JUST IN செஸ் ஒலிம்பியாட் நிறைவு : கமல் வாய்ஸ்.. விஜய் பாடல்.. சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா.. ஸ்டாலின் மாஸ் என்ட்ரீ

JUST IN செஸ் ஒலிம்பியாட் நிறைவு : கமல் வாய்ஸ்.. விஜய் பாடல்.. சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா.. ஸ்டாலின் மாஸ் என்ட்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்தன.

12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற்று வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இதன் தொடக்க விழாவிற்கு வெள்ளை பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று நிறைவு நாளில் கருப்பு பேண்ட் கோட் சூட் அணிந்து வந்திருந்தார்.

அவர் விழா அரங்கில் நுழைந்தபோது
‘ஆளப்போறான் தமிழன்..’ பாடல் பின்னணியில் ஒலித்தது. அப்போது மாஸாக என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தப் பாடல் ஏ ஆர் ரகுமான் இசையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் குரலில் விடுதலை போராட்ட வரலாற்று காட்சி ஒளிப்பரப்பானது.

மேலும் அதனை சார்ந்த சமூக நீதி போராட்ட வரலாற்றை விளக்கும் காட்சிகளும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஒளிப்பரப்பானது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா.

Chess Olympiad closing ceremony CM Stalin mass entry Vijay song Kamal Voice Sivakarthikeyan daughter song

‘தமிழ் ராக்கர்ஸ்’ அப்டேட் : பைரசியை அழிக்க ஏவிஎம் நிறுவனத்தில் அருண் விஜய்

‘தமிழ் ராக்கர்ஸ்’ அப்டேட் : பைரசியை அழிக்க ஏவிஎம் நிறுவனத்தில் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர்.

முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும்.

எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் அசலாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் ஒரு திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், தமிழ் ராக்கர்ஸ் ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் இல் ஒளிப்பரப்பாக உள்ளது.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட இந்த தொடர், நேயர்களை ருத்ரா எனும் ஒரு காவல் அதிகாரியின் பயனம் மூலமாக விவரிக்கிறது.

இதில் நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார். ருத்ரா என்பவன் காலம் கடந்து, அடங்க மறுக்கும் ரசிகர்கள் மற்றும் மிகவும் ஆபத்தான ஆற்றல் மிக்க இணைய தள திருடர்கள் மீது போர் தொடுப்பவனாக காட்டப்படுகின்றான்.

ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதே கதைத்தளம்.

இத்திரைப்படத்தினை நாட்டில் மிகவும் பழமையான மற்றும் மிகவும் பிரபலமாக உள்ள AVM தயாரிப்பு நிறுவனம் தனது OTT உலகின் நுழைவு வாயிலாக இந்த தொடரினை தயாரிக்கிறது.

மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாதின் எழுத்தில் உருவான இந்த தொடர், அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

பதிவான கருத்துக்கள்

அருணா குகன், தயாரிப்பாளர், AVM நிறுவனம்..

தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதை களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்கலை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டிஉள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிப்பரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு பலத்தினை மேலும் கூட்டியிள்ளது.

தொலைநோக்கு சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.

அறிவழகன், இயக்குனர்-

பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது.

தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்து செல்கிறது.

அருண் விஜய், நடிகர் –

இந்த தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். செய்தி திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும்.

இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை.

எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கின்றேன். திறை துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Arun Vijay starrer Tamil Rockers update

ரஜினி-கமலின் ராசியான நாயகி அமலா நடித்த புதிய படம் செப்டம்பர் 9ல் ரிலீஸ்

ரஜினி-கமலின் ராசியான நாயகி அமலா நடித்த புதிய படம் செப்டம்பர் 9ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதைக்களங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்க தவறியதில்லை. அப்படிய வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

அந்த நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘கணம்’.

இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ‘அம்மா’ பாடலுக்கு சமூக வலைதளத்தில் வெகுவாக பாராட்டு கிடைத்தது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1980 களில் ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அமலா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக மெனக்கிடலை படக்குழு அளித்து வருகிறது. பணிகள் முடிந்து செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாகப் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவான திரைப்படம் என்பதால், தமிழில் வெளியாகும் அதே நாளில், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்கிற பெயரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

‘கணம்’ படம் குறித்த பல ஆச்சரியமூட்டும் அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Get ready to roll back your memories with #Kanam
In Theaters from September 9th ❤️

@ImSharwanand @riturv @amalaakkineni1 @actorsathish @thilak_ramesh @JxBe @sujithsarang @sreejithsarang @twittshrees @prabhu_sr @DreamWarriorpic @johnsoncinepro

#கணம்
#KanamFromSep9th

Kanam will release on september 9th

கௌதம் மேனன் இயக்கத்தில் இணைந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

கௌதம் மேனன் இயக்கத்தில் இணைந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா் – இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதல் திருமணம் நடைபெற்றது.

