர்கள் தயவுகூர்ந்து இம்முறையாவது இந்த தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்.

நான் கேட்டுக்கொள்வதெல்லாம் தமிழக அரசியல் கட்சிகளிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளால் தேர்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களும், விரைவில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் இம்முறை உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என அறிவிக்க வேண்டும்.

காவிரி நீர் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தின் அடிப்படையில் நீரைப் பெற்றுத் தருவதற்காக குடியரசுத் தலைவர் தேர்தலை இம்முறை புறக்கணித்து நடுவண் அரசுக்கு நியாயத்தை உணர்த்த வேண்டும். தமிழகத்தின் தற்போதைய அடிப்படைத் தேவை காலங்கலாமாக நாம் அனுபவித்துவந்த நமக்கு சொந்தமான காவிரி நீர் உரிமைதான் என்பதை தயவுகூர்ந்து இப்போதாவது உணருங்கள்.

தமிழக மக்களின் குரலாக உங்களுக்கு சோறுபோடும் தமிழக விவசாயிகளின் குரலாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் உடனே உறுப்பினர்களுக்கு கட்டளை இடுங்கள்.

செய்ய வேண்டிய வேலைகளையே செய்யாதவர்கள், தொடர்ந்து பகை அரசியலையே செய்து தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்காமல் அவர்களைப் போராட்டத்திலேயே வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கோரிக்கையையா காது கொடுத்துக் கேட்பார்கள் என நண்பர்களும், என்னைச் சுற்றியுள்ளவர்களும் கூறினாலும் இதிலுள்ள நியாயத்தையும் தேவையையும், நம் அரசியல் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் இப்போது உணர்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கோரிக்கையை காதில் கேட்டும் கேட்காதது போல் நடந்து கொண்டால் நாம் அனைவருமே கடமையிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் தவறுகிறோம்.

சல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாமில்லை என்பதை இப்போதாவது உணருங்கள்.

அவர்கள் வீதியில் நின்று நாள்தோறும் கதறிப் போராடுவது மூன்று வேளைகளும் நாம் அனைவரும் வகை வகையாக சாப்பிடுகிறோமே அதற்காகவும் சேர்த்துத்தான் என்பதை தயவுகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

நியாயமான கோரிக்கைகளுக்காக யார் போராடினாலும் கோரிக்கை நிறைவேறி வெற்றிக் கிடைக்கிறது. ஆனால் விவசாயிகளின் நியாமானப் போராட்டம் என்றுமே வெற்றி பெற்றதில்லை.

விவசாயிகளை இந்த நிலையில் வைத்திருப்பது ஆளும் அரசாங்கங்கள் மட்டுமில்லை; அவர்களின் நியாயத்தைத் உணர்ந்து நம்முடைய உணவுத் தேவைக்காக அவர்களுடன் சேர்ந்து போராட முன்வராத இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனச் சொல்லிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும்தான்.

இதைப்புரிந்துகொள்ளாமல் இம்முறை தமிழகத்தைச் சார்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்தால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர்கள் நம் தமிழக அரசியல்வாதிகளைத்தவிர வேறு யாருமில்லை.

அதேபோல் அவ்வாறு அவர்கள் செய்யத்தவறும்போது செய்யச் சொல்லி வற்புறுத்தி போராடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த வகையிலும் இந்த அரசியல்வாதிகளுக்கு நாமும் குறைந்தவர்கள் இல்லை.

நிலத்தை காயவிட்டு, நதிகளைக் காயவிட்டு, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு படித்தவர்கள் எனச்சொல்லிக் கொண்டு, தான் மட்டும் நல்லமுறையில் வாழ்ந்தால்போதும் என நினைக்கிறவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம்?

Director Thangar Bachan request to Tamilnadu MPs and MLAs

‘ஆண் தேவதை’ படத்தில் கவிக்கோவின் முதல் சினிமா பாடல்

‘ஆண் தேவதை’ படத்தில் கவிக்கோவின் முதல் சினிமா பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani aan dhevadhaiஓரிரு தினங்களுக்கு முன், உடல்நலக்குறைவால் கவிக்கோ அப்துல்ரகுமான் காலமானார் என்பதை பார்த்தோம்.

