மகேஷ்பாபு இயக்கத்தில் மாடர்ன் மங்கையாக மாறும் அனுஷ்கா

மகேஷ்பாபு இயக்கத்தில் மாடர்ன் மங்கையாக மாறும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7), சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.

2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.

தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

அனுஷ்காவின் 48-வது (#Anushka48) படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி (அனுஷ்காவின் செல்ல பெயர்)” என்று கூறியுள்ளது.

அனுஷ்காவின் பிறந்த நாளன்று செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூவி கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான பாகமதி படம் நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ் பாபு பி இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, அனுஷ்காவின் பிறந்தநாளான நேற்று நவம்பர் 7ஆம் தேதி திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Anushka Shetty next film announcement is here

மீண்டும் நடிக்கவரும் பிரசாந்தின் ‘வண்ண வண்ண பூக்கள்’ பட நாயகி

மீண்டும் நடிக்கவரும் பிரசாந்தின் ‘வண்ண வண்ண பூக்கள்’ பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசாந்த் நாயகனாக நடித்த “வண்ண வண்ண பூக்கள்” படம் மூலம் தமிழக இளைஞர்களின் மனதை கிறங்கடித்தவர் நடிகை வினோதினி.

தானு தயாரித்த இந்த படத்தை பாலுமகேந்திரா இயக்க, இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது.

கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

தனது மலரும் நினைவுகள் குறித்தும் மீண்டும் நடிக்க இருப்பதை குறித்தும் நடிகை வினோதினி கூறியதாவது…

“என் அம்மா ஒரு நாடக நடிகை, அப்போதே நாடகங்கள் நடிக்க செல்லும் போது என்னை அழைத்து செல்வார். அந்தப்பழக்கம் மூலமாக நான் சிறு வயதிலேயே விசு சார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அவர் படங்களில் மட்டுமே தொடர்ந்து 7 படங்கள் நடித்தேன்.

தொடர்ச்சியாக எனக்கு நிறைய வாய்புகள் குவிந்தன. மணிரத்னம் சாரின் நாயகன் படத்தில் சிறு வயது சாராவாக நடித்தேன். மும்பையில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு தங்கியது நடித்தது எல்லாமே மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

மணிரத்னம் சாரை அந்தப்படத்திற்கு பிறகு நான் பார்த்ததே இல்லை. சுஹாசினி மேடத்தை பார்க்கும்போது இதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பேன். மணிரத்னம் சாரை சந்தித்து உங்கள் நாயகன் படத்தில் நான் நடித்தேன்..!ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்க வேண்டும் என நினைப்பேன்.

என் வாழ்க்கை முழுவதுமே சினிமாவை சுற்றித்தான் இருந்தது. 16 வயதிலேயே நாயகியாகிவிட்டேன். கஸ்தூரிராஜா சார் எங்கள் வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தார்கள். அவரது ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.

அதைப் பார்த்து தான் பாலுமகேந்திரா சார் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க வைத்தார். அந்தப்படம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டது. கதை எல்லாம் சின்ன கதைதான். ஆனால் அதை அவர் படமாக்கிய விதம் தான் அற்புதமாக இருந்தது.

பாலுமகேந்திரா எனக்கு ஒரு தந்தை போல் இருந்தார். எனக்கு திரைத்துறையில் மிகவும் பிடித்தவர். தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தேன்.

கன்னடத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால் தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை, நான் திரும்பி வரும்போது இங்கு நிறைய புது நடிகைகள் வந்துவிட்டனர் அதனால் குணச்சித்திர பாத்திரங்கள் தான் செய்தேன்.

தமிழ் திரையுலகம் பிடிக்கும் என்பதால் அதிலும் தொடர்ந்து நடித்தேன். அப்போதைய நடசத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளேன் என இப்போது நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் அம்மா அப்பாவை, அத்தை மாமா மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து வந்துவிட்டதால், சினிமாவிலிருந்து, ஒதுங்க வேண்டியதாகிவிட்டது.

இது பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றுதான். அந்த காலகட்டத்திலும் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் என்னால் தான் நடிக்க முடியவில்லை.

கரு.பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்தேன். அவரது சதுரங்கம் படத்திலும் நடித்திருந்தேன். இடையில் எனக்கு நேரமே இல்லை.

இப்போது தான் கொஞ்சம் நேரம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், அவர்களே நீ நடிக்கலாமே அம்மா எனக் கூறுகிறார்கள். நல்ல நல்ல வாய்ப்புக்களும் தேடி வருகிறது. அதனால் நடிக்கலாம் என்றிருக்கிறேன்.

