தூத்துக்குடி விவகாரம்; ரஜினி மீது வழக்கு பதிய சிலம்பரசன் மீண்டும் மனு

தூத்துக்குடி விவகாரம்; ரஜினி மீது வழக்கு பதிய சிலம்பரசன் மீண்டும் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் பற்றி ரஜினிகாந்த் அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துக் கொண்டதன் காரணமாகவே துப்பாக்கி சூட்டை போலீசார் நடத்தினர் என பேசியிருந்தார்.

இதற்கு அப்போதே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு குரல் எழுப்பினர்.

ஆனால் அங்குள்ள ஒரு பிரிவினரே இதற்கு காரணம் என மீனவ மக்கள் புகார் அளித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, ரஜினி அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஓசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிலம்பரசன் என்பவர் கடந்த ஜூன் 11ம் தேதி ஓசூர் நகர காவல்நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினர் இதுதொடர்பாக சி.எஸ்.ஆர் வழங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கடந்த ஜூன் 27ம் தேதி ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை அவதூறாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதாகவும், இதனால் நியாயத்திற்கு போராடியவர்களை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையின் மேலதிகாரிகளை அணுக அறிவுறுத்தினார்.

இந்நிலையில் மேல் அதிகாரிகளை அணுகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என இன்று ஜீலை 9ஆம் தேதி மீண்டும் ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 2வது முறையாக சிலம்பரசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணையை 11-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க – காலா திரை விமர்சனம்

 

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தனுஷ் சந்திப்பு; அடுத்த திட்டம்..?

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தனுஷ் சந்திப்பு; அடுத்த திட்டம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushநடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தனுஷ்.

இவரது நடிப்பில் வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையில் அண்மையில் தனது ரசிகர் மன்றத்தின் தலைவராக இயக்குனர் சுப்ரமணியம் சிவாவையும் செயலாளராக பி.ராஜாவையும் நியமித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்துள்ளார்.

மேலும் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் தனுஷ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஜய் ஆகியோர் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர்.

தற்போது அவர்களது ஸ்டைலில் தனுஷ் அனுகி வருவது இங்கே கவனித்தக்கது.

காலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*

காலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilpadam2 poster teasing Kaala Rajini and Sarkar Vijayதமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படத்திற்கு காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் வெகுநாட்களுக்கு பிறகு தற்போது தமிழ்ப்படம்2 என்ற படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் பாடல்கள் என அனைத்தும் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் ஹிட்ட்டித்த எல்லா படங்களின் முக்கிய காட்சிகளையும் கலாய்த்து வருகின்றனர்.

முக்கியமாக ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் வரை அனைத்து ஹீரோக்களையும் ஏதாவது ஒரு காட்சியிலாவது கலாய்த்து உள்ளனர்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்படி என்னதான் கலாய்த்து இருக்கிறார்கள் என பார்க்கவே, இந்த டீசர் ஹிட்டடிக்க இதுவே மிகப்பெரிய காரணமாகிவிட்டது.

அண்மையில் வெளியாக நடிகையர் திலகம் பட கீர்த்தி சுரேஷையும் கலாய்த்து ஒரு ஸ்டில் விட்டு இருந்தனர்.
மேலும் சின்ன கவுண்டர் விஜயகாந்த் போஸ்டரையும் கலாய்த்திருந்தனர்.

காலா பட போஸ்டரில் ரஜினி ஒரு நாய் மீது கை வைத்திருப்பார். அதனை கலாய்த்து சிவா ஒரு டைனோசர் மீது கை வைத்திருக்கிறார்.

சர்கார் பட 2வது போஸ்டரில் ஒரு காரில் அமர்ந்துக் கொண்டு விஜய் லேப்டாப் ஆப்ரேட் செய்வார். அதே ஸ்டைலில் மிர்ச்சி சிவா ஒரு ரிக்சாவில் அமர்ந்திருக்கிறார்.

இப்படம் வருகிற ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு பிறகு யாரையும் கலாய்க்க முடியாது என்பதால் அண்மைக்கால படங்களையும் அதன் போஸ்டர்களையும் முடிந்தவரை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ். அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவா நாயனாக நடிக்க, சதீஷ் வில்லனாக நடித்துள்ளார்.

Tamilpadam2 poster teasing Kaala Rajini and Sarkar Vijay

kaala sarkar tamilpadam 2

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு பிறகு 3 படங்களை முடிவு செய்த ரஜினி.?

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு பிறகு 3 படங்களை முடிவு செய்த ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Karthik Subbaraj movie Rajini decided to act in 3 moviesகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இது ரஜினியின் நடிப்பில் உருவாகும் 165வது படம் என கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இதன்பின்னர் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனையடுத்து முன்பே வாக்கு கொடுத்தப்படி கே.எஸ். ரவிக்குமார் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சங்கிலி முருகன் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இப்படங்களுக்கு பின்னர் ராஜமௌலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் கதையமைப்பில் லிங்குசாமி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் ரஜினி.

இவற்றையெல்லாம் 2020க்குள் முடித்துவிட்டு அதன் பின்னர் முழு மூச்சாக அரசியல் இறங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

2021ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது போர்களத்தில் சந்திப்போம் என காவலர்களுடன் காத்திருக்கிறாராம் இந்த மன்னன்.

After Karthik Subbaraj movie Rajini decided to act in 3 movies

இதையும் படிங்க – காலா திரை விமர்சனம்

சிவகார்த்திகேயனின் நியூ லுக்கால் ஒரு படம் பண்ண அனிருத் அழைப்பு

சிவகார்த்திகேயனின் நியூ லுக்கால் ஒரு படம் பண்ண அனிருத் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan new look photo shoot Anirudh ready with Theme musicபொன்ராம் இயக்கி வரும் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு வேடம் ஏற்பதால் ஒரு கெட் அப்புக்காக நீண்ட தாடி, அதிகமான தலை முடியை வைத்து பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.

இந்நிலையில் அதே கெட் அப்புடன் தற்போது ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதை ட்விட்டரில் பதிவிட ரசிகர்கள் புதிய படத்துக்கான தோற்றமா என்று பலரும் கேட்டனர். ஆனால் திடீர் என்று நடத்திய போட்டோஷூட்’ என்று மட்டும் பதில் அளித்தார்.

இதற்கு இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், இந்த கெட்-அப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி என்று ரிப்ளை செய்துள்ளார்.

உடனே சிவகார்த்திகேயன், ‘சார் என்ன சார் கேட்கிறீங்க… நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார்…’ என பதிவு செய்துள்ளார்.

‘சீமராஜா’ படத்தில் சமந்தா உடன் கீர்த்தி சுரேஷ் அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan new look photo shoot Anirudh ready with Theme music

நாளை STR ரசிகர்களுக்கு *அதிரடி* விருந்து தரும் VP & SK

நாளை STR ரசிகர்களுக்கு *அதிரடி* விருந்து தரும் VP & SK

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabu Simbu combo movie first look from 10th July 11amவெங்கட் பிரபு (VP) இயக்கத்தில் விரைவில் சிம்பு (STR) நடிக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம்.

இப்படத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி (SK) தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகி யார்? என்பதை படக்குழுவினர் உறுதியாக கூறவில்லை.

ஆனால் கீர்த்தி சுரேஷ் அல்லது ஸ்ரீதேவி மகள் ஜான்வி நாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில், நாளை ஜீலை 10ஆம் தேதி காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன் தலைப்பு “அதிரடி”யாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Venkat Prabu Simbu combo movie first look from 10th July 11am

More Articles
Follows