நாங்க இப்போ பிஸி…; சந்தானத்தின் பிஸ்கோத் டைரக்டர் சொல்லிட்டாரு

நாங்க இப்போ பிஸி…; சந்தானத்தின் பிஸ்கோத் டைரக்டர் சொல்லிட்டாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanamஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம்  ஹீரோவாக நடித்து வரும் படம் ‘பிஸ்கோத்’.

மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

 

சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இந்த நாயகிகளுடன் பிரபல சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் அனைத்தும் தடைபட்டது.

தற்போது தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து இதன் பணிகள் வேகமெடுத்துள்ளன.

 

இந்நிலையில், இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

 

பிஸ்கோத் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் இது முடிவடைந்துவிடும். எடிட்டர் செல்வா உடன் பணி புரிகிறேன் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் காப்பான் இயக்குனருடன் இணையும் சூர்யா

மீண்டும் காப்பான் இயக்குனருடன் இணையும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya kv anandஇறுதிச் சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் ரிலீஸ் எப்போது என அறிவிக்கவில்லை.

இப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்த படங்களை முடித்துவிட்டு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய 3 படங்கள் உருவாகின.

இதில் அயன் தவிர மற்ற இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

லாக்டவுன் முடிந்த பின் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சிம்பு-விஜய் ஆண்டனி-உதயநிதி ஆகியோருடன் நடித்தது பற்றி ஸ்ரீகாந்த்

சிம்பு-விஜய் ஆண்டனி-உதயநிதி ஆகியோருடன் நடித்தது பற்றி ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor srikanth‘மிருகா’ படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

“மிருகா படத்தின் படப்பிடிப்பு 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாகத் தயாராகவுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக ‘மிருகா’ இருக்கும். இதில் ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.

மேலும், ‘மிருகா’ படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் ‘மஹா’ படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் துப்பறியும் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது.

அதேபோல், நானும், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் படம் ‘காக்கி’. இப்படத்தில் இரு கதாநாயகிகள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள்.

ஆனால், அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது.

‘காக்கி’ படத்தை ‘வாய்மை’யை இயக்கிய செந்தில் குமார் இயக்குகிறார். மேலும், இப்படம் சமுதாய சிந்தனையைக் கொடுக்கும் படமாக இருக்கும். எனக்கும், விஜய் ஆண்டனிக்கும் சரிசமமான பாத்திரங்கள் இருக்கிறது. மிகவும் உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும்.

அடுத்து, உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதுவும் பாதியில் நிற்கிறது”என தெரிவித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

ஷாந்தனுவின் ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ படத்திற்கு மாஸ்டர் பாராட்டு

ஷாந்தனுவின் ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ படத்திற்கு மாஸ்டர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanuபாக்யராஜின் மகன் நடிகர் ஷாந்தனு தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் 2020 தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாந்தனு அவரது மனைவி கீர்த்தி இருவரும் இணைந்து அவர்களின் யூடியூப் சேனலில் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்ற குறும்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் சுமையை குறைக்க ஆண்கள் உதவிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இக்குறும்படம் அமைந்துள்ளது.

இது சாதாரணமான முயற்சி தான், அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இக்குறும்படம் ஐஃபோனில் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சாந்தனு.

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறும்படத்தைக் குறிப்பிட்டு சூப்பர் மச்சி என தெரிவித்துள்ளார்.

அடிமை அரசே.. நியாயம் கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமோ..? – கமல்

அடிமை அரசே.. நியாயம் கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமோ..? – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamals Birth day wishes to Edappadi K Palanisamyகடந்த மே 12ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிக்க, 20 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு கட்டங்களாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மொத்தம் ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான இந்த அறிப்புகளில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்ட அறிவிப்பில் ரூ.5,94,550 கோடி,
2ம் கட்ட அறிவிப்பில் ரூ.3,10,000 கோடி,
3ம் கட்ட அறிவிப்பில் ரூ.1,50,000 கோடி,
4 மற்றும் 5ம் கட்ட அறிவிப்பில் ரூ.48,100 கோடி மதிப்பிலான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா அறிவித்தார்.

மேலும், பிரதமர் முன்கூட்டி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.1,92,800 கோடியும், ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.8,01,603 கோடியும் என மொத்தமாக ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் இது குறித்து நடிகரும் அரசியல் கட்சி தலைருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது…

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.

ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.

MNM Party Leader Kamalhassan slams TN Govt as Slave Govt

மீண்டும் ஆரஞ்சு மண்டலமான காரைக்கால்.; துபாய் ரிட்டர்ன் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

மீண்டும் ஆரஞ்சு மண்டலமான காரைக்கால்.; துபாய் ரிட்டர்ன் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First Corona positive case in Karaikalதுபாய் நாட்டிலிருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது…

துபாயிலிருந்து கடந்த 13-ம் தேதி காரைக்கால் வந்துள்ள 26 வயதுப் பெண்ணுக்கு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய சளி, உமிழ் நீர் மாதிரிகள் கடந்த 14-ம் தேதி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது கணவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்

அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

“இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில் முதல் முறையாக கடந்த மே 10-ம் தேதி சுரக்குடி விசாரணைக் கைதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை பார்த்தோம்.

பின்னர் மே 14ல் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் என்பதால் காரைக்கால் பச்சை மண்டலமானது.

தற்போது இந்த கொரோனா பாதிப்பு கர்ப்பிணி பெண்ணால் மீண்டும் ஆரஞ்சு மண்டலமாகியுள்ளது காரைக்கால்.

Again Karaikal became Corona Orange zone by Pregnant lady

More Articles
Follows