விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ பட புரொடியூசர் மீது சிபிசிஐடி வழக்கு

லோகேஷ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்த ம் ‘மாஸ்டர்’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2020 மார்ச் மாதமே நடைபெற்றது.

(கொரோனா லாக்டவுனால் படம் 2021 ஜனவரியில் படம் ரிலீசானது)

இப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு விஜய் வரும் போது தெறி பட பாடலையும் விஜய் சேதுபதி வரும் போது விக்ரம் வேதா பட பாடல்களை ஒலிக்க செய்து பயன்படுத்தியுள்ளனர்.

இப்பாடல்களின் உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதற்கான காப்புரிமையை நோவெக்ஸ் கம்யூனிகேசன் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாம்.

சட்டப்படி பாடல்களை காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என இந்திய காப்புரிமைச் சட்டம் சொல்கிறது.

எனவே மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாம்.

ஆனால் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் இந்த புகாருக்கு பதிலளிக்காததால் சிபிசிஐடியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு பிரிவில் நோவெக்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என எக்மோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை முடிவில்‘மாஸ்டர்’ தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் காப்புரிமை சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் மீது அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

CBCID case filed against on Master producer

Overall Rating : Not available

Latest Post