பிரபுதேவா & லாரன்ஸ் போல் வர ஆசைப்பட்டு ஹீரோவான சாண்டி.; கௌதம் மேனனுடன் கூட்டணி

பிரபுதேவா & லாரன்ஸ் போல் வர ஆசைப்பட்டு ஹீரோவான சாண்டி.; கௌதம் மேனனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

பிரபல நடன இயக்குனர் சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

3.33 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்த நிலையில், வரும் அக்டோபர் 21 ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பட வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

Bamboo Trees Productions சார்பில் தயாரிப்பாளர் T. ஜீவிதா கிஷோர் பேசியதாவது…

இந்தப் படத்தின் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். இது முழுமையான ஹாரர் படமாக இருக்கும். சாண்டி அண்ணாவிடம் நீங்கள் எதிர்பார்த்தது இதில் இருக்காது முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள், கௌதம் மேனன் சார் மிகப்பெரும் ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படம் அக்டோபர் 21 ந்தேதி வருகிறது. அனைவரும் தியேட்டர் வந்து பார்த்து ரசியுங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரன் பேசியதாவது…

இப்படம் முழுக்கவே சீரியஸான ஹாரர் மூவி, சாண்டி மாஸ்டர் எங்கேயும் காமெடி செய்திருக்க மாட்டார். நம்பிக்கை சந்துரு மிக வித்தியாசமான திரைக்கதை செய்துள்ளார். படத்தை அனைவரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பேசியதாவது…

இது எனக்கு இரண்டாவது படம், சந்துருவுடன் முதல் சந்திப்பே வித்தியாசமாக இருந்தது. கதை சொல்லும் போதே நடித்து காட்டி சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறிது காலம் அவரை காணவில்லை திரும்ப வந்து, அவரது அக்கா தயாரிக்கிறார் என்று சொன்னார்.

இப்படத்தில் இசையில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சதீஷ் சூப்பராக ஒளிப்பதிவு செய்திருந்தார். சாண்டி மாஸ்டர் இப்படத்திற்கு பிறகு பெரிய இடத்திற்கு செல்வார். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நாயகி ஸ்ருதி செல்வம் பேசியதாவது…

என்னோட நடிப்பு, குறும்படம் மற்றும் ஆல்பமில் தான் தொடங்கியது, ஆரம்பத்தில் ‘நீயெல்லாம் ஏன் நடிக்கிற’ என்று தான் கேட்டார்கள். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டு தான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன்.

சாண்டி மிகப்பெரிய ஆதரவை தந்தார். நடிக்கும் போது மிக உதவியாக இருந்தார். நம்பிக்கை சந்த்ரு கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது. இந்தப் படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். Bamboo Trees Productions நிறுவனத்தின் தூண் T.ஜீவிதா கிஷோர் தான். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.

நாயகன் சாண்டி பேசியதாவது…

3:33 நாயகனாக எனது முதல் படம் இது. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதை கேட்டேன், ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்த போது, சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை சொல்லும் போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்து, கதை சொன்னார்.

இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் வேணும் என்றார் சந்துரு. இந்தப்படத்தின் உண்மையான நாயகன் சந்துரு தான்.

இந்தப்படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்து காட்டியதில் 50 சதவீதம் தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். நான் நடிக்கிறேன் என சொல்லும் போது, நிறைய பேர் வேண்டாம் என்றார்கள். நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள் என்றார்கள்.

ஆனால் எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை. படம் ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள். தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தை சம்பாதித்து தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் தான் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.

இயக்குநர் நம்பிக்கை சந்துரு பேசியதாவது…

என் வாழ்க்கையில் இயக்குநராக நிறைய முயற்சி செய்தேன். மூன்று படங்கள் அடுத்தடுத்து டிராப் ஆனது. என் குடும்பம் தான் என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப்படத்தை எடுக்கலாம் என்றார்கள்.

சொந்த முயற்சி எனும் போது, யாரை வைத்து செய்யலாம் என யோசித்த போது, சாண்டி மாஸ்டர் ஞாபகம் வந்தது. அவரிடம் தயங்கி தான் போனேன் ஆனால் கட்டியணைத்து கதை கேட்டு பாராட்டினார்.

இசையமைப்பாளரிடம் இது என் வாழ்க்கை என்னிடம் இப்போது பணம் இல்லை உதவுங்கள் என்றேன். கதை கேட்டு என்னை பாராட்டி அருமையான இசையை தந்தார். ஒளிப்பதிவாளர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் வைத்த முதல் ஷாட்டிலேயே பிரமித்து விட்டேன்.

கௌதம் சார் இப்படத்தில் வந்தது ஒரு ஆக்ஸிடெண்ட் தான். பாரா நார்மல் இன்வெஸ்டிகேட்டராக வருகிறார்.”

இவ்வாறு பேசினார் சந்துரு.

Dance Master Sandy speech at Moonu Muppathi Moonu press meet

வித்தியாசமான லுக்கில் லட்சுமி மேனன் AGP பர்ஸ்ட் லுக்.: இது என்ன நோய் தெரியுமா.?

வித்தியாசமான லுக்கில் லட்சுமி மேனன் AGP பர்ஸ்ட் லுக்.: இது என்ன நோய் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் பிரபு, கார்த்தி, சசிகுமார், விஷால், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் லட்சுமி மேனன்.

