அருண் விஜய்-ஹரி-ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

அருண் விஜய்-ஹரி-ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

பெயர் சூட்டப் படாமல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் 33 வது படம்.

இவருக்கு ஜோடியாக இணைகிறார்,ப்ரியா பவானி சங்கர். மேலும் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி,போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ டிவி பிரபலம் புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ரமா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு இன்று (மார்ச்) 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது.

அதை தொடர்ந்து வரும் 16ம் தேதி முதல் பழநியில் படபிடிப்பு தொடரும்.

மேலும் ராமேஸ்வரம், ராம்நாடு , தூத்துக்குடி, காரைக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெறும்.

16வது படமாக சூப்பர் ஹிட் டைரக்டர் ஹரி இப்படத்தை இயக்குகிறார்.

இசை: GV.பிரகாஷ் ( ‘சேவல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஹரியுடன்.. )

ஒளிப்பதிவு: KA.சக்திவேல்
எடிட்டிங்: அந்தோணி ( முதன்முறையாக ஹரி கூட்டணியில் )
கலை: M.சக்தி வெங்கட் ராஜா

ஸ்டண்ட்: அனல் அரசு
தயாரிப்பு மேற்பார்வை: சின்ன ராஜேந்தர்
பி ஆர் ஓ: ஜான்சன்

CEO: G.அருண்குமார்
நிறுவனம்: டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பு: வெடிக்காரன் பட்டி s.சக்திவேல்.

Cooku with comali star is part of Arun Vijay’s next film

புதிய கட்சி பெயரை பதிவு செய்ய ஒரு வாரம் போதும்..; தேர்தல் ஆணையம் அதிரடி ஆஃபர்

புதிய கட்சி பெயரை பதிவு செய்ய ஒரு வாரம் போதும்..; தேர்தல் ஆணையம் அதிரடி ஆஃபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு புதிய அரசியல் கட்சி தொடங்கி விளம்பரம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.

அதன்படி அந்த கட்சியின் பெயர் 30 நாட்களில் பதிவு செய்யப்படும்.

இந்த நிலையில் 30 நாட்கள் என்பதை தேர்தல் ஆணையம் 7 நாட்களாக குறைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

EC offer to new political party

முதன்முறையாக ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா

முதன்முறையாக ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு, தமிழ், கன்னட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

தெலுங்கில் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆரின் 30ஆவது படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

அவர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை.

இப்பட படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்பட உள்ளது.

அடுத்தாண்டு 2022 ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை திரைக்கு கொண்டு வருகின்றனர்.

Rashmika Mandanna to romance with Junior NTR ?

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட ரிலீசுக்கு தடை..? கோர்ட் உத்தரவு… ‘டேய் ச்சும்மா இருடா…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட ரிலீசுக்கு தடை..? கோர்ட் உத்தரவு… ‘டேய் ச்சும்மா இருடா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

5 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக ரிலீசாகாமல் இருந்தது.

இப்படம் வருகிற மார்ச் 5-ந் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இத்துடன்… நேற்று இந்த படத்தின் முன்னோட்ட காட்சி (டேய் சும்மா இருடா) ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம்,ரேடியன்ஸ் மீடியாவிடம் ₨1.24 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக மனுவில் புகார்.

ஆனால் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Nenjam Marappathillai release post poned ?

திமுக-மதிமுக தொகுதி பங்கீடு இழுபறி…; தனி சின்னத்தில் போட்டியிட வைகோ முடிவு

திமுக-மதிமுக தொகுதி பங்கீடு இழுபறி…; தனி சின்னத்தில் போட்டியிட வைகோ முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல்6-ந்தேதி நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன.

திமுக & காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாம்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

“மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும்.

எத்தனை தொகுதிகள், பொது சின்னம் என வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது.

திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

8 தொகுதிகள் வெற்றி பெற்றாலே உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும்.

திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு.

மதிமுகவின் தேர்தல் அறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும்” என வைகோ கூறினார்.

DMK allots 5 seats to MDMK ?

பாக்யராஜ் பட டைட்டில்… ஹிந்தி பட ரீமேக்..; ஹாட்ரிக் அடிப்பாரா ஆர் ஜே பாலாஜி..?!

பாக்யராஜ் பட டைட்டில்… ஹிந்தி பட ரீமேக்..; ஹாட்ரிக் அடிப்பாரா ஆர் ஜே பாலாஜி..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த, எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய 2 படங்களும் அவருக்கு நல்ல பெயரையும் தயாரிப்பாளருக்கு நல்ல வசூலையும் கொடுத்துள்ளது.

எனவே மீண்டும் ஹீரோவாகவே வேஷம் கட்ட வருகிறார் ஆர்ஜே பாலாஜி.

இந்த முறை சூப்பர் ஹிட்டான ஹிந்தி படத்தை ரீமேக் செய்ய நினைக்கிறாராம்.

2018ல் அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கத்தில் வெளியான ‘பாதாய் ஹோ’ என்ற காமெடி படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

இந்த படத்திற்கு 1994ல் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தலைப்பை வைக்க முடிவெடுத்துள்ளார்.

இந்த தலைப்பை கொடுக்க பாக்யராஜ் ஒத்துக் கொள்வாரா..?

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த, எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டும் வெற்றிப் பெற்றது. 3வது படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடிப்பாரா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RJ Balaji’s next is a superhit hindi remake?

More Articles
Follows