ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் ‘தேவி 2’ !!

ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் ‘தேவி 2’ !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (12)பொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. ‘பேய்’ படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேவி 2 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இயக்குனர் விஜய் இது குறித்து கூறும்போது, “நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கோடை விடுமுறை என்பது எப்போதுமே குடும்ப பார்வையாளர்களுக்கானது, அவர்கள் திரையரங்குகளுக்கு வந்து நல்ல பொழுதுபோக்கு படங்களை ரசிக்கிறார்கள். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். எல்லோருக்கும் பிடிக்கும் காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. பிரபுதேவா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பை அளித்த பிரபு தேவா சாருக்கு நன்றி. அவரது எனர்ஜி அபாரமானது, முதல் பாகம் போலவே இந்த படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார். தமன்னா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு ரசித்தார்கள் என்பது அவருக்கு தெரியும். இந்த படத்தில் அதை விடவும் சிறப்பாக நடிக்க முயற்சிகள் எடுத்தார். இந்த குழுவில் இருந்த எல்லோரும் அளித்த சிறந்த பங்களிப்பு தான் குறித்த காலத்தில் படத்தை முடிக்க காரணமாக இருந்தது. இந்த கோடைகாலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தில், நந்திதா ஸ்வேதா உட்பட பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஐயப்பனுக்காக இணையும் ஏஆர். ரஹ்மான்-சந்தோஷ் சிவன்-அனுஷ்கா.?

ஐயப்பனுக்காக இணையும் ஏஆர். ரஹ்மான்-சந்தோஷ் சிவன்-அனுஷ்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayyappan movieஅண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட விவகாரங்களில் ஒன்று கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான்.

இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கேரளாவில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

இருந்தபோதிலும் 2 பெண்கள் சன்னிதானத்திற்கு சென்று வந்துள்ளதால் அந்த சர்ச்சை தற்போது வரை நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஐயப்பன் பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளதாம்.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் இதில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார் .

இப்படத்திற்கு இசையமைக்க ஏஆர். ரஹ்மானை அனுகியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி-நயன்தாரா-தமன்னா மெகா கூட்டணியில் ஸ்ருதிஹாசன்

விஜய்சேதுபதி-நயன்தாரா-தமன்னா மெகா கூட்டணியில் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)தெலுங்கு சினிமாவில் மிகப்பிரம்மாண்டமான சரித்திரப் படமாக ‘சைரா நரசிம்மரெட்டி’ உருவாகி வருகிறது.

இதில் சைரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி.

இவருடன் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, கன்னட நடிகர் சுதீப் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இதில் நாயகிகளாக நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

அண்மைல் சிரஞ்சீவி, தமன்னா நடித்த பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு கேரக்டரில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் ஓகே சொல்லிவிடுவார் என்றே தகவல்கள் வருகின்றன.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சித்தார்த்-ஜிவி.பிரகாஷ் கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சித்தார்த்-ஜிவி.பிரகாஷ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளது.

அச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானதை அடுத்து நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

குற்றவாளிகளை தண்டிக்காமல் விடக்கூடாது என அனைத்து தரப்பிலும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியியுள்ளன.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்தியால் அதிர்ச்சியடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

சமூக வலைத்தளங்களால் பெண்களை வேட்டையாடுவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார் சித்தார்த்.

ஜிவி. பிரகாஷ் கூறியுள்ளதாவது…

“இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது.

இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

மீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”

மீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

charu hasanட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நரேன், பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் “சித்திரம் பேசுதடி”. இப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.

இன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது.

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.

தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.

இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது “தாதா 87”.

காதலை கவிதைத்துவமாக சொல்லப்பட்ட தாதா 87 படத்தில் தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடினர்.

ஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

ஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raja bheema teamசரியான திட்டமிடலும், மிகச்சிறப்பான செயல்பாடும் ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களுக்கு பயணித்து படப்பிடிப்பு செய்தது ஒட்டுமொத்த குழுவுக்கும் மிகப்பெரிய சவாலான செயல்முறையாக இருந்தது. மொத்த படக்குழுவும் இப்போது படப்பிடிப்பை முடித்த திருப்தியில் இருக்கிறார்கள்.

“ஆம் உண்மையிலேயே பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார் இயக்குனர் நரேஷ் சம்பத்.

தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, செய்து கொண்டு இருக்கிறோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

எஸ்.மோகன் தயாரித்திருக்கும் இந்த ராஜபீமா திரைப்படம் வணிக அம்சங்கள் கலந்த, மனித, விலங்கு முரணை பேசும் ஒரு படமாக உருவாகியிருக்கிறது. ஆஷிமா நர்வால் நாயகியாக நடித்திருக்கிறார். ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.

More Articles
Follows