சினிமா ஆர்வத்தால் ‘காடப்புறா கலைக்குழு’ படத்தை தயாரித்த ரியல் சயின்ஸ்ட்

சினிமா ஆர்வத்தால் ‘காடப்புறா கலைக்குழு’ படத்தை தயாரித்த ரியல் சயின்ஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில் உருவான படம் ‘காடப்புறா கலைக்குழு’.

முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில் உருவாகியுள்ளது. திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’.

வரும் ஜூலை 7 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இனிதே நடைபெற்றது.

தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது…

எங்கள் விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை.

எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது. ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகை ஶ்ரீலேகா ராஜேந்திரன் பேசியதாவது….

எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். நான் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், ஆனால் மனதுக்கு நிறைவான கதாபாத்திரம். இப்போது பழமையான கலைகள் அழிந்து வருகிறது. நான் செத்தாலும் ஆயிரம் பொன் என ஒரு படம் நடித்தேன், அதில் ஒப்பாரி அழிந்து போவதைப் பற்றி எடுத்தார்கள்.

இந்தப்படத்தில் கரகாட்டத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் காலில் அடிபட்டாலும் கட்டுப்போட்டுக் கொண்டு இயக்கினார். இந்தப் படம் கண்டிப்பாக ஜெயிக்கும். தயாரிப்பாளர் கலையின் மீதான அன்பில் இப்படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை இந்தப்படத்திற்குத் தாருங்கள் நன்றி.

டெலிபோன் ராஜா பேசியதாவது….

இன்றைய காலகட்டத்தில் ஜாதியை வச்சுத்தான் படம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான காலகட்டத்தில் கலையை வைத்து எடுத்துள்ளார்கள்.

முனிஷ்காந்த் சார் இந்த படத்தில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு பம்பரமாக ஆடியிருக்கிறார். காளி வெங்கட்டும் அசத்தியிருக்கிறார். ஆயிரம் பேரின் உழைப்பு இது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

Scientist Muruganandam became producer of Kaadappura Kalaikuzhu

சிவகார்த்திகேயன் பட பாடலை விஜய்க்காக காப்பியடித்த அனிருத்.; அப்போ ரஜினி நிலைமை.?

சிவகார்த்திகேயன் பட பாடலை விஜய்க்காக காப்பியடித்த அனிருத்.; அப்போ ரஜினி நிலைமை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி ‘லியோ’வில் இடம் பெற்ற ‘நா ரெடி…’ என்ற பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இந்த படம் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் சிவகார்த்திகேயன் பட பாடலை காப்பி அடித்துள்ளதாக ரசிகர்கள் அனிருத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.

பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் ‘நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்…’ என்ற பாடல் இடம் பெற்று இருந்தது.

அந்தப் பாடலின் மெட்டுக்களைப் போலவே நான் ரெடி என்ற பாடலும் இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவலா….’ என்ற பாடல் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். எனவே ஜெயிலர் படத்தின் நிலைமை என்ன ஆகுமோ.? என ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Naa Ready song copy cat of Varuthapadatha Valibar Sangam

பிரபாஸ் – பிரசாந்த் நீல் இணைந்த ‘சலார்’ பட டீசர் & ரிலீஸ் அப்டேட்

பிரபாஸ் – பிரசாந்த் நீல் இணைந்த ‘சலார்’ பட டீசர் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீது ரசிகர்களிடம் வானளாவிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்களில் ஒன்றாக ‘சலார்’ படம் இருக்கிறது.

இந்த மெகா பட்ஜெட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் டீசர் தேதி ஜூலை 6 ஆம் தேதி, காலை 5:12 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் பாகுபலி ஆக உருவெடுத்த பிரபாஸ் ஆகியோர் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஒரே டீசராக, இந்த டீசர் வெளியாகும். கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா போன்ற பிளாக் பஸ்டர்களுடன் 2022 ஆம் ஆண்டை வெற்றிகரமாகக் கொண்டாடிய பிறகு, Hombale Films நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பாக, பிரபாஸ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கத்தில், “சலார்” பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைக்கப் போகிறது.

‘சலார்’ படத்தில் பிரபாஸுடன், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சலார்

Get ready to witness the teaser of Prashanth Neel’s directorial Salaar

ஹாலிவுட் படத்துடன் இணைந்த அட்லி – ஷாரூக்கின் ‘ஜவான்’

ஹாலிவுட் படத்துடன் இணைந்த அட்லி – ஷாரூக்கின் ‘ஜவான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பதான்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘ஜவான்’.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம், ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் ஹாலிவுட் படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான பதிவில்…

ஷாருக்கானின் அடுத்த வெளியீட்டிற்கான கவுண்ட் டவுனைத் தொடங்குங்கள். ஜவான் படத்தின் முன்னோட்டத்தை காண தயாராகுங்கள்.

மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் – எனும் திரைப்படத்துடன் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜவான் திரைப்படம் உணர்வுப்பூர்வமான ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும். இதயம் அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன், பார்வையாளர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும்.

இந்த படத்திற்காக முற்றிலும் தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார் ஷாருக்கான். இது ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையிலும் இல்லாத புதுமையான தோற்றத்தில் ஷாருக்கான் தோன்றுவதால், ரசிகர்கள் மட்டுமல்லாது, ஊடகங்களும் ஜவான் முன்னோட்டத்தைக் கண்டுகளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரித்திருக்கிறார்.

இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம், செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

ஜவான்

Sharukhs Jawan Trailer To Drop In Theatres With Mission Impossible Dead Reckoning

நடிகர் சங்கம் – தயாரிப்பாளர் சங்கம் மோதல்.? – நாசர் விஷால் கார்த்தி அறிக்கை

நடிகர் சங்கம் – தயாரிப்பாளர் சங்கம் மோதல்.? – நாசர் விஷால் கார்த்தி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது.

நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை.

நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளை கூறியுள்ளனர்.

இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். இதை விடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

# தென்னிந்திய நடிகர் சங்கம்

 நாசர் - விஷால் - கார்த்தி

Nadigar Sangam statement regarding Clash with Producer Council

ரஜினியின் ‘பாபா’ பார்முலா.; அரசியலுக்காக சினிமாவுக்கு விஜய் முழுக்கு.; கமல் விஜயகாந்த் பாடம்.; ஓர் அலசல்

ரஜினியின் ‘பாபா’ பார்முலா.; அரசியலுக்காக சினிமாவுக்கு விஜய் முழுக்கு.; கமல் விஜயகாந்த் பாடம்.; ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் அரசியல் வருகையை மறைமுகமாக பல விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட செய்து இருந்தார்.

அதன்படி வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி 234 தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற 10 & 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1500 பேரை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகை வழங்கினார்.

பொதுவாகவே சிறந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுக்கும் போது மாவட்ட வாரியாக தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் அதிலும் கூட விஜய் 234 தொகுதி என தேர்தல் படியே முடிவு எடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா முடிவு குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.

இதன் பின்னர் யுவன் இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

இந்த படத்துடன் தனது சினிமாவிற்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி கொடுக்க உள்ளாராம் விஜய்.

2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அரசியல் பணிகளிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் விஜய் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சினிமாவில் இருந்து கொண்டு அரசியல் பணிகளை செய்ய முடியாது எனவும் அது தனக்கு அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2026க்கு பிறகு தேர்தல் முடிவுகளை பொருத்து சினிமாவா? அரசியலா? என முடிவு எடுக்க உள்ளாராம்.

ஒரு நடிகர் உச்சத்தில் இருக்கும்போது இதுபோல நீண்ட இடைவெளி தேவையா? என்ற சந்தேகங்கள் எழுவது உண்மைதான்.

1999இல் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படம் வெளியானது. மாபெரும் வெற்றி பெற்றாலும் உடனே ரஜினி அடுத்த படத்தில் நடிக்கவில்லை.

கிட்டத்தட்ட 2002 ஆம் ஆண்டில் தான் தன் பாபா படத்தை திரைக்கு கொண்டு வந்தார். எனவே தான் ‘பாபா’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் பேசப்பட்ட படமாகவும் ‘பாபா’ அப்போதே உருவெடுத்து இருந்தது.

மூன்று ஆண்டுகள் ரஜினி இடைவெளி விட்டு இருந்தாலும் அவரது சூப்பர் ஸ்டார் இமேஜும் அவரது வியாபாரமும் 1% கூட குறையவில்லை.

எனவே ‘படையப்பா டூ பாபா’ வழியில் ரஜினி பார்முலாவை விஜய் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதும் சில நடிகர்கள் சினிமாவில் இருந்து கொண்டே அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களால் அரசியலில் சாதிக்க முடியவில்லை.

கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டோர் இதை பாணியில் இருப்பதால்தான் அவர்களால் அரசியலில் எதையும் செய்ய முடியவில்லை.

ஆனால் விஜயகாந்த் தன்னுடைய சினிமாவை நிறுத்தி வைத்துவிட்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார்.

அதன்படி தான் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் வாக்குகள் பெற்று அதிமுகவுக்கு அடுத்ததாக உருவெடுத்து எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

அந்த தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளிய பெருமை விஜயகாந்துக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.

எனவே தீவிர அரசியல் ஆர்வம் செலுத்தினால் மட்டுமே தன்னுடைய இலக்கை அடைய முடியும் என விஜய் நம்புவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் தான் சினிமா விட்டு தற்காலிகமாக விலகுவதாக அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே விஜய்யின் அரசியல் வருகை காத்திருந்து பார்ப்போம்…

Vijay wish to quit Cinema for his political entry

More Articles
Follows