வாரிசு அரசியல் இல்லை.. BJP க்கு வாங்க.. லீடர் ஆகலாம்..; சூர்யாவை அழைக்கும் பாபு கணேஷ்

வாரிசு அரசியல் இல்லை.. BJP க்கு வாங்க.. லீடர் ஆகலாம்..; சூர்யாவை அழைக்கும் பாபு கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

babu ganesh suriyaநடிப்பு, இசை, இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பாபு கணேஷ்.

இவர் தேசியப் பறவை, நாகலிங்கம், நானே வருவேன், கடல் புறா ஆகிய படங்களை இயக்கி நடித்திருக்கிறார்.

மேலும் திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் வாசனை படம் படைத்துப பரபரப்பையும் ஏற்படுத்தினர் பாபு கணேஷ்.

இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைந்து முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவுக்கென ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்.. கல்விக்காக சேவை செய்யும் நீங்கள் பாஜக கட்சியில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். மோடியின் சாதனைகளை மக்களிடம் கூற வேண்டும் ” என அழைப்பு விடுத்துள்ளார்.

Director Babu Ganesh invites Actor Suriya to join BJP

பஜாஜ் பல்சர்.. தங்க காசு.. மாஸ்டர் பட டிக்கெட்..; உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகர் என நிரூபிக்க நீங்க ரெடியா?

பஜாஜ் பல்சர்.. தங்க காசு.. மாஸ்டர் பட டிக்கெட்..; உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகர் என நிரூபிக்க நீங்க ரெடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy vijayசென்னை, செப். 15, 2020: ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த கேம் ஷோ வரும் செப். 19, 2020 அன்று மாலை 6 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. இந்த கேம் ஷோ தளபதி அவர்களின் திரைப்படங்கள், அவரது விருப்பங்கள், பார்வைகள் மற்றும் பேச்சுக்கள் பற்றியது. விஜய்யை விரும்பும், அவரை பற்றிய எல்லா செய்திகளையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்காக இந்த கேம் ஷோ நடத்தப்படுகிறது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலுக்காக இந்த கேம் ஷோவை
ஜி. தனஞ்ஜெயன் தலைமையிலான CEAD ஃபிலிம் கன்சல்டன்ஸி குழு உருவாக்கியுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களை ஒன்றிணைத்து, மகிழ்விக்கவும், தளபதி விஜய்யை பற்றி அனைத்தும் தெரிந்த உலகின் மிகப்பெரிய ஒரு விஜய் ரசிகரை தேர்வு செய்வதுமே இந்த கேம் ஷோவின் நோக்கம்.

இந்த கேம் ஷோ வரும் செப். 19 முதல் பத்து வாரங்களுக்கு (மொத்தம் 20 எபிசோட்கள்) ஒவ்வொரு வார இறுதியிலும் (சனி, ஞாயிறு) மாலை 6 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதன் தொடர்ச்சியாக வெற்றியாளரை தேர்ந்தெடுக்க கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்றும் நடத்தப்படும்.

அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பங்கேற்கும் விதமாக பிரபல யூடியூப் சேனல்களான வலைப் பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியவற்றில் இந்த கேம் ஷோ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கூடுதலாக தனஞ்சயன் மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியோரது ட்விட்டர் ஐடிக்களிலும் அதே நேரத்தில் (மாலை 6 மணிக்கு) ஒளிபரப்பாகும்.

இந்த கேம் ஷோ தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்படுகிறது.

இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு எபிசோடிலும் தொகுப்பாளர் பத்து கேள்விகளை கேட்பார்.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் முடிவில் அந்த கேள்விகளுக்கான பதிலை திரையில் தோன்றும் ஒரு வாட்ஸ்-அப் நம்பருக்கு ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அனுப்ப வேண்டும். நிகழ்ச்சியின் முடிவில் 10 கேள்விகளுக்கு பதிலளிக்க போட்டியாளர்களுக்கு 5 நிமிடம் வழங்கப்படும், அதன் பிறகு அந்த நம்பருக்கு பதிலை அனுப்ப முடியாது.

ஒவ்வொரு எபிசோடிலும் வெற்றி பெறுபவர்கள் காலிறுதி, அரையிறுதியை தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு செல்வார்கள். மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பற்றிய தகவல்கள் கீழே:

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள எந்தவித நுழைவுக் கட்டணமோ அல்லது நிபந்தனைகளோ கிடையாது. தளபதி விஜயை நேசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த கேம் ஷோவில் பங்கேற்கலாம்.

அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நபர் ஒரே ஒரு பதில் பதிவு மட்டுமே அனுப்ப இயலும்.

ஒரே நபர் பல பதிவுகளை அனுப்பினால் அனைத்து பதில்களும் நிராகரிக்கப்படும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கேம் ஷோவின் நேரலையை பார்த்து எபிசோடின் முடிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கும் திரையில் தோன்றும் வாட்ஸ்-அப் நம்பருக்கு பதில் அனுப்புவது மட்டுமே.