இவர் மிகப்பெரிய கவிஞராக வலம் வந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடல் கூட எழுதியது இல்லை.

இளையராஜா, ஏஆர். ரஹ்மான் பலமுறை பாடல் எழுத கேட்டும் அவர் சம்மதிக்கவில்லையாம்.

இந்நிலையில் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு கிடைத்துள்ளது.

கவிக்கோ மறைவுக்கு முன்னர் அவரை சந்தித்த ஜிப்ரான், நீங்கள் பாடல் எழுத வேண்டாம். இதற்கு முன்பு எழுதிய பாடலை கொடுங்கள். நான் இசையமைத்து கொள்கிறேன் என்று சொன்னாராம்.

அதன்படி அவர் கொடுக்க, விரைவில் வெளிவரவுள்ள ‘ஆண்தேவதை’ படத்தில் அந்த பாட்டை பயன்படுத்த போகிறாராம் ஜிப்ரான்.

தாமிரா இயக்கிவரும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அந்தப் பாடல் வரிகள் இதோ…

மலரின் நறுமணம் போகுமிடம்

குழலின் பாடல்கள் போகுமிடம்

அணைந்த சுடர்கள் போகுமிடம்

அதுதான் நாமும் போகுமிடம்

மலரின் நறுமணம் போகுமிடம்

குழலின் பாடல்கள் போகுமிடம்

அணைந்த சுடர்கள் போகுமிடம்

அதுதான் நாமும் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

மாதா கோயில் ஜெப ஒலி

பள்ளிவாசல் அழைப்பொலி

இந்து ஆலய மணி ஒலி

எல்லாம் ஒன்றாய் போகுமிடம்

மாதா கோயில் ஜெப ஒலி

பள்ளிவாசல் அழைப்பொலி

இந்து ஆலய மணி ஒலி

எல்லாம் ஒன்றாய் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

அந்த இடம் நம் சொந்த இடம்

அணைத்து பொருளும் வந்த இடம்

அங்கே மதங்கள் ஏதுமில்லை

அமைதிக்கென்றும் சேதமில்லை

அந்த இடம் நம் சொந்த இடம்

அணைத்து பொருளும் வந்த இடம்

அங்கே மதங்கள் ஏதுமில்லை

அமைதிக்கென்றும் சேதமில்லை

மதுவும் வண்டும் வேறில்லை

கண்ணீர் புன்னகை வேறில்லை

அதுவும் இதுவும் வேறில்லை

அனைத்தும் ஒன்றே உண்மையிலே

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

ar rahman kaviko ghibran

சிம்பு-விக்ரம்பிரபு-உதயநிதி… மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொன்ன மஞ்சிமா

சிம்பு-விக்ரம்பிரபு-உதயநிதி… மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொன்ன மஞ்சிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manjimaஅச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மஞ்சிமா மோகன்.

தற்போது உதயநிதியுடன் இப்படை வெல்லும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விக்ரம் பிரபுவுடன் நடித்து சத்ரியன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தன் சினிமா பயணம் குறித்து அவர் கூறியதாவது…

மஞ்சிமா என்ற பெயரை பெரும்பாலானவர்கள் மங்கிமா என்றுதான் அழைக்கிறார்கள்.

மஞ்சிமா என்றால் அழகு என்று என் அப்பா சொன்னார்.

சத்ரியன் படத்தில் தைரியமான பெண்ணாகவும் அதே சமயம் இங்கிலீஷ் பேசாத பெண்ணாகவும் நடித்திருக்கிறேன்.

நான் இணைந்து நடித்துள்ள 3 ஹீரோக்களுமே (சிம்பு, உதயநிதி, விக்ரம்பிரபு) பெரிய நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

எனவே அவர்களுடன் பழக முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் மிகவும் யதார்த்தமாக பழகினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Manjima mohan talks about Simbu Vikram Prabhu and Udhayanidhi

More Articles
Follows