புதைக்கப்பட்ட சமூக நீதியை மீட்டெடுக்க வேண்டும்.; சூர்யாவை தொடர்ந்து ரஞ்சித் வாய்ஸ்

புதைக்கப்பட்ட சமூக நீதியை மீட்டெடுக்க வேண்டும்.; சூர்யாவை தொடர்ந்து ரஞ்சித் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjithஓரிரு தினங்களுக்கு முன்.. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு ஆபத்தானது. கல்வி என்பது மாநில உரிமை என அறிக்கை வெளியிட்டார் நடிகர் சூர்யா.

அவரை தொடர்ந்து தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இரண்டையுமே நம் FILMISTREET தளத்தில் செய்தியாக படித்தோம்.

தற்போது தயாரிப்பாளரும் இயக்குனருமான ரஞ்சித்தும் நீட் தேர்வுக்கு தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கை இதோ…

“நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூக நீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும் ‘நீலம் பண்பாட்டு மையம் சார்பாக விடுக்கப்படும் கோரிக்கை.

சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன இதன் காரணமாக எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியிருக்கிறது.

ஆனால் நீட் தேர்வு அத்தகைய நோக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது சமமான வாய்ப்பைப் பெற இயலாதவர்களை வாய்ப்பு பெற்றவர்களுக்கு இணையாக நிறுத்துகிறது இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க முடியாது ஆனால், நீட் தேர்வை ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்தியிருப்பதால் வேறுவழி இல்லாமல் எளிய பின்புலத்து மாணவர்களும் தங்கள் சக்திக்கு மேலான பொருட்செலவில் பயிற்சி மையங்களை நாட வேண்டியுள்ளது.

இதுவொரு நவீன வணிகம் பொறுப்புள்ள அரசு. இத்தகைய நவீனக் கொள்ளையை அனுமதிக்கக் கூடாது.

மாணவர்களின் ஆற்றலை பயிற்சி மையங்களின் வணிக விதிகள் முடிவு செய்திட முடியாது.

தமிழகத்தில் நிலவும் தற்போதைய சுகாதாரக் கட்டமைப்பு இந்திய மாநிலங்களில் இதுவரை இல்லாதது.

இந்த நிலை நீட் தேர்வு இல்லாத நிலையிலேயே சாத்தியப் பட்டிருக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

கிராமப்புறம் மற்றும் விளிம்பு நிலை மாணவர்களைக் கணக்கில் எடுக்காமல் இந்தியா முழுமைக்கும் ஒற்றைத் தேர்வு என்கிற முடிவு சமூக நீதியல்ல சட்டம், நீதி, அரசாங்கம் இவையாவும் அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கானது என்பது உறுதி செய்யப்பட வேண்டுமானால் அடிப்படைக் கல்வி சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் எல்லாத் தரப்பினரையும் கணக்கில் கொண்டே எதிர்வரும் காலத்தில் கல்வி சீரமைப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

ஏற்றத்தாழ்வு கொண்ட இச்சமூக அமைப்பில் தேவைக்கேற்றார் போல் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் மொழி, சுலாச்சாரம், தொழில் உள்ளிட்டவற்றில் பன்முகத்தன்மை நிலவும் நாட்டில் ஒரே கல்வி என்பது நடைமுறை சாத்தியமில்லாதது இதனை மாற்றுவதற்கான ஒரே வழி கல்வி பாடத்திட்டம், தேர்வுசார்ந்த விசயங்கள் மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் வலியுறுத்துகிறோம்.

கல்வி என்பது மனத்தடைகளை அகற்றி தன்னம்பிக்கையையும் சமூக விடுதலையையும் அடைவதற்கான கருவி இக்கருவி இந்த நீட் தேர்வின் மூலமாக மாணவ, மாணவர்களிடையே சோர்வையும் பயத்தையும் கொடுப்பதாக மாறிவிட்டது.

பெற்றோர்களின் துயரத்தில் பங்கெடுக்க முடியாமல், அவர்களது கேள்வியிலுள்ள நியாயத்திற்குப் பதிலளிக்கவும் முடியாமல், தடுமாற்றத்தோடு கழியும் இந்தக் காலம் நிறைவுப் பெற்றாக வேண்டும்.

