அரசியல் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை.. – திருநாவுக்கரசர் MP

அரசியல் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை.. – திருநாவுக்கரசர் MP

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Thirunaavukkarasarகடந்த மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் விரைவில் ஆட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ரஜினியை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

நேற்று இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் ரஜினியை சந்தித்தார்.

BREAKING ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி

மக்கள் பணியாற்ற ரஜினி ஆர்வமாக இருக்கிறார் என்று கூறினார் செ.கு.தமிழரசன்.

இந்த நிலையில் இன்று ரஜினியை காங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் பேரனின் பிறந்தநாள் விழா சம்பந்தமாகப் பேச வந்தேன்.

அரசியல் குறித்து யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.

‘மாஸ்டர்’ இசை விழாவில் விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு..?

‘மாஸ்டர்’ இசை விழாவில் விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayசேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், வரும் மார்ச் 15-ந் தேதி நடைபெறும் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 65 படத்தையும் லோகேஷ் கனகராஜே இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே தான் மாஸ்டர் இசை விழாவில் அடுத்த பட அறிவிப்பு எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், #VaathiComing என்ற 2 வது பாடல் இன்று மாலை 5மணிக்கு வெளி வரவுள்ளது.

இந்த பாடலில் விஜயை கொண்டாடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்த பாடலில் விஜய் வெறலெவல் நடனத்தை திறமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தர லோக்கல்..; வேற லெவல் வாத்தி வர்றார்.. விஜய் ரசிகர்கள் குஷி

தர லோக்கல்..; வேற லெவல் வாத்தி வர்றார்.. விஜய் ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayலோகேஷ் கனகராஜ் இயக்கிள்ள படம் மாஸ்டர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், #VaathiComing என்ற 2 வது பாடல் இன்று மாலை 5மணிக்கு வெளி வரவுள்ளது.

இந்த பாடலில் விஜயை கொண்டாடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்த பாடலில் விஜய் வெறலெவல் நடனத்தை திறமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

24 KISSES ஹீரோ ஆதித் அருண் தமிழுக்கு வருகிறார்; ரீல் அந்து போச்சு.!

24 KISSES ஹீரோ ஆதித் அருண் தமிழுக்கு வருகிறார்; ரீல் அந்து போச்சு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adhith arun“காலிடஸ் மீடியா” தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கும் “ரீல் அந்து போச்சு” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தின் கதாநாயகனாக ஆதித் அருண் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு நந்தா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓமர் பணிபுரிகிறார். பாஸ்கர் சுப்ரமணியன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.

காலிடஸ் மீடியா சார்பில் வி.கே.மதன் மற்றும் குர்ரம் கௌதம் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் துவக்க விழாவில் பேசிய நடிகர் ஆதித் அருண்,

“இந்தப் படம் எனக்கு தமிழில் ஒரு மறு அறிமுகம் மாதிரிதான். “இனிது இனிது”, “தங்க மகன்” படங்களுக்குப் பிறகு தமிழில் இப்போது தான் நடிக்கிறேன். இந்தப் படம் நிச்சயமாக ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும்.

முழுக்க முழுக்க காமெடி கலாட்டாகள் நிறைந்ததாக இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நூர்தீன். சினிமா தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படம் இது. அவர்களது வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும் “ரீல் அந்து போச்சு”, என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

Reel Anthu Poachu – Technician list
Director : Noordeen
Dop : Omar
Music : Nandha
Editor : Baskar subramanian
Art : Deva
Costume : Valayapathi
Stills. :
Action : Fire Karthik
Choreography : Shiv rock Shankar, Ramesh, Ramesh Kamal
Designs : Joxson
P.R.O : Guna
Production Executive : P Raj Kumar
Executive producer : Viji Antony
Producer : V.K.Mathan & Gurram Goutham Kumar

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நெகடிவ்வான கேரக்டரில் விக்ரம் பிரபு

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நெகடிவ்வான கேரக்டரில் விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabhu ponniyin selvanபிரபலமான நாவல் ‘பொன்னியின் செல்வன்’ தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படமாக உருவகி வருகிறது.

மணிரத்னம் இயக்க ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை லைகா நிறுவனம் உருவாக்குகிறது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இப்படி முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

கிட்டதட்ட முக்கியமான கேரக்டர்களில் மட்டும் 27 பேர் நடிக்கிறார்களாம்.

இந்த நிலையில் விக்ரம் பிரபு நெகட்டிவ்வான ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் பதவியை தவிர்க்கும் ரஜினிக்கு தமிழருவி மணியனின் தரமான அட்வைஸ்

முதல்வர் பதவியை தவிர்க்கும் ரஜினிக்கு தமிழருவி மணியனின் தரமான அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Tamilaruvi Manianகடந்த சில நாட்களாகவே ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழக அரசியலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால்.. “ரஜினி கட்சி ஆட்சிக்கு வந்தால் ரஜினி முதல்வர் பதவியில் அமரமாட்டார்” என்ற ரஜினியின் சொல் தான்.

இது விவாதப் பொருளாக பார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் கூட்டம் நடைபெற்றது..

இதில் ‘ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?’ என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேச்சின் சில துளிகள் இங்கே…

“ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்காக தன் கொள்கைகளை குழிதோண்டி புதைத்த மனிதர்களைதானே நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் ரஜினி பற்றற்ற ஒரு துறவியாகவே பாவிக்க கூடிய மனிதர் ஆவார்.