நான் இருந்த போது இருந்த சினிமா , இப்போது இல்லை, நிறைய மாறிவிட்டது. சினிமா டெக்னாலஜியில் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இப்போது சினிமா ஓடிடி மூலம் வீட்டுக்கே வருகிறது. கதைகளுக்கு நிறைய முக்கியத்துவம் தந்து, வெப் சீரிஸ்களும் வருகின்றன.

எல்லோருக்குமான கதைகளும் இருக்கிறது. எனக்கு பொருந்தும் வித்தியாசமான பாத்திரங்களில் திரைப்படங்கள், வெப் சீரிஸில் நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் என்னை நீங்கள் மீண்டும், திரையில் பார்க்கலாம்” என்றார் வினோதினி.

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார் இந்த ‘வண்ண வண்ண பூக்கள்’ பட நாயகி. அவரை வாழ்த்தி வரவேற்போம்.

Vanna Vanna Pookkal fame Vinothini re entry in Kollywood

‘கேக் வெட்டாதீங்க… கிணறு வெட்டுங்க..’ என கூறிய கமலே கேக் வெட்டி கொண்டாட்டம்.; உலகநாயகனே ஊருக்குதான் உபதேசமா.?

‘கேக் வெட்டாதீங்க… கிணறு வெட்டுங்க..’ என கூறிய கமலே கேக் வெட்டி கொண்டாட்டம்.; உலகநாயகனே ஊருக்குதான் உபதேசமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 7ஆம் தேதி நேற்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

தன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் உறுப்பினர்களோடு காணொளி வாயிலாக கமல் உரையாடினார்.

அப்போது பேசியதாவது…, “நான் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கூறியதை தான் இப்போது சொல்கிறேன். ‘எனக்காக கேக் வெட்டாதீர்கள்; கிணறு வெட்டுங்கள்’ என்று. இன்றும் அதைத்தான் என் பிறந்தநாள் செய்தியாகச் சொல்கிறேன்” என்றார்.

முடிந்த வரை சேவை செய்யுங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள். மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் வழிகாணுங்கள். நம் நற்பணிகள் எல்லாருக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையட்டும்” என பேசினார்.

ஆனால் நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த கேக்கை பார்வையாளர்களுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசனே…. கேக் வெட்டாதீர்கள் கிணறு வெட்டுங்கள் என சொன்ன நீங்களே அதை செய்து முன்னுதாரணமாக இருந்திருக்கலாமே.. ஆனால் நீங்கள் மட்டும் கேக் வெட்டுவது எப்படி நியாயம் சாரே…

இந்த பார்ட்டி இல்லாமல் நேற்று ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலுகத்தில் கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமும் களைகட்டியது.

சினிமா பிரபலங்கள் பலருக்கு மதிய உணவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், அருண் வைத்யநாதன், நடிகர்கள் நரேன், மன்சூரலிகன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், , தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், ஆர்த்தி – கணேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு கமலை வாழ்த்தினர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்துடன் கோயம்புத்தூர் ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மநீம உறுப்பினர்கள் இந்தப் பள்ளி வகுப்பறைகளுக்கு பெயிண்ட் அடித்து கொடுத்துள்ளனர்.

டாக்டர் ரகுபதி தலைமையில் 75 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. ‘ஐயமிட்டு உண்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Host Kamal Haasan’s birthday in Bigg Boss 5 Tamil

தேசிய விருது நாயகர்கள் தனுஷ்-விஜய்சேதுபதியை முந்திய சிவகார்த்திகேயன்

தேசிய விருது நாயகர்கள் தனுஷ்-விஜய்சேதுபதியை முந்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது.

இந்த படம் 25 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்தது.

எனவே சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தனது சம்பளத்தை ரூ 30 கோடியாக சிவகார்த்திகேயன் உயர்த்திவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகிய 5 நபர்களை அடுத்து 6 இடத்திற்கு சிவகார்த்திகேயன் வந்துவிட்டார் என கூறப்படுகிறது.

அண்மையில் தேசிய விருது பெற்ற நடிகர்களான தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் இன்னும் ரூ 30 கோடி சம்பளத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan becomes 6th highest paid kollywood actor

நிஜ ராஜாகண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டும் நடிகர்.; செய்யாத குற்றத்திற்கு சித்ரவதை..: 1993ல் என்ன நடந்தது.?

