மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகை அனுஷ்கா

மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகை அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை அனுஷ்கா.

இவர் தமிழில் ரஜினியுடன் லிங்கா, விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 மற்றும் சிம்புவுடன் வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களிலும் நடித்து இந்தியளவில் பிரபலமாகவுள்ளார்.

இந்த நிலையில் இவர் விரைவில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளதாம்.

இந்த படம் நாயகியை மையப்படுத்திய கதை என கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் அனுஷ்கா நடித்திருந்தார்.

இந்த இரு படங்களிலும் விக்ரம் தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Anushka and Vijay joins for a new film

ஆத்விக் பர்த்டே பார்ட்டியில் மிரட்டலான AK 61 லுக்கில் நடிகர் அஜித்

ஆத்விக் பர்த்டே பார்ட்டியில் மிரட்டலான AK 61 லுக்கில் நடிகர் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ல் வெளியானது. நிறைய அஜித் ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லையாம்.

இதனால் கலவையான விமர்சனங்களே வந்தன. முதல் 3 நாட்கள் மட்டுமே ஓப்பனிங் இருந்துள்ளது.

தற்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் நடிகர் அஜித்,

முழுக்க முழுக்க நரைத்த தாடி… நரைத்த தலை முடி என லுக்கில் இருக்கிறார் இவர்.

இந்நிலையில் தன் மகன் ஆத்விக்கிற்கு பிறந்தநாளை தன் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் நேற்று மார்ச் 2ல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில் அஜித்தின் மச்சானும் நடிகருமான ரிச்சர்ட்டும் கலந்துக் கொண்டுள்ளார்.

தன் குடும்பத்தாருடன் அஜித் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரகீறது.

தன் அடுத்த பட AK 61 பட லுக்கிலேயே அஜித் இந்த பார்ட்டியில் கலந்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ajith look from Aadvik birthday party

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வில்

“25 ஆண்டுகளாய் யுவன்”-நிகழ்ச்சியில் பாடகர்கள்:

விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்தில் “ஆண்டிப்பட்டி கணவாக் காத்து” பாடலை பாடிய பாடகர் செந்தில்தாஸ் வேலாயுதம், சாம்.பி.கீர்த்தன், வேலு, சுஜாதா வெங்கட்ராமன்,லேகா( Lega sri),பேபி.அதிரா ஆகியோர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா பாடல்கள் அடங்கிய இசை நிகழ்வை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

*இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது….*

இவ்வளவு நாள் என்னோட பயணம் அனைத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும், என்னோட வேலை செய்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசை கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி.

என்னுடன் பிரம்மா இருப்பார் இப்போது அவர் இல்லை அது வருத்தம் தான். என்னை இயக்கி கொண்டிருப்பது நீங்கள் தான். உங்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என்னுடன் இருக்கும் டீம் மிக நல்ல டீம், ராம்ஜி, கௌசிக், குரு எல்லோருக்கும் நன்றி.

நா.முத்துக்குமாருக்கு நான் கொடுத்த இடம் வேறு, அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச்சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன்.

இப்போது விவேக், பா விஜய் என நிறைய பேருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்னுடன் பயணித்த பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி.

இந்த 25 வருடம் எப்படி போனது என்பதே தெரியவில்லை. முதல் முறை நான் மியூசிக் செய்த போது இப்போது மாதிரி சோஷியல் மீடியா இல்லை. பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது.

யாராவது வந்து சொன்னால் தான் தெரியும், ஒரு முறை அம்மாவுடன் வெளியே போன போது, சிலர் “அங்க பாரு.. யுவன் அம்மா என்றார்கள்” ஓகே நம்மை இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என மகிழ்ச்சியாக இருந்தது.

