புலி‌ வருது.. புலி வருதுனு சொன்னாங்க .. இப்போ சிங்கமே வந்துருச்சு… ரஜினி கட்சிக்கு லிங்குசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து

Rajinikanth lingusamyநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை 2017 டிசம்பரில் தான் அறிவித்தார்.

ஆனால் கடந்த 25 வருடங்களாகவே அரசியலுக்கு அவர் வருவாரா? எப்போது வருவார்? என கேள்வி கேட்டனர்.

பின்னர் நாளடைவில் அவர் வரவே மாட்டார். புலி வருது… புலி வருது சொல்வாங்க.. அந்த கதை தான்.. ரஜினி வரவே மாட்டார் என கிண்டலடித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை இன்று உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து ரசிகர்கள் & பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

அனிருத், கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.

லிங்குசாமி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது….

புலி‌ வருது .. புலி வருதுனு சொன்னாங்க ..
ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு.
வாழ்த்துக்கள் சார்.
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

என பதிவிட்டுள்ளார் லிங்குசாமி.

Director lingusamy tweets about Rajinikanth’s political entry

Overall Rating : Not available

Latest Post