கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விக்ரம் மகன் துருவ் மீது 3 வழக்கு

dhruv vikramசென்னையில் விடிய விடிய பார்ட்டி நடத்தி முடித்துவிட்டு நடிகர்கள் அதிகாலையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது.

அதுபோன்ற சம்பவம் தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தமது நண்பர்களுடன் சென்னை மந்தைவெளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 4 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் சுசுகி பலேனோ காரை ஓட்டிக் கொண்டு, ஆர்.கே. சாலை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படும் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதியதுள்ளது.

இதில், போஸ்டர் ஒட்டும் பணியை முடித்துவிட்டு, தமது ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் காமேஷ் படுகாயமடைந்தார்.

ஆட்டோ மீது மோதியும், வண்டியை நிறுத்தாமல் டிடிகே சாலையில் இருந்த முர்ரேஷ் கேட் சாலையில் அதே வேகத்தோடு துருவ் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீட்டருகே உள்ள பிளாட்பார்மில் மோதிய கார், பள்ளத்தில் சிக்கியதை அடுத்து நகர்த்த முடியாமல் நின்று போனது.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். விக்ரமின் மகன் துருவ் விபத்தை ஏற்படுத்திவிட்டு வந்தது தெரியவந்ததையடுத்து, வழக்கை அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றினர்.

இதையடுத்து, துருவ் மீது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அவரை கைது செய்து பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர். துருவ் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் காமேஷின் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Overall Rating : Not available

Latest Post