தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் தங்கள் கூட்டணி பலத்தை நிரூபித்தனர் செல்வராகவன் – தனுஷ்.
இதன் பின்னர் பல ஆண்டுகளாக இந்த சகோதரர்கள் இணையவில்லை.
தற்போது ‘நானே வருவேன்’ படத்துக்காக இணைந்து பணிபுரிகின்றனர்.
தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்பட அறிவிப்பு வெளியாகும் முன்பே ரசிகர்களே எதிர்ப்பார்க்காத வண்ணம் இந்தக் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை அறிவித்தது.
ஆனால் 2024ல் ஆண்டில்தான் படம் வெளியாகும் என அறிவித்தனர்.
படத்தின் தயாரிப்பாளர் தான் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘புதுப்பேட்டை 2’ படத்தில் செல்வராகவன் – தனுஷ் இணைந்து பணிபுரியவுள்ளனர்.
இந்த 2 படங்களை முடித்துவிட்டே ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பட பணிகளை தொடங்கவுள்ளார் செல்வராகவன்.
Dhanush and Selvaraghavan joins for new movie again