தமிழ் வழி மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவர்க்கும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டுமென்பது அவர்களுக்கான உரிமை இச்சூழலில் புதிய பாடத்திட்டங்களையும் தேர்வுகளையும் அறிமுகப்படுத்துவது மாணவர்களைக் குழப்பத்திற்குள் தள்ளும் தமது ஆற்றல் மீதான கேள்விகளும் தாழ்வு மனப்பான்மையும் மேலெழும் எனவே, காலதாமதமின்றி இவை கருத்தில் எடுக்கப்பட்டு களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இந்நிலையில்தான் நீட் உருவாக்கக்கூடிய தாக்கம் குறித்த ஆய்வறிக்கையைத் தயார் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதிபதி மதிப்பிற்குரிய ஏகே. ராஜன் அவர்களது தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

இதைச் செய்த தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கும் அதே வேளையில் கால தாமதமில்லாமல் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், திரைத்துறையினர், கலை இலக்கியச் செயல்பாட்டினர், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் ஒன்று திரண்டு நம் கருத்துகளைத் தெரிவிப்போம். neetimpact2021 @gmai.com என்கிற முகவரிக்கு நீட் தேர்வின் பாதிப்புகளை மின்னஞ்சல் செய்வோம் எனவே வரும் 13ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நவீன இந்தியாவென்பது தொழில்நுட்பக் கருவிகளை டிஜிட்டல் மயமாக்குவதன்று மாறாக சமூக விடுதலைக்கான வழியைக் கடந்த காலத்தை விடவும் ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தி நம்மை மேம்படுத்திக் கொள்வதேயாகும்.

மாணவர்களின் சமூக, கல்வி விடுதலைக்குத் துணை நின்று சனநாயகத்தை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டு அரசை முழு மனதார நம்பி இம்மனுவைத் தங்களின் முன் வைக்கிறோம்.

நீலம் பண்பாட்டு மையம் &

பா.இரஞ்சித் திரைப்பட இயக்குனர்

Director Pa Ranjith against NEET exam

‘கடவுளின் பெயரால்’… ரஜினி-கமலுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த டைரக்டரின் அடுத்த அவதாரம்

‘கடவுளின் பெயரால்’… ரஜினி-கமலுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த டைரக்டரின் அடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும்.

அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் . தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் .

கமலுக்கு ‘ சத்யா’, ரஜினிக்கு ‘பாட்ஷா’, வீரா, அண்ணாமலை, பாபா, ரகுமானுக்கு ‘சங்கமம் ‘ என்று மைல்கல் படங்களின் பட்டியல் நீளும்.

சுமார் 40 படங்கள் இயக்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, சின்னத்திரை பக்கமும் விட்டுவைக்கவில்லை.

சன், விஜய் போன்ற முன்னணித் தொலைக்காட்சிகளில் தொடர்கள் இயக்கியுள்ளார். குறிப்பாக சன் டிவிக்கு இவர் இயக்கிய ‘மகாபாரதம்’ ஒரு உதாரணம்.

இப்போது வெப் சீரீஸ் தனத்தில் இறங்கி இருக்கிறார். இயக்குநராக அல்ல ஒரு தயாரிப்பாளராக , புதிய முகத்தோடு காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தனது :சுரேஷ் கிருஷ்ணா புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் ‘சார்பில் ஏற்கெனவே தொலைக்காட்சித் தொடர் தயாரித்தவர், இப்போது வெப் சீரீஸ் ஒன்றைத் தயாரித்துள்ளார் .

‘இன் த நேம் ஆப் காட் ‘என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ் தெலுங்கில் உருவாகி இருக்கிறது. அதாவது ‘கடவுளின் பெயரால்’ என்ற பொருளில் தலைப்பு உள்ளது.

பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இதை எழுதி இயக்கி இருப்பவர் வித்யாசாகர் முத்துக்குமார்.

ஒளிப்பதிவு வருண் டி.கே, எடிட்டிங்- நிகில் ஸ்ரீகுமார், இசை- தீபக் அலெக்சாண்டர் , கலை விஜய் தென்னரசு -சுபாஷ் ,வசனம்- பிரதீப் ஆச்சாரியா, ஒலிப்பதிவு- லட்சுமிநாராயணன், உடைகள் – சங்கீதா, டிசைன்- சிவா நரி ஷெட்டி என்று மிகப்பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் படக் குழு அமைத்து இந்த வெப் சீரீஸை உருவாக்கி இருக்கிறார்.