ஸ்டைல் மன்னன் ரஜினியின் மாஸ் புரோமோவை வெளியிட்ட டிஸ்கவரி் சேனல்

ராஜகண்ணப்பன் என்பவர் ஒருவர் இருக்கிறார்… 10 நாளைக்கு முன்பு அதிமுகவில் இருப்பார். அதற்கு முன்பு திமுக.வில் இருந்தார்.

அதற்கு முன் அதிமுக.வில் இருந்தார். மக்கள் நலனை விட அவருக்கு தன் நலனே முக்கியம்.

கொஞ்சமாவது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கோவம் வர வேணாமா? வராது போல.

வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பவர்கள் கூட நம்மை தெரியாது என்றால் வாடகைக்கு சைக்கிள் தர மறுப்பான்.

அரசியல் மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் இல்லை.

ஒட்டுமொத்தமாக படிந்திருக்கும் இழிந்த அரசியல் கலாச்சாரத்தை தூக்கி போடுவதுதான் ரஜினியின் அரசியல் மாற்றம்..

அவர் அரசியலை தூய்மைப்படுத்தவே வருகிறார்….

ரஜினி என்னிடம் ஒருமுறை கேட்டார், “ஐயா, மாற்று அரசியல் என்று திரும்ப திரும்ப என்று நீங்கள்தான் பேசுகிறீர்கள்? நான் அந்த முதல்படியிலாவது நான் கால் வைக்க வேணாமா?” என்றார்.

“அது என்ன முதல்படி?” என்றேன்… அதற்கு அவர், “ஆட்சி வேறு, கட்சி வேறு. ஆட்சி ஒருத்தர் நடத்தட்டும், கட்சி ஒருத்தர் நடத்தட்டும்.

கட்சி நடத்துபவர்கள் ஆட்சியில் அமர்ந்தால், அது கட்சியின் ஆட்சியாக இருக்குமே தவிர, மக்களின் ஆட்சியாக இருக்காது” என்று ரஜினி சொன்னார்.

இதைவிட மக்களாட்சி தத்துவத்துக்கு வேறு யாரால் விளக்கம் சொல்ல முடியும்?

உடனே நான் கேட்டேன்.. “சரி.. கட்சியை ஒருவரிடம் தந்துவிடுங்கள், ஆட்சியை நீங்கள் வைத்து கொள்ளுங்கள்” என்றேன்.

இப்படி பேசும் ஒரு அரசியல்வாதியை காட்டுங்கள் பார்க்கலாம்.

ரஜினியின் “ஏமாற்றம்” என்னவென்றால் ரஜினி மன்றத்தினர் தமிழக மக்களை சென்று சந்திக்கவில்லை என்பது மட்டும்தான்.

மகாத்மா காந்தி நினைத்திருந்தால் அவர் இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருப்பார். யாரும் கேள்வி எழுப்பியிருக்க முடியாது..

ஆனால் ஜவஹர்லால் நேருவை பிரதமராக்கினார்… பின்னர் நேரு, காந்தியின் பேச்சை கேட்கவில்லை..

அதிகாரம் வலிமையானது என்பதை உணருங்கள் என்று ரஜினியிடம் சொன்னேன்..

முதல்வராக எடப்பாடியை பழனிசாமியை சசிகலாதான் தேர்வு செய்தார். 30 நாள்கூட தேற மாட்டார் என்று நினைத்த எடப்பாடியையே 3 வருஷம் ஆகியும் அசைக்க முடியவில்லை..

அமாவாசை என்றாலே எடப்பாடி என்றாகிவிட்டது.. அவரை்குறைத்து சொல்லவில்லை.. அவர் மீது மரியாதை இருக்கிறது.

கூவத்தூரில் எடப்பாடிதான் முதல்வர் என்று சொன்னதுமே அப்படியே முட்டி போட்டபடியே சசிகலாவிடம் வந்தார். இப்படி ஒரு அமாவாசை கிடைப்பார் என்று நாம்கூட நினைக்கவில்லை..

சசிகலா சிறைக்கு போனவுடன் முட்டி போட்டவர் எழுந்து நின்றார்.. அதான் அவரை அப்படி சொன்னேன்.

அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி 3 விஷயங்களை பேசினார்.

அதில், ஆட்சிக்கு வந்தால் கட்சிப்பதவி பறிக்கப்படும். 48 வயதுக்குட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார். இதற்கு ஒப்புக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் அடுத்து அவர் சொல்லிய விஷயத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அது என்னவென்றால், நான் அதிகாரத்திற்கு வரமாட்டேன் என்றதுதான்..

அதிகாரம்.. பதவி… இதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.. ரஜினி எந்த அமாவாசை பின்னால் செல்ல பார்க்கிறார்.

ஒருநாளும் இந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்.. ரஜினி அவர்களே.. நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள்.

கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக ரஜினி மட்டுமே இருக்க வேண்டும். இந்த கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன்.

ரஜினி அனைத்துத் தலைவர்களையும் அரவணைக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை.

எம்ஜிஆரின் சுறுசுறுப்பு.. இந்திரா காந்தியின் கண்ட அதே விறுவிறுப்பு ரஜினியிடம் எனக்கு தெரிகிறது.” என்றார்.

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

More Articles
Follows