சினிமாவில் ஹர்பஜன் சிங்; சந்தானத்தின் ‘டிக்கிலோனா’வில் கூட்டணி

சினிமாவில் ஹர்பஜன் சிங்; சந்தானத்தின் ‘டிக்கிலோனா’வில் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cricketers Harbhajan Singh to make his Tamil debut with Santhanamஇந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் ஹர்பஜன் சிங்குக்கு தனிப்பெயர் உண்டு. மேலும் இவர் தமிழக சினிமா ரசிகர்களிடையே படு பிரபலம்.

அதற்கு காரணம்… இவர் அப்போது ட்விட்டரில் தனது பதிவுகளை தமிழ் மொழியில் பதிவிடுவார்.

இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்… என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டுடியோஸ், டிக்கிலோனா படக்குழு, சந்தானம் உள்ளிட்டோருக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சந்தானம் மூன்று கேரக்டர்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்குகிறார்.

Cricketers Harbhajan Singh to make his Tamil debut with Santhanam

அஜித் படத்தில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் தேவை.?; கடுப்பான போனி கபூர்

அஜித் படத்தில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் தேவை.?; கடுப்பான போனி கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

boney kapoorநேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் அஜித்துடன் இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தல 60 எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என ஒரு விளம்பரம் வேகமாக பரவியது.

ஆனால் இதை படத்தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

இப்படியொரு தவறான செய்தியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

பிகில் டிரைலரை பாராட்டிய ராஜபக்சே மகன்; விஜய் ரசிகர்கள் கடுப்பு

பிகில் டிரைலரை பாராட்டிய ராஜபக்சே மகன்; விஜய் ரசிகர்கள் கடுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Namal Rajapaksheஅட்லி இயக்ககத்தில் விஜய் நடித்துள்ள பிகில் பட டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி வெளியானது.

இந்த டிரைலரை ஒரு சிலர் நெகட்டிவ்வாக விமர்சித்தாலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த ட்ரெய்லரை பாராட்டி, இலங்கை ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே ட்விட் செய்துள்ளார்.

அதில், தேர்தலுக்கு பின் முடிவுக்காக காத்திருக்கவேண்டும், ஆனால் எனக்கு பிடித்த விஜய்யின் புதிய படம் பிகில் இந்த மாதம் ரிலீசாகிறது, அதனை பார்க்க காத்திருக்க முடியவில்லை.

கட்டாயம் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கொண்டாட்டம் தான்.’ என பதிவிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் அவரை அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

அதில் சில பதிவுகள் இதோ…

விஷால் திருமணம் எப்போது.? ஜிகே ரெட்டி ஓபன் டாக்

விஷால் திருமணம் எப்போது.? ஜிகே ரெட்டி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishalநடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் தன் திருமணம் என விஷால் அறிவித்திருந்தார்.

அதன்படி விஷாலுக்கும்; பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டிக்கும், கடந்த மார்ச் 18ல், நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் விஷாலின் கெட்ட காலமோ என்னவோ? பல மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லை.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே சங்க கட்டிட பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் விஷாலின் திருமணம் பற்றி ஜிகே ரெட்டி பற்றி கூறியதாவது…

“நடிகர் சங்கத் தேர்தல்கள் ஓட்டுக்கள் எப்போது எண்ணப்படும் என தெரியவில்லை. எப்போது இருந்தாலும் விஷால் அணி வெற்றி பெறும்.

அதன்பின்னர் கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் விஷால் திருமணம் பார் போற்ற நடைபெறும். அதுவரை பொறுமை தேவை.” இவ்வாறு ரெட்டி கூறியிருக்கிறார்.

90 வயதிலும் நடிக்கும் சாருஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்க விஜய்ஸ்ரீ கோரிக்கை

90 வயதிலும் நடிக்கும் சாருஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்க விஜய்ஸ்ரீ கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DhaDha 87 director Vijaysris request to TN Govtதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் சாருஹாசன். தேசிய விருதுகளையும் பல மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.

இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவருக்கு தற்போது 90 வயது ஆகிறது.

சில காலங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவரை தாதா 87 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

பெண்களை அனுமதியின்றி தொடுவது குற்றம் என்ற எச்சரிக்கை வாசகம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த படம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றது.

இந்த நிலையில் சாருஹாசனுக்கு மத்திய அரசின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட வேண்டும், அதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

90 வயதிலும் தொடர்ந்து நடிக்கும் அவர் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வயதான நடிகராக வாழ்கிறார்.

அவருக்கு மத்திய அரசின் சாதனையாளர் விருது வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DhaDha 87 director Vijaysris request to TN Govt

தளபதி 64 படத்திலிருந்து விலகிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.?

தளபதி 64 படத்திலிருந்து விலகிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Xavier Britto is out of Thalapathy 64 movieபிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 நடித்து வருகிறார் விஜய்.

இவருடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, படத்தயாரிப்பு பணியில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

Producer Xavier Britto is out of Thalapathy 64 movie

More Articles
Follows