ஏராளமான படங்கள், ஏராளமான நட்சத்திரங்கள் என்று இயக்கிவிட்டு இப்போது வெப்சீரீஸ் தயாரித்து இருப்பது பற்றி அவர் கூறும்போது

” காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் தான் இந்த வெப்சீரீஸ். இந்தப் புதிய தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்கு ஈர்ப்பு வந்தது. அதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

நல்ல எதிர்காலம் உள்ள ஒரு தளமாக இது பட்டது.அதே நேரத்தில் சினிமா திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் உருவாக்குவதில் இல்லாத சுதந்திரமும் காட்சி பிரமாண்ட சாத்தியமும் இந்த வெப்சீரீஸ் தளத்தில் உள்ளது.

எந்த சமரசங்களும் இல்லாமல் நினைத்ததை அப்படியே இதில் கொண்டுவரமுடியும். இப்படித்தான் ‘இன் த நேம் ஆப் காட் ‘ சீரீஸை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் . நான் தயாரித்து இருக்கிறேன்.

ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அதே பலத்தோடு அதையும் மீறிய காட்சி பிரமாண்டத் தோடு இதை உருவாக்கி இருக்கிறோம் . இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி போன்ற நகரங்களிலும் காடுகள், ஆறுகள் போன்ற இடங்களிலும் பல ஷெட்யூல் போட்டு எடுத்தோம்.

ஏராளமான நடிகர்களோடும் பெரும் மக்கள் கூட்டத்தோடும் படப்பிடிப்பு நடத்தி இந்த படைப்பு உருவாகி இருக்கிறது.

எனக்கு இதில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் ஈடுபடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அல்லு அர்ஜுன் தான் என்னை ஊக்கமூட்டி இறக்கி விட்டார்.

அவர் தான் எனக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்தவர். அந்த வகையில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

ஓர் அப்பாவி மனிதன் எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவன் சமூக அழுத்தத்தாலும் மக்களது நெருக்குதலாலும் எப்படி வன்முறைப் பாதைக்கு தள்ளப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பது கதை.

அந்த வன்முறை உலகத்தில் விழுந்தவன் , எப்படி அதை எதிர்கொள்கிறான் என்பதே திரைக்கதையில் காட்சிகளாக வரும். அதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் பிரபலமான பிரியதர்ஷி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவரின் இன்னொரு முகமாக வேறுவகை நடிப்பு வெளிப்பட்டுள்ளது.

அவரது நடிப்புக்கு பெரும் தீனியாக இந்த வெப்சீரீஸ் இருக்கும். புதிய பாணியில் புதிய வடிவத்தில் பிரமாண்ட தோற்றத்தில் இது உருவாகியிருக்கிறது. இதைத் தயாரித்ததில் நான் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இதற்குக் கிடைத்துள்ள வரவேற்பை எடுத்துக் கொண்டால் ஒரு மில்லியன் பார்வையாளர்களை விரைவில் கடந்தது . இந்த மாபெரும் வரவேற்பு இதற்கான முதல் வெற்றி அறிகுறியாகும். ஒரு தயாரிப்பாளராக இதில் நான் பெருமைப்படுகிறேன்.

இயக்குநராக இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் தயாரிப்புக்கு இந்தத் தளத்தில் நான் புதியவன். முதல் முயற்சி பெரிய வெற்றியாக அமைந்தது மகிழ்ச்சி. ‘இன் த நேம் ஆப் காட்’ வெப்சீரீஸ் எங்களது ‘ஆஹா ஒரிஜினல் ‘ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது”

இவ்வாறு சுரேஷ்கிருஷ்ணா கூறியுள்ளார்.

வெளியாகியுள்ள டிரெய்லருக்கான கருத்துக்களை பார்க்கும் போது ஏராளமான ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த 18 ஆம் தேதி இந்த வெப்சீரீஸ் தெலுங்கில் வெளியாகி உள்ளது .அதன் வரவேற்பைப் பொறுத்துப் பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படலாம்.