இவரது நடிப்பில் வெளியான கும்கி, பாண்டியநாடு, கொம்பன், ஜிகர்தண்டா, வேதாளம் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படமான புலிகுத்தி பாண்டி படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

தற்போது லட்சுமி மேனனின் புதிய பட ‘ஏஜிபி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி உருவாகும் இப்படமானது முதல் பெண் ஸ்கிசோஃபிரினியா திரைப்படம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ள ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா படத்தில் லட்சுமிமேனன் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சந்திர குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Lakshmi menon in the First Look Poster of the first female Schizophrenia Tamil movie

சினிமா தொழிலாளர்களின் நிஜ கனவை நிறைவேற்ற லட்சங்களில் உதவிய மருந்து நிறுவனம்

சினிமா தொழிலாளர்களின் நிஜ கனவை நிறைவேற்ற லட்சங்களில் உதவிய மருந்து நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா 31 லட்ச ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கியது.

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா, தரமான மருந்துகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கி வரும் சர்வதேச நிறுவனம். இந்நிறுவனம் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன் மட்டுமல்லாமல், லாபநோக்கமற்ற வகையில் சமூக சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,…

”இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமாக திகழும் எங்கள் நிறுவனம், சமூக மேம்பாட்டிற்காக முன்னுதாரணமான சில நிகழ்வுகளில் பங்காற்றி வருகிறது.

அந்த வகையில் எங்கள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து செயல்படத் தொடங்கியிருக்கிறது.

திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கட்டுமானத்திற்காக 31 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறது.

பெஃப்ஸி என்பது தமிழ்நாட்டில் திரைப்படத் துறையில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இயங்கி வரும் அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமாகும். இந்த சங்கத்தின் உறுப்பினராக இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த நலத்திட்ட உதவி, கொரோனா காலகட்டத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு உதவும் வகையிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. இது சங்க உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

எங்கள் நிறுவனம், சமூக முன்னேற்றத்திற்காக தன்னலமற்று இயங்கிவரும் நிறுவனம். பாமர மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக நம்பிக்கையுடன் சேவையாற்றி வருகிறது. மேலும் பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்தத் தொகையுடன் மேலும் அவர்கள் தேவைகளை அறிந்து தொடர்ந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” .

இதனிடையே பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய விழாவில், இந்நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு, 31 லட்ச ரூபாய் நன்கொடையை திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட விவரத்தை சம்மேளனத்தின் தலைவரான ஆர் கே செல்வமணியிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Man Kind pharma donated Rs 31 lakhs to fefsi

‘கிரிமினல்’ படத்துக்கு இசையமைத்த ஆப்பிள் – பைனாப்பிள்.; தாணு & விஜய்சேதுபதி ஆதரவு

‘கிரிமினல்’ படத்துக்கு இசையமைத்த ஆப்பிள் – பைனாப்பிள்.; தாணு & விஜய்சேதுபதி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP , தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’.

அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாகும்.

நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது.

ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்ததையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார்.

அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், த்ரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்.

‘கிரிமினல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் சேதுபதி வெளியிட்டதால், இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டைடில் லுக் போஸ்டரை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் – பைனாப்பிள் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் குமார் டொர்னாலா ஒளிப்பதிவு செய்கிறார்.

பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய,மோகன் பி.கேர் கலையை நிர்மாணிக்கிறார். சசி துரை தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓவாக பணியாற்றுகிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கிரிமினல்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Vijay Sethupathi and Thanu supports Criminal

இண்டர்நெட்டை சூடாக்கிய சூர்யாவின் ‘ஜெய் பீம்’ மோஷன் போஸ்டர்

இண்டர்நெட்டை சூடாக்கிய சூர்யாவின் ‘ஜெய் பீம்’ மோஷன் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம், கண் கவரும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் வெளியாகிறது.

இந்தப் படத்தை டிஜே ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இதில் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பதே.

இந்த மோஷன் போஸ்டர், படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது.

உயர்ந்த ஆளுமைகளின் உருவப்படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது.

மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இந்த போஸ்டர் காட்டுகிறது.

தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைதயாரிப்பை கவனிக்கிறார்.

நவம்பர் 2ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

Amazon Prime Video UNVEILS AN INTRIGUING MOTION POSTER OF SURIYA’s UPCOMING FILM ‘JAI BHIM’

JUST IN அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க..; ஆயுதபூஜைக்கு ‘அண்ணாத்த’ தரும் வெறித்தனமான விருந்து

JUST IN அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க..; ஆயுதபூஜைக்கு ‘அண்ணாத்த’ தரும் வெறித்தனமான விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அன்று மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது.

இதன்பின்னர் அண்ணாத்த பாடல்… சாரல் சாரல் காத்து ஆகிய பாடல்களும் வெளியானது. ரஜினி மிக இளமையாக இருப்பதாக ரசிகர்கள் & மக்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது ”அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 மாலை 6 மணிக்கு டீசர் என அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி ரவுடிகளை அடித்து விட்டு மாஸாக நடந்து வருகிறார்.

Arangam Mulukka therikka therikka!
#AnnaattheTeaser is releasing on October 14 @ 6 PM

@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @actorsathish @AntonyLRuben @dhilipaction @vetrivisuals https://t.co/SRvplKautv

Rajinikanth’s Annaatthe Teaser release announcement

More Articles
Follows