உண்மைச்சம்பவங்களால் உருவான “ தண்டுபாளையம்“

உண்மைச்சம்பவங்களால் உருவான “ தண்டுபாளையம்“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dandupalayamவெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ” தண்டுபாளையம் ”

சுமன்ரங்கநாத், முமைத்கான், பேனர்ஜி, D.S.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

ஒளிப்பதிவு – R.கிரி

வசனம் – கிருஷ்ணமூர்த்தி

இசை – ஆனந்த் ராஜா விக்ரம்

பாடல்கள் – மோகன்ராஜ்

கலை – ஆனந்த் குமார்

ஸ்டண்ட் – kunfu சந்துரு

நடனம் – பாபா பாஸ்கர்

எடிட்டிங் – பாபு ஸ்ரீவஸ்தா, பிரீத்தி மோகன்

தயாரிப்பு – வெங்கட்

இயக்கம் – K.T. நாயக்

படத்தை ஸ்ரீ லட்சுமிஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி உலகமெங்கு டிசம்பர் மாதம் வெளியிடுகிறார்.

படம் பற்றி இயக்குனர் K.T.நாயக் கூறியதாவது..

இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் பட்டுள்ள படம். 1990 களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்து உருவான ஒரு கொள்ளை கும்பல் நாளடைவில் ஆசியாவிலேயே அதிக திருட்டு,கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்திய கொடூர கும்பலாக மாறியது. அந்த கேங்கின் உண்மைச் சம்பவங்களை திரட்டி இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளோம்.

இந்த தண்டுபாளையம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடா ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, மராட்டி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

“கருத்துகளை பதிவு செய்” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன்

“கருத்துகளை பதிவு செய்” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karuththukkalai pathivu seiசமூக வளைதளங்களில் பெண்கள் சிக்கி எப்பேற்பட்ட வகையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ற மைய கருத்தை முன்வைத்து கருத்துகளை பதிவு செய் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த படத்தினை ஜித்தன்2 மற்றும் 1am படங்களை இயக்கிய இயக்குநர் ராகுல் பரமகம்சா இயக்கியுள்ளார். பழம்பெரும் நடிகரான SSR.ராஜேந்திரன் அவர்களின் பேரன் SSR.ஆர்யன் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை உபாசனா நடித்துள்ளார்..மேலும்
இப்படத்தில் இணை தயாரிப்பு விநியோகஸ்தர் JSKகோபி மற்றும் இசையமைப்பாளர் கணேஷ்ராகவேந்திரா பின்னணி இசை பரணி என பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.திருமாவளவன் அவர்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்…படத்தின் டிரெய்லரை பார்த்த அவர் படக்குழுவையும், இயக்குநர் ராகுலையும் வெகுவாக பாராட்டினர்.இம்மாதிரியான படங்கள் தற்போதுள்ள சமூக சூழ்நிலையில் தேவை என்றார்..
கடந்த வாரம் இத்திரைப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பப்பட்டது .படத்தை பார்த்த சென்சார் தலைமை அதிகாரி திருமதி.லீலா மீனாட்சி அவர்களும் படத்தின் இயக்குநரை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிராஜின் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கியது !

சிபிராஜின் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

walter shootingநடிகர் சிபிராஜ் கதை நாயகனாக நடிக்கும் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். U. அன்பரசன் இயக்கத்தில் தொடக்கம் முதலே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்தப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழர் வரலாற்றில் ஆன்மீக புகழ் கொண்ட கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான திரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஷூட்டிங் முழுதும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகிறது

11:11 Production சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் ஸ்ருதி திலக் கூறியதாவது…

இப்படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் அன்பரசன் திரைகதையை சொனனது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் அழகாக படம்பிடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன் படத்தின் கதையை கேட்டு அதிலுள்ள ஆக்‌ஷன் காட்சிகளின் காரணமாக படத்தின் ஷூட்டிங் தேதிகள் சில நாட்கள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அயராது உழைப்பில் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டது. இந்த அற்புதமான படக்குழுவே அதற்கு காரணம். படத்தின் டப்பிங் பணிகளை இப்போது துவக்கியுள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளையும் தீவிரமாக முடித்து படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவோம் என்றார்.

11:11 Production சார்பில் ஸ்ருதி திலக் “வால்டர்” படத்தினை தயாரிக்கிறார். பரபர திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக நடிக்கிறார். சமுத்திரகனி, ஷனம் ஷெட்டி, ரித்விகா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நட்சத்திரங்கள் அணி வகுக்கும் டிக்கிலோனா

நட்சத்திரங்கள் அணி வகுக்கும் டிக்கிலோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dikkilonaசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்‌ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட.

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் தலைப்பு வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.

அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை. தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கிறார். நாயகன் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ரசிகனை நம்ப வைக்கும் விதமாக கொரியோகிராபி செய்யும் தினேஷ் சூப்பராயன் சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் பாடல்களை எழுதுகிறார்கள். ஆர்ட் டைரக்டராக A. ராஜேஷ் பணியாற்றுகிறார்.

மிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

சங்கத்தமிழன் பிரச்னை என்ன நடந்தது?; லிப்ரா நிறுவனம் விளக்கம்

சங்கத்தமிழன் பிரச்னை என்ன நடந்தது?; லிப்ரா நிறுவனம் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanga thamizhanகிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம்

இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் திரு.சுந்தர் , திருமதி .பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்

இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் திரு.அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய திரு. JSKகோபி , திரு.தேணாண்டாள் முரளி , திரு H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்

இதுவரை இல்லாத அளவு இந்த படத்தை மிகப்பிரமாண்டமாக ரிலிஸ் செய்யலாம் என்று போராடிக்கொண்டிருக்கும் போதே , படத்திற்கு நெல்லையில் தடை , லிப்ராவிற்கு டெப்ஸிட் , இடையே திடீரென்று எங்கள் நாயகன் திரு. விஜய்சேதுபதி அவர்களின் என்றும் தீரா பிரச்சனை என்ற இண்டர்வியூ இவற்றிற்கிடையே எங்களுடைய ஒரே நோக்கம் படத்தை வெளிகொண்டுவருவது மட்டுமே

ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள் , கேலிகள் , அவமானங்கள் , புறக்கணிப்புகள் ஆனால் எது நடந்தாலும் இந்த லிப்ரா புரொடக்சன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை

ஒருத்தங்க மேல ஈசியா குற்றச்சாட்டை சொல்லிவிட்டு கேலிசெய்துவிட்டு போய்விடலாம் , ஆனா அவர்களுக்கான பதிலை காலம் நின்றுசொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது எங்களுக்கு, எங்களுடைய ஒரே நோக்கம் எடுத்த வேலையை ஒழுங்காக செய்து அதை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வது மட்டுமே அதை எப்போதும் லிப்ரா செய்துகொண்டுதான் இருக்கும்

நன்றி
இவன்

#LIBRAProduction

தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி

தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani and rajamouliநடிகர்கள் ஜீனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஆர்ஆர்ஆர்.

இந்த படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார்.

எனவே சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

இதனையடுத்து ரவி தேஜா நடிக்கவுள்ள வேறு ஒரு படத்திலும் அவருக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம் சமுத்திரக்கனி.

இதனை கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தில் ரவி தேஜா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிக்க அந்த படத்தை சமுத்திரகனி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows