தான் ஹீரோவாக நடித்த பட ரிலீசை தள்ளிவைத்த டான்ஸ் மாஸ்டர் சாண்டி

தான் ஹீரோவாக நடித்த பட ரிலீசை தள்ளிவைத்த டான்ஸ் மாஸ்டர் சாண்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி.

இவரும் பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் வரிசையில் தற்போது ஹீரோவாகியுள்ளார் என்பதை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

சாண்டி கதாநாயகனாக நடித்துள்ள படம் 3.33. இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரிலீஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dance master Sandy postponed his movie release

ராமராஜனுக்கு என்ன ஆச்சு..? திடீர் அறிக்கை.. ரசிகர்கள் கரகாட்டம்.

ராமராஜனுக்கு என்ன ஆச்சு..? திடீர் அறிக்கை.. ரசிகர்கள் கரகாட்டம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் கிராமத்து ராஜன் என்றால் அது ராமராஜன்தான்.

எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல கிராமத்து கதைகளில் நடித்து பட்டி தொட்டி எஙகும் பிரபலமானவர் நடிகர் ராமராஜன்.

இவரது படங்கள் வசூலில் ரஜினி கமல் படங்களுக்கு போட்டியாக பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென ரஜினி போட்டியில் இருந்து இவர் காணாமல் போனர்.

பின்னர் ஜெயலலிதா ஆதரவுடன் தமிழக அரசியலில் ஈடுப்பட்டார். இவர் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது.

தற்போது ராமராஜன் சார்பில் அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் : ‛‛ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். அவர் பூரண நலத்துடன் இருக்கிறார்.

இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். ராமராஜன் உடல் நலத்துடனும், மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கலந்து கொள்வார்” என தெரிவித்துள்ளனர்.

ராமராஜனின் இந்த அறிக்கையால் அவரது ரசிகர்கள் கரகாட்டம் ஆடினாலும் ஆடுவார்கள்… வாங்க ராசா.. உங்க படத்த பாத்து எவ்வளவு நாளாச்சு..?!

Actor Ramarajan’s press statement on his health

இறங்கி விடலாம்தான். ஆனால்..; ‘அண்ணாத்த’ உடன் மோதலில் இருந்து விலகியது ‘மாநாடு’

இறங்கி விடலாம்தான். ஆனால்..; ‘அண்ணாத்த’ உடன் மோதலில் இருந்து விலகியது ‘மாநாடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இந்த படம் உள்ளதால் மற்ற படங்கள் / நடிகர்கள் ரஜினியுடன் மோத மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் அதே நாளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சில நாட்களில் அருண் விஜய் நடித்த ‘வா டீல்’ மற்றும் ஆர்யா விஷால் இணைந்து நடித்து ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களும் நவம்பர் 4ல் ரிலீசாகும் என அறிவித்தனர்.

நவம்பர் 2ஆம் தேதி சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி திருநாளில் ரிலீசாகாது என அப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவரின் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது…

அந்த அறிக்கையில்…

திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் “மாநாடு”.

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்து விட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம்.

அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துக் கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக் கூடாது.

சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்??

ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.

நவம்பர் 25ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது.

வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

– சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்

Maanaadu – Release postponed to November 25th

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தால் டான்ஸ் மாஸ்டர் லலிதா ஷோபிக்கு கிடைத்த கௌரவம்

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தால் டான்ஸ் மாஸ்டர் லலிதா ஷோபிக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல், சுஃபியும் சுஜாதாவும் மலையாள திரைப்படம், டான்ஸ் மாஸ்டர் லலிதா ஷோபி, நடன இயக்குனர் லலிதா ஷோபி மலையாள சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது.

நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில்,…

“இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை. நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில், இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு கூறியிருந்தனர். அது இன்று நிறைவேறியுள்ளது.
கடவுளுக்கு நன்றி

மேலும் `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்

Lalitha Shobi wins best choreographer award at Kerala film festival

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படமாக #கட்டில் தேர்வு

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படமாக #கட்டில் தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.

இதில் இந்திய சிறந்த திரைப்படமாக கர்ணன் தேர்வு பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

அதன் நிறைவு விழாவில் நேற்று (17.10.21) சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் சர்வதேச விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.

விரைவில் தியேட்டர்களில் கட்டில் திரையிடப்படும் என்று இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்

Kattil won best film award at Bengaluru film festival

நண்பர்கள் தயாரிக்கும் படத்திற்காக ‘லத்தி’ (சார்ஜ்) எடுத்த விஷால்

நண்பர்கள் தயாரிக்கும் படத்திற்காக ‘லத்தி’ (சார்ஜ்) எடுத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர்களும் நடிகர்களுமான ரமணா, நந்தா இணைந்து உருவாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் ராணா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் விஷால் நடித்து வருகிறார்.

இவர்கள் மூவரும் இணையும் புதிய படத்திற்கு “லத்தி” என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது.

விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகும் #எனிமி படத்தின் தமிழ்,தெலுங்கு டப்பிங் வேலைகள் செய்து வருகிறார்.

இத்துடன் #வீரமே வாகை சூடும் படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து “லத்தி” படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறும்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க இளையதிலகம் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தாமிரபரணி, ஆம்பள படத்திற்கு பிறகு பிரபு விஷால் இணைந்து நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.
வசனம்: A.வினோத் குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப்சுப்பராயன் ஸ்டண்ட் காட்சி அமைக்கிறார்.
எடிட்டிங்:N.B.ஶ்ரீகாந்த் செய்ய கலை பணிகளை எஸ்.கண்ணன் செய்து வருகிறார்.

Rana Productions first movie Vishal 32 is now titled Laththi

More Articles
Follows