Director Suresh Krishna turns producer

Director Suresh Krishna

ஜூன் 28 வரை ஊரடங்கு.; திருச்சி மதுரை கடலூர் புதுகை தேனி உள்ளிட்ட வகை 2-ல் உள்ள 23 மாவட்ட தளர்வுகள் என்ன.?

ஜூன் 28 வரை ஊரடங்கு.; திருச்சி மதுரை கடலூர் புதுகை தேனி உள்ளிட்ட வகை 2-ல் உள்ள 23 மாவட்ட தளர்வுகள் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நோய்த் தொற்றுப் பாதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளன.

இந்த 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இதில் ‘வகை 1’ மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வுகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை.

2 வகை : அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் இரண்டாம் வகையில் உள்ளன.

3 வகை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மூன்றாம் வகையில் உள்ளன.

வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

23 மாவட்ட தளர்வுகள் விவரம் வருமாறு..

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

•காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

•இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.

•இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

•அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

•சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.

•அனைத்து தனியார் நிறுவனங்கள், 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

•மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

•மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

•வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

•வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

•வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

•காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

•மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

• மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

• செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

• அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.

•பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

•திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

•வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.

மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

•வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

Tamilnadu CM Stalin announces Lockdown extended till 28th June

ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு.; 11 மாவட்டங்களில் தளர்வு இல்லை.; வகை 3ல் உள்ள 4 மாவட்டங்களில் தளர்வு என்ன?

ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு.; 11 மாவட்டங்களில் தளர்வு இல்லை.; வகை 3ல் உள்ள 4 மாவட்டங்களில் தளர்வு என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நோய்த் தொற்றுப் பாதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளன.

இந்த 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இதில் ‘வகை 1’ மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வுகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை.

2 வகை : அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் இரண்டாம் வகையில் உள்ளன.

3 வகை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மூன்றாம் வகையில் உள்ளன.

வகை 3 ல் உள்ள 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன், கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

* தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 :00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படலாம்

* உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகள்( பார்சல் சேவை மட்டும்) மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மின்னணு வணிக நிறுவுனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடனும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவுனங்கள், குறுநிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.

எலெக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

*குழந்தைகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து, சிறார்களுக்கான கண்காணிப்பு/பராமரிப்பு , சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

*அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகயாகவும் இயங்கும்.

Tamilnadu Lockdown extended till 28th June with relaxations

விஜய்யை முந்திக் கொண்ட தனுஷ்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி்.!

விஜய்யை முந்திக் கொண்ட தனுஷ்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Dhanushவிஜய்யின் ‘தளபதி 66’ படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் உருவாகிறதாம்.

ஆனால் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் விஜய்யை முந்தி தனுஷ் தெலுங்கு பிரபலங்களுடன் இணையவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

வணிகரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர்.

இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும்.

இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4 ) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது .

மறைந்த திருமதி .சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்ட திரைப்படத்தை சோனாலி நாரங் வழங்குகிறார்.

இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் . இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் .

நடிகர்: தனுஷ்
இயக்குனர்: சேகர் கம்முலா
வழங்குபவர் : சோனாலி நாரங்
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி
தயாரிப்பாளர்கள்: நாராயண் தாஸ் கே நாரங் & புஸ்கூர் ராம் மோகன் ராவ்

Actor Dhanush to enter in Tollywood

மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிருத்விராஜ்..; வித்தியாசமான தலைப்பில் டைட்டில் லுக்

மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிருத்விராஜ்..; வித்தியாசமான தலைப்பில் டைட்டில் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prithviraj mohanlalமலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “அய்யப்பனும் ஜோஷியும்”.

தென்னிந்திய சினிமா ரசிகர்களை திரைப்படம் திரும்பி பார்க்க வைத்தது.

எனவே இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவுகிறது.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான “கோல்ட் கேஸ்” என்ற படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதனிடையில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் பெரிய வெற்றி பெற்றார் ப்ருத்விராஜ்.

இந்த படமும் பெரும் வெற்றி பெற மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது அடுத்தப்பட இயக்கம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

“BRO DADDY“ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மீண்டும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளார்.

காமெடி கலந்த குடும்பப் பாங்கான கதைக்களம் கொண்ட இந்த படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Prithviraj – Mohan lal next film is titled Bro Daddy

More Articles
Follows