தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் தினம் தினம் நடந்து வருகிறது.
மக்களின் பிரச்சினையில் பங்கேற்கும் வண்ணம் நடிகர் சங்கம் மௌன போராட்டத்தை நடத்தியது.
இதில் சிவகுமார், இளையராஜா, எஸ்பி முத்துராமன், வைரமுத்து, கமல், ரஜினி, விஜய், சத்யராஜ், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
அப்போது மேடையேறிய பல பிரபலங்கள் ரஜினி, கமலிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
இளையராஜா அருகில் வந்தபோது கமல், ரஜினி ஆகியோர் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
அப்போது ரஜினி அருகில் இருந்த விஜய்யை அருகில் வர இழுத்தார்.
அப்போது விஜய்க்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தனக்கு அருகில் அந்த பக்கம் இருந்த தனுஷை இழுத்து விஜய்க்கு அருகில் நிற்க சொன்னார்.
தனுஷ் முதலில் மறுத்தபோதும் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார். உடனே தனுஷ்ம் வந்துவிட்டார். இவர்களுக்கு இடையில் எஸ்ஜே. சூர்யா நின்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் அனைவரும் இணைந்த வண்ணம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
இதுநாள் வரை தனுஷ்க்கும் சிவகார்த்திகேயனுக்கு உரசல் என சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இந்த காட்சியை பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
Dhanush and Sivakarthikeyan join together at Nadigar Sangam protest
(கீழே உள்ள போட்டோவில் பார்த்தால் தனுஷை சிவகார்த்திகேயன் இழுப்பது தெரியும்..)