ஆண்டாளை அவமதிக்கிறது அனுஷ்கா படம்?; தடை கோரி வழக்கு

ஆண்டாளை அவமதிக்கிறது அனுஷ்கா படம்?; தடை கோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brammanda nayagan posterஅனுஷ்கா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் இன்று வெளிவர உள்ள ‘அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்’ திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்படம் ஆண்டாளை மையப்படுத்தி எடுத்துள்ளதால் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் வைரமுத்து ஆண்டாளின் பெருமைகளை உணர்ந்தவர் உயர்த்தியவர் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

” படம் பெருமாள் வரலாறு ,அவர் மீது பக்தி கொண்டவரின் பக்தி பற்றி அழகாகச் சொல்கிற படம். இது ஆந்திராவில் ஓடி வெற்றி பெற்ற பக்தி மணம் கொண்ட பிரமாண்ட வெற்றி படமாகும்.

படத்தையே பார்க்காமல் விளம்பரத்துக்காக வழக்கு போட்டுள்ளதால்

படத்துக்குப் பிரச்சினை எழுந்துள்ளது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது.

இப்படி விளம்பரம் தேட வழக்கு போடுகிறவர்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரோடும் ,உறவினரோடும் ஊர்க்காரர்களோடும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்த்து விட்டு ஆண்டாளைப் பற்றி தவறாக எதுவும் உள்ளதா என தெரிந்து கொள்ளட்டும்” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

இன்று முதல் உலமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்.

கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and arvind kejiriwalமதுரை ஒத்தக்கடையில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கொடியை ஏற்றி கட்சியின் பெயரை அறிவித்தார்.

கமல்ஹாசனின் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் இரு கட்சிகளுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளை நிராகரித்து விட்டு கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.

அரசியல் மாற்றாக உருவாகியுள்ள கமல் கட்சிக்கு தமிழக மக்கள் இனி வாக்களிக்கலாம்.

அநீதி, மதவாத சக்திகளுக்கு எதிராக கமல் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்.

கமல்ஹாசன் வெளிப்படுத்தி வருகிற தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு;லாரன்ஸ் ஏற்பாடு

ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு;லாரன்ஸ் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceபிறந்த நாளான இன்று அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு

லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் ஶ்ரீ ராகவேந்திரரின் பிறந்த நாளான இன்று சீரடி சாய்பாபா சிலையை அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நிறுவி பிரதிஷ்டை செய்கிறார்.

இரண்டு குருக்களான ஶ்ரீ ராகவேந்தரும் சீரடிபாபா வும் ஒரே இடத்தில் இருப்பது மாதிரியான ஒரு கோயிலை அமைக்க வேண்டும் எனது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.

ராஜஸ்தானில் ஆர்டர் கொடுத்து 5 அடி உயர சிலையை தயார் செய்து வரவழைத்து இன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை செய்கிறார் லாரன்ஸ்.

இளைஞர்களை விவசாயத்திற்கு அழைக்கும் கார்த்தி

இளைஞர்களை விவசாயத்திற்கு அழைக்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadai kutty singam Karthi2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “.

முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர்.

படத்துக்கு இசை D.இமான், ஒளிப்பதிவு R.வேல்ராஜ், கலை வீரசமர், இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தில் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார்.

எப்படி Engineer, Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.

இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் IT வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். “ கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள்.

அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார்.

படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியுள்ளார்.

வெயில், பனி, மழையென எதையும் பொருட்படுத்தாமல் கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளார்.

சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டிசிங்கம் என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள்.

உண்மை அதுவல்ல. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால் தான் இந்த டைட்டிலாம்.

பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

நம்மை தொட நினைத்தால் ஊழல் கைகள் சுட்டுவிடும்.; கட்சி கூட்டத்தில் கமல் பேச்சு

நம்மை தொட நினைத்தால் ஊழல் கைகள் சுட்டுவிடும்.; கட்சி கூட்டத்தில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasanமக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அறிவித்தார் கமல்.

அப்போது கட்சியின் சின்னம் மற்றும் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது…

நமது கட்சி மக்களின் கட்சி. அதில், நான் ஒரு கருவி மட்டுமே. நமக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. இன்றைய நிகழ்வுகள் ஒருநாள் கொண்டாட்டம் அல்ல.

