30 புதுமுகங்களை ஒரே படத்தில் அறிமுகம் செய்யும் தனுஷ்

30 புதுமுகங்களை ஒரே படத்தில் அறிமுகம் செய்யும் தனுஷ்

Dhanush introducing 30 fresh faces in single movieதமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவை தன் நடிப்பால் கலக்கிய தனுஷ், தற்போது மலையாள சினிமாவிலும் கலக்கவிருக்கிறார்.

ஆனால் அங்கே ஒரு தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் என்பதை பார்த்தோம்.

டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க, சாந்தி பாலசந்திரன் நாயகியாக நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் நேஹா ஐயர் நடிக்கிறார்.

இப்படத்தை டாமினிக் அருண் இயக்க, தன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் 30 புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்யவிருக்கிறார்களாம்.

இப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush introducing 30 fresh faces in single movie

கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உதயநிதி ஸ்டாலின்

கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi stalinதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் வரிசையில் வாரிசு அரசியலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் திரைப்படங்களை தயாரித்து, இன்று பிஸியான நடிகராகவும் மாறிவிட்டார்.

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சரவணன் இருக்க பயமேன் படம் வருகிற மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த சமீபத்திய பேட்டியில் அவர் பேசும்போது…

தன் தாத்தா கலைஞரின் வசனத்தை பேசி, ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தாத்தா கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு ஆவணப்படமாக எடுக்கவிருக்கிறாராம்.

அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin going to make Kalaignar Karunanidhi life history documentary film

‘கடின உழைப்பின் வெற்றிக்கு என் குடும்பமே உதாரணம்..’ எஸ்ஏசி

‘கடின உழைப்பின் வெற்றிக்கு என் குடும்பமே உதாரணம்..’ எஸ்ஏசி

Hardwork will leads to Victory says Vijays father SA Chandrasekkarதமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என்ற பெயரெடுத்தவர் எஸ்ஏ. சந்திரசேகர்.

அண்மையில் இவர், பிரபலமான ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

எத்தனை சோதனைகள் வந்தாலும் விடாது உழைத்தால் நிச்சயம் முன்னேற முடியும்.

அப்படி கடினமாக நாங்கள் உழைத்தோம். அந்த உழைப்பின் வெற்றியால்தான் என் குடும்பமே முன்னேறியுள்ளது. அதற்கு நாங்கள்தான் உதாரணம்.” என்றார்.

Hardwork will leads to Victory says Vijays father SA Chandrasekkar

மூன்றும் முறையும் ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை

மூன்றும் முறையும் ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை

rajini vidya balanலைக்கா தயாரித்து வரும் 2.0 படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை ரஞ்சித் இயக்க, அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை தேர்வு நடந்து வருகிறது.

அண்மைகாலமாகவே பாலிவுட் நடிகைகளுடனே ரஜினி ஜோடியாக நடித்து வருகிறார்.

எனவே, இம்முறையும் பாலிவுட் பறந்துள்ளது படக்குழு.

பிரபல நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் மறுத்துவிட்டாராம்.

ரஜினியின் லிங்கா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கும் வாய்ப்பு வந்தும் அதை மறுத்தவர் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalaivar 161: Vidya Balan walks out of Rajini movie?

ரஜினிக்காக ரூ. 5 கோடி செலவில் தாராவி செட் போட்ட ரஞ்சித்

ரஜினிக்காக ரூ. 5 கோடி செலவில் தாராவி செட் போட்ட ரஞ்சித்

Ranjith made Mumbai Dharavi set for Rajini 161 movieவசூல் வேட்டை செய்த ‘கபாலி’ படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் ’2. 0’ படத்தில் நடித்துள்ளார் ரஜினி.

இப்படம் 2018 ஜனவரி 26இல் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் மே 28ம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்காக ரூ.5 கோடி செலவில் மும்பை தாராவி பகுதியை, அப்படியே உருவாக்கியுள்ளனர்.

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் வித்தியாசமான கெட்டப்பில் ரஜினி நடிப்பார் எனத் தெரிகிறது.

Ranjith made Mumbai Dharavi set for Rajini 161 movie

பாகுபலி2 வசூல் 1000 கோடி; ராஜமவுலிக்கும் ரசிகர்களுக்கும் பிரபாஸ் நன்றி

பாகுபலி2 வசூல் 1000 கோடி; ராஜமவுலிக்கும் ரசிகர்களுக்கும் பிரபாஸ் நன்றி

Baahubali Prabhasஇந்திய சினிமாவில் எந்த சினிமாவும் செய்யாத சாதனை பாகுபலி 2 விரைவில் செய்யும் என்பதை முன்பே பார்த்தோம்.

கடந்த ஏப்ரல் 28ல் வெளியான இப்படம் நேற்றோடு (மே 6, 2017) ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது.

இந்த வசூல் தகவலை பாகுபலி படக்குழு உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இப்பட நாயகன் பிரபாஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

என்னை அன்பு மழையால் நனைய வைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் அன்பை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் அன்பை ஈடுகட்ட என்னால் முடிந்த கடின உழைப்பை கொடுத்து பாகுபலி 2 படத்தில் நடித்தேன்.

என் மீது நம்பிக்கை வைத்து, இந்த வரலாற்று படைப்பில் எனக்கொரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் ராஜமௌலிக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார் பிரபாஸ்.

Prabhas thanks to Fans and Rajamouli for Baahubali2 collects 1000 crores

1000c baahubali2

More Articles
Follows