திருப்பதியில் நடத்த திட்டமிட்டு இருந்த இந்த திருமணம் அங்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால் சென்னை அருகே இந்த திருமணத்தை நடத்தினர்.

இந்த திருமணத்தில் பிரபல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டாலும் பிரபலங்களின் படத்தை வெளியிடாமல் தம்பதியினர் படத்தை மட்டுமே வெளியிட்டனர்.

இவர்கள் திருமண நிகழ்வினை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்று விட்டதால் எந்த படங்களும் வெளியாகவில்லை.

திடீரென ஒரு மாதம் கழித்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களான ரஜினிகாந்த் ஷாரூக்கான் சூர்யா கார்த்தி விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் netflix தளம் இவர்கள் திருமணம் தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் காதலை பற்றி சொல்லியுள்ளனர். இதை ஒரு டாக்குமென்டரி வடிவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்க நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விரைவில் இது netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

Netflix has partnered with #GauthamVasudevMenon and #RowdyPictures for this documentary, which will be released soon.

#NayantharaBeyondTheFairytale #Netflix #GVM

Nayanthara – Vignesh Shivan joins for Gautham Menon

3 மொழிகளில் ‘கோப்ரா’.; ரிலீஸ் தேதியுடன் அதிரடி போஸ்டரை வெளியிட்டது படக்குழு

3 மொழிகளில் ‘கோப்ரா’.; ரிலீஸ் தேதியுடன் அதிரடி போஸ்டரை வெளியிட்டது படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

விக்ரம் இந்த படத்தில் மதியழகன், கோப்ரா, பிளாக் ஹோப்ரா உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறாராம்.

கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி செட்டி இதில் நாயகியாக நடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைகின்றனர்.

இவர்களுடன் மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, பத்மபிரியா, முகமது அலி பெய்க், கனிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக கே எஸ் எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகிறது என படக் குழுவினர் சற்றுமுன் அறிவித்தனர்.

இத்துடன் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Chiyaan Vikram’s Cobra release date announced

அமலாபால் என்றதும் சிலரின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.; நாயகி முன்னிலையில் டைரக்டர் ஓபன் டாக்

அமலாபால் என்றதும் சிலரின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.; நாயகி முன்னிலையில் டைரக்டர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’.

ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

”2016 ஆம் ஆண்டில் இந்த கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து இந்த கதையை கூறிய போது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தை திசை திருப்பவே முயற்சித்தார்கள்.

இதனால் சோர்வு ஏற்பட்டது. இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பால் அவர்களை சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், ‘பிடித்திருக்கிறது. நடிக்கிறேன்’ என்றார்.

அதன் பிறகு தயாரிப்பாளரை தேடினோம். அமலாபால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இந்த படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலபால் நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார்.

2018 ஆம் ஆண்டில் இதற்கான பணிகளை தொடங்கினோம். இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப்பினும் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். படத்தை வெளியிட நினைத்த போது, தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம். பிறகு ஒரு வழியாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார், எங்களது ‘கடாவர்’ திரைப்படத்தினை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியத்துடன், பிரம்மாண்டமாக வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தியிருக்கிறது. இதற்காக நாங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.‌

கடாவர் – ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர். காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் பத்ராவாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்றுவதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம். ”என்றார்.

‘கடாவர்’ படத்திற்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளை பேசுகையில்…

” நான் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றினாலும், என்னுடைய கனவு சினிமா தான். 2010 களில் என்னுடைய சகோதரர் இறந்தார். அவரது உடல், உடற்கூறாய்வு செய்வதற்காக பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சென்று பார்வையிட்ட போது தான் இப்படத்திற்கான கதை கரு உருவானது. அதன் பிறகு இயக்குநர் அனூப் எஸ் பணிக்கருடன் இணைந்து ஓராண்டு திரைக்கதையை எழுதினோம். பிறகு இந்த கதையை அமலா பால் தயாரிக்க விருப்பம் தெரிவித்த போது, எங்களுக்கு இருந்த கவலை அகன்றது. அவர் இந்த திரைப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கினார்” என்றார்.

‘கடாவர்’ படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகியுமான நடிகை அமலா பால் பேசுகையில்…

“கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நேரில் காணும் போது உற்சாகம் பிறக்கிறது. அபிலாஷ் பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னை சந்தித்து ‘கடாவர்’ படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன்.

இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது.

இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ .டி. டியில் ‘கடாவர்’ வெளியாகிறது.‌ பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தியாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த ‘கடாவர்’ திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

When Amalapal came, the expectations of some people were different.;

More Articles
Follows