சிம்புவின் மணப்பெண் ரகசியத்தை லீக்காக்கிய கூல் சுரேஷ்

New Project (3)நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் உஷா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவர்களின் சிம்புவின் தங்கை இலக்கியா மற்றும் தம்பி குறளரசன் ஆகியோரும் திருமணம் நடந்துவிட்டது.

ஆனால் மூத்தவரான சிம்புக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை

தற்போது சிம்புக்கு வரன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கூல் சுரேஷ் அவர்கள் சிம்புவின் திருமணம் குறித்து அந்த நிமிடம் பட விழாவில் பேசியுள்ளார்.

“சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. மணப்பெண் யார்? எப்போது கல்யாணம்? என்று எனக்குத் தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்” என பேசியுள்ளார்.

டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் கூல் சுரேஷ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post