ஒவ்வொரு எபிசோட் வெற்றியாளர்களுக்கு கொடுக்கவிருக்கும் பரிசுகள்:

முதல் 3 வெற்றியாளர்களுக்கு – 1 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்.
அடுத்த 7 வெற்றியாளர்களுக்கு – ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்.

இறுதிச் சுற்று வெற்றியாளர்களுக்கு:

முதல் பரிசு – பஜாஜ் பல்சர் 150 பைக் + உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகர் ட்ரோஃபி
இரண்டாவது பரிசு – 8 கிராம் தங்க காசு + ‘மாஸ்டர்’ படத்துக்கான டிக்கெட்கள் 5
மூன்றாவது பரிசு – 4 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்

கேம் ஷோவை பற்றிய அதிக தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஓர் அறியப்
அறிமுக நிகழ்ச்சி வரும் செப். 16 (புதன்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு இரண்டு யூ டியூப் சேனல்கள் (வலைப்பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல்) மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த கேம் ஷோ மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கும். வெவ்வேறு சுற்றுகளில் 10 கேள்விகள் (திரைப்படங்களை பற்றிய கேள்விகள், பாடல்கள், வசனங்கள், ஆடியோ வெளியீட்டு பேச்சுகள் உள்ளிட்டவை) கேட்கப்படும்.

லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களை கொண்டாடவும், அவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கவும் நேரலையில் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது.

நீங்கள் உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகராக இருந்தால், இது உங்களுக்காக கேம் ஷோ. தவற விடாதீர்கள். கலந்து கொண்டு விஜய்யை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் அவர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும் காட்டுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

தொடக்க நிகழ்ச்சியை செப். 16 (புதன்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு வலைபேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேன்ல்களில் பார்க்கவும்.

முதல் எபிசோட்: செப் 19 அன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேற்கண்ட சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
தவறவிடாதீர்!

SEVEN SCREEN STUDIO & CINEMA CENTRAL Presents A Game Show to Select the WORLD’S BIGGEST FAN OF THALAPATHY VIJAY

அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை சூர்யா செய்திருக்கிறார்.. – தங்கர் பச்சான்

அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை சூர்யா செய்திருக்கிறார்.. – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya Thangar Bachchanநீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். இதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா கண்டனம் தெரிவித்தார்.

தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
இவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது?

கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள்தான் முதல் தலைமுறையாக கல்வி பெற்று மருத்துவர்களாக உயர்ந்தார்கள். அத்தகையவர்களால்தான் தான் இன்று மருத்துவ சேவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

இதனை ஒழிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீட் தேர்வு எனும் அநீதி தேர்வு முறையை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நின்று போராடி தீர்வை கண்டிருக்க முடியும்! ஆனால் அதை செய்யத் தவறிவிட்டார்கள்.

எதிர்வரும் தேர்தல் கூட்டணியை மனதில் கொண்டு தனித்தனியாக எதிர்ப்புகளை தெரிவித்து ஆழ்ந்த இரங்கல் செய்திகளை தெரிவிப்பதாலும், பண உதவியும் அளிப்பதாலும் மாணவர்களை இந்த சதியில் இருந்து காப்பாற்ற முடியாது.

ஏழைப் பிள்ளைகள் 12 பேர்களை இதுவரை நீட் தேர்வு பலி கொண்டிருக்கிறது! உள்ளக்குமுறலில்,வேதனையில், கோபத்தின் உச்சத்தில் உள்ள தமிழக மக்களின் மனங்களுக்கு திரைப்பட நடிகர் சூர்யா அவர்களின் அறிக்கை ஆறுதலையும் நம்பிக்கையும் அளித்திருக்கின்றது.

தமிழகத்தின் அரசியல்வாதிகள் செய்யவேண்டிய வேலையை ஒரே அறிக்கையில் சூர்யா செய்திருக்கிறார் என மக்கள் நினைக்கிறார்கள்.

இக்கருத்து சூர்யாவின் கருத்தாக மட்டும் இருந்திருந்தால் தமிழகம் இந்த கொதிநிலையை அடைந்திருக்காது. அதில் உள்ள அனைத்து கருத்துகளும் மக்களின் மனதில் இருப்பவை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை! இந்நேரத்தில் நம் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.

அனைத்துக் கட்சியினரும் எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னலம் மறந்து தங்கள் பகை மறந்து மக்களுக்காக ஒன்றிணைந்து இதில் உடனடியாக வெற்றி காண வேண்டும்.

Director Thangar Bachchan supports Actor Suriya

தளபதி விஜய் ரசிகர்களுக்கு கேம் ஷோ..; தனஞ்செயன் தந்த இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய் ரசிகர்களுக்கு கேம் ஷோ..; தனஞ்செயன் தந்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer dhananjayanஇளைய தளபதி நடிகர் விஜய்க்கு தென்னிந்தியாவில் உள்ள ரசிகர்கள் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது அவர்களை மகிழ்விக்க தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் 13 வாரங்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு கேம் ஷோ நடத்தவுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என நம்பலாம்.