இந்த சந்தோஷத்துடன் நிறுத்திவிடக்கூடாது. வாழ்க்கை நடைமுறையைப் போன்று கடைப்பிடிக்க வேண்டும்.

நமக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும்.

நான் அறிவுரை கூறும் தலைவன் அல்ல. உங்களிடம் அறிவுரையைக் கேட்கப் போகிற தொண்டன் நான்.

நாம் ஒன்றுகூடி சமைக்கப்போகும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோறுதான் இங்கு திரண்டுள்ள கூட்டம். இதை தொட்டுப் பார்க்க நினைத்தால் ஊழல் படிந்த விரல்களை சுட்டுவிடும்.

இத்தனை ஆண்டுகள் நாம் செய்த நற்பணிகளின் காரணமாக நல்லோர் பலரது ஆசி கிடைத்திருக்கிறது. அதை கட்டிக்காப்பாற்ற வேண்டும்.

நமது கட்சிக்கு எங்கிருந்து நல்ல விஷயங்கள் கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும். அதற்காக யார் பக்கமும் ஒரே அடியாகச் சாய்ந்துவிடாது. தராசு முள் போல நிற்க வேண்டும்.

எனது 63 வயதில் அரசியலுக்கு வருவதை ஆயுள் முடியப் போகும் நிலையில் வருவதாக விமர்சனம் செய்கின்றனர்.

இதுவரை திரை நட்சத்திரமாக இருந்த காலத்தில் நடிப்பில் மூலம் பணம் சம்பாதித்தேன். ரசிகர்களாகிய நீங்கள் பணம் கொடுத்து திரைப்படங்களை ரசித்தீர்கள்.

அதற்காக இதுவரை உங்களைப் பார்த்து கை அசைத்தது மட்டுமே உங்களுக்காகச் செய்தது. நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று குற்ற உணர்வு அதிகரிக்க ஆரம்பித்தது.

எஞ்சிய வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்சியைத் தொடங்கியுள்ளேன். இதற்காக நாம் அமைத்துள்ள கட்டமைப்பு அடுத்த 3 அல்லது 4 தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.

எனக்கே எனக்கானதாக கட்சியை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவ்வாறு தொடருவதே நாளை நமதாக வழிவகுக்கும். என்று பேசினார் கமல்ஹாசன்.

குவார்ட்டர்-ஸ்கூட்டர் கிடையாது; கமலின் புதிய கட்சி கொள்கைகள்…

குவார்ட்டர்-ஸ்கூட்டர் கிடையாது; கமலின் புதிய கட்சி கொள்கைகள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Makkal Neethi Maiam Kamal new party policy updatesஉலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தான் புதிதாக தொடங்கியுள்ள கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது தன் கட்சியின் கொள்கை குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

கட்சியின் கொள்கை என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சிறப்பான ஆட்சியைக் கொடுத்து கொண்டிருக்கும் தலைவர்களின் கொள்கைகள் தான் எனது கொள்கைகள்.

தரமான கல்வி, ஜாதி-மதம் இல்லாத ஆட்சி, ஊழல் இல்லாத நிர்வாகம், கல்வியை அரசே ஏற்று நடத்துதல், இலவசங்களை எதிர்பார்க்கும் நிலையை மாற்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி பிறருக்கு உதவுபவர்களாக மாற்றுவது, காவிரி நதிநீர் பிரச்னைக்குத் தீர்வு, அண்டை மாநிலங்களுடன் சுமுக உடன்பாடு, ஒருவரே முதல்வர் பதவியில் நீடிக்கும் முறை இல்லாதது போன்றவை எங்களது கட்சியின் முக்கிய கொள்கைகள்.

இலவசங்கள் கிடையாது; வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

குவார்ட்டர் ஸ்கூட்டர் ஆகியவை நிச்சயம் கிடையாது. வேலை வாய்ப்புகள் மூலம் பல பேருக்கு ஸகூட்டர் வாங்கித் தரும் நிலைமை உருவாக்கப்படும்.

இவ்வளவு தானா எனக் கேட்பவர்களுக்கு பக்கம் பக்கமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அவை விரைவில் வெளியிடப்படும்” என்றார் கமல்ஹாசன்.

Makkal Neethi Maiam Kamal new party policy updates

More Articles
Follows