நிஜ ராஜாகண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டும் நடிகர்.; செய்யாத குற்றத்திற்கு சித்ரவதை..: 1993ல் என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக நவம்பர் 2ல் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர்.

1993-ல் போலீஸார் சித்ரவதையில் கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு வழக்கை மையமாகக் கொண்டு ஜெய்பீம் படம் உருவானது.

*ராஜாக்கண்ணு கொலை வழக்கில் என்ன நடந்தது?*

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்தில் இருக்கும் கம்மாபுரத்தை அடுத்து இருக்கிறது முதனை என்ற சிறிய கிராமம்.

இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் எனப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வந்த அந்த குடும்பத்தினர், நெல் அறுவடை நேரங்களில் அருகிலிருக்கும் கிராமங்களுக்குக் குடும்பத்தோடு சென்று கூலி வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

1993-ல் கோபாலபுரம் என்ற கிராமத்துக்குக் கூலி வேலைக்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே ஒரு வீட்டில் தங்கியிருந்து விவசாயக் கூலி வேலைகளைச் செய்து கூலியாக நெல்லைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அப்போது ஒரு வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இதுகுறித்த போலீஸ் விசாரணைக்காக கம்மாபுரம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட குரும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.

தனது கணவரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் சென்ற அவரது மனைவியும் போலீஸார் கடுமையாகத் திட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

இந்தநிலையில், ராஜாக்கண்ணு காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடியதாக அவரது மனைவியிடம் போலீஸார் மறுநாள் சொல்கிறார்கள்.

அவர் வீட்டுக்கு வந்தால் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மிரட்டப்பட்டிருக்கிறார்.

ஆனால், போலீஸார் கடுமையாகத் தாக்கிய நிலையில் தனது கணவர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியோடு ஆர்டிஓ, டிஎஸ்பி தொடங்கி கடலூர் ஆட்சியரிடமும் ராஜாக்கண்ணுவின் மனைவி புகார் கொடுக்கிறார்.

இந்த புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராஜாக்கண்ணுவை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி தொடர் போராட்டங்களை நடத்தினர்.

அதன்பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்கிறார்கள்.

அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த கே.சந்துரு (உயர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்றவர். இவரின் கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்திருக்கிறார்) உதவியை ராஜாக்கண்ணுவின் மனைவி நாடுகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாட்சியம் அளித்தனர். 1996-ல் உயர் நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம், ரூ.2.65 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், ஜெயங்கொண்டான் அருகே மீன்சுருட்டியில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலத்தின் அடையாளங்களும் ராஜாக்கண்ணுவின் அங்க அடையாளங்களும் ஒத்துப் போவதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் இது கொலைவழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்தது. முதலில் கடலூர் நீதிமன்றத்திலும் பின்னர் விருதாச்சலம் விரைவு நீதிமன்றத்திலும் நடந்த இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராஜாக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 5 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும் அரசு மருத்துவர் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி விருதாச்சலம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற டிஎஸ்பி, கம்மாபுரம் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ராஜாக்கண்ணுவுக்கு சிகிச்சை அளித்ததாக பொய் சாட்சியம் கூறிய மருத்துவர் ராமச்சந்திரன் என்பவர் உள்பட 12 பேரைக் கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் கம்மாபுரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கோவிந்தன். வழக்கில் வெற்றி பெற்ற பிறகே திருமணம் என தனது திருமணத்தைத் தள்ளிப்போட்ட அவர், 2006-ல் தீர்ப்பு வந்த பிறகு, தனது 39-வது வயதில் திருமணம் செய்துகொண்டார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணனும் இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றினார்.

ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி, தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதிக்கு வீடு கட்டித் தர சம்மதித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில்…

செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி @jbismi அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன்.

பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன்.

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.

28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

This kollywood actor to build house for real life sengani

‘என்னத்த சொல்றது’… ‘ஜெய்பீம்’ படத்தை பார்த்த பார்த்திபன் பதிவு

‘என்னத்த சொல்றது’… ‘ஜெய்பீம்’ படத்தை பார்த்த பார்த்திபன் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக நவம்பர் 2ல் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெய்பீம்’ படம் குறித்து தனது விமர்சனத்தை ‘என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

“சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்… நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்!

ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு, அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் துவங்கி கரைந்தேப் போனேன்.

சந்துரு சார்! – இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன்.

அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன். அது இன்று திரு த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன்.

சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்”.

இவ்வாறு இயக்குனர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Parthiban about Suriya’s Jai Bhim

More Articles
Follows