Producer dhananjayan anounces game show for vijay fans

சூர்யாவை போல் ரஜினி கமல் விஜய் அஜித் மாணவர்கள் பக்கம் நிற்பார்கள் என நம்பும் உதயநிதி

சூர்யாவை போல் ரஜினி கமல் விஜய் அஜித் மாணவர்கள் பக்கம் நிற்பார்கள் என நம்பும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinநீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற்றது.

மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்…

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.

மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.

மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.

என்று வேதனையுடன் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் உதயநிதி குரல் கொடுத்துள்ளார்.

மேலும் அவரின் ட்வீட்டில்… உச்ச நட்சத்திரங்கள் ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில்…

கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துகள்.

பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்! #BanNEET_SaveTNStudents

udhayanidhi stalin requests top stars

68 ஆண்டுகளை கடந்த தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று

68 ஆண்டுகளை கடந்த தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SIAA68 ஆண்டுகளை கடந்த தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று.

’தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிரமணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’
என்ற அமைப்பை ஆரம்பித்தார்.

அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பல கலைஞர்களும் உறுப்பினர்களாய் இருந்தனர்.

மதுரையில் முதன்முதலாக தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்’ என்கிற சங்கத்தின் நாடக கலைஞர்களுடன்,
திரையுலகில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு இருந்தது.

1950களில், தமிழகத்தில் இயங்கி வந்த ஸ்டூடியோக்களில்
தமிழ்ப்படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற பன்மொழிப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

4 மொழிகளிலும் தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கு வசதியாக துவக்கப்பட்டதுதான் ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’. ஆரம்பத்தில், அவர்களுக்கான
குறைந்தபட்ச ஊதியத் தொகையைப் பெற்றுக் கொடுக்கும் அமைப்பாக இச்சங்கம் செயல்பட்டது.

அப்போது நடைப்பெற்ற கூட்டத்தில், நடிகர்களையும் இணைக்கும் வகையில் எம்.ஜி.ஆர், “என்னைப் போன்றவர்கள் அதில் சேரலாமா?’’ என கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னரே, ’தென்னிந்திய துணை நடிகர் சங்கம்’ 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி அன்று ‘தென்னிந்திய நடிகர் சங்கமாக பெயர் மாற்றம்
பெற்றது.

சங்கம் தொடங்குவதற்கான நன்கொடையாக முதலில் எம்.ஜி.ஆர் தந்தது 501 ரூபாய். இதையடுத்து மருதநாட்டு இளவரசி, மர்மயோகி, சர்வாதிகாரி படங்களுக்குப்
பிறகு அந்தமான் கைதி, என் தங்கை போன்ற படங்களில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் ஜொலிக்க ஆரம்பித்தார்.

இதன் பின்னர் 1953ம் ஆண்டு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரானார் எம்.ஜி.ஆர். ‘மலைக்கள்ளன்’ படம் வெளிவந்து பெரும்
வெற்றியைப் பெற்றபோது, 1954ம் ஆண்டு பொதுச்செயலாளரானார்.

அப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிக் கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் விதத்தில், நான்கு குழந்தைகளை
ஒரு தாய் அரவணைக்கிற மாதிரியான லோகோவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.

சங்கத்தில் இணையும் புதிய உறுப்பினராக சேர சந்தா தொகை கொடுக்க முடியாத நடிகர்களுக்கு, எம்.ஜி.ஆர், தன்னுடைய சொந்த பணத்தைச் செலுத்தக்கூடிய
அளவுக்கு அக்கறை கொண்டிருந்தார்.

மொழி ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அத்தனை விழாக்களிலும் எம்.ஜி.ஆருடன் கன்னட நடிகர் ராஜ்குமார்,
மலையாள நடிகர் பிரேம்நசீர், எம்.கே.ராதா, சிவாஜி கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து 1961ம் ஆண்டு, எம்.ஜி.ஆர், நடிகர் சங்கத் தலைவராக பதவி ஏற்றார். 1977 ல் எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக ஆனதும் நடிகர் சங்கத்
தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பொதுச்செயலாளராக இருந்தவர் மேஜர் சுந்தரராஜன். அந்த காலகட்டத்தில்,
எம்.ஜி.ஆரின் ஆலோனையின் பேரில் வங்கியில் கடன் பெற்று 1978 ல் உருவானது
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம். இதனை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்

கே.சுப்ரமணியமில் தொடங்கி, எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, விஜயகாந்த், ராதாரவி, சரத்குமார், நாசர் என்று பலருடைய
பங்களிப்புடன் கம்பீரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.

தற்போது நாசர் தலைமையிலான அணியின் பதவிக்காலம் முடிந்தும் கோர்ட் வழக்கு, கணக்கு முறைகேடல், நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்ட தாமதம் என பல காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

south indian artistes association completes 68 years

More Articles
Follows