தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவரது கட் அவுட்டை அலங்கரித்து, கற்பூரம் ஏற்றி பாலாபிஷேகம் செய்து கடவுளுக்கு இணையாக ரசிகர்கள் வழிபட்டு வருகின்றனர்.
பாலாபிஷேகம் செய்வதால் பால் அதிகளவில் வீணாக்கப்படுவதாக கூறி பெங்களூரைவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் குடிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு ரஜினிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரஜினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது…
“ரஜினிகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்.
ரஜினிகாந்த் வந்ததும் பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்று கூறினார்.
எனவே, இவ்வழக்கை ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.