அம்மாவை உண்மையில் நிறைய மிஸ் செய்கிறேன். இன்று கூட நிறைய அவரை பற்றி நினைத்தேன். ஆனால் அந்த இடத்தை கடவுள் புண்ணியத்தில் என் மகள் நிறைவு செய்கிறாள், கடவுளுக்கு நன்றி. இசைத்துறையில் நான் நிறைய பேருடன் வேலை பார்க்க நினைத்தேன் லதா மங்கேஷ்கர் உடன் வேலை செய்ய நினைத்திருந்தேன் முடியாதது வருத்தம் தான்.

நான் அதிகம் கேட்பது எப்போதும் அப்பா பாடல்கள் தான், வீட்டில் அவர் பாடல்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது என் மனைவி கூட திட்டுவார் ‘போதும்பா’ என்பார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள் தான் பிடிக்கும்.

நடிகர் விஜய் சாருடன் இருக்கும் ஜகதீஷ், ஒரு போட்டோ அனுப்பியிருந்தார். அதில் விஜய் சார் மகன், யுவனிசம் டீசர்ட் போட்டிருந்தார், பின்னர் விஜய் சாரை சந்தித்தபோது, என் மகன் உங்களோட பெரிய ஃபேன் என்றார், அது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் இந்தி குறித்து போட்ட டீசர்ட் குறியீடு கிடையாது, உண்மையிலேயே எனக்கு இந்தி தெரியாது அது தான், அதில் கருத்து எதுவும் இல்லை. நான் ஆன்லைனில் அதிகம் இருக்க மாட்டேன் என் மனைவி தான் இருப்பார் என்னைப்பற்றி விசயங்களை காட்டும் போது, சந்தோஷமாக இருக்கும். எனக்கு படத்தை விட ஃபேமிலி தான் சந்தோசம் தரும். அவர்களுடன் இருப்பதை தான் நான் அதிகம் விரும்புவேன்.

25 வருடங்கள் கடந்ததாக தெரியவில்லை, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். என் அம்மாவோட இழப்பு தான் இறைவன் பற்றிய தேடல் அதிகமாக காரணம், நானா இப்படி இசையமைக்கிறேன் என தேடும்போது ஒரு புள்ளியில் போய் நிற்கும் அல்லவா, அது தான் கடவுள் என நினைக்கிறேன்.

என் தயாரிப்பில் திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன் அடுத்த வருடத்தில் நானே இயக்க போகிறேன்.

ரஜினி சார் படத்திற்கு இசையமைக்க நான் ரெடி. நிறைய சுயாதீன ஆல்பங்கள் செய்ய வேண்டும் நிறைய புது முயற்சிகள் செய்ய வேண்டும். இந்த பயணம் நல்லபடியாக தொடரும் என நம்புகிறேன் நன்றி.

Yuvan Press Meet on completing 25 years of the musical journey

தெறிக்கவிடும் போஸ்டர்கள்..; சுபாஸ்கரன் பிறந்தநாளில் ‘பொன்னியின் செல்வன் -1’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெறிக்கவிடும் போஸ்டர்கள்..; சுபாஸ்கரன் பிறந்தநாளில் ‘பொன்னியின் செல்வன் -1’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான
மணி ரத்னம் இயக்கி வருகிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” இந்தாண்டு 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

(இன்று மார்ச் 2ல் லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே.

இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவரும்..

Official : Ponniyin Selvan release date revealed

ponniyin selvan

இசைஞானி இளையராஜாவின் ‘உலகம்மை’-க்கு கைகொடுத்த பாக்யராஜ்

இசைஞானி இளையராஜாவின் ‘உலகம்மை’-க்கு கைகொடுத்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, ‘உலகம்மை’ திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ் வெளியிட்டார்.

‘சாதி சனம்’, ‘காதல் எஃப்எம்’ மற்றும் ‘குச்சி ஐஸ்’ புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்ட ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார்.

மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள ‘உலகம்மை’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், அருள்மணி, காந்தராஜ், சாமி, ஜேம்ஸ், பிரணவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் பிரகாஷ், தான் மாணவராக இருந்த காலத்திலிருந்தே சு சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.
“அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன்.
சமுத்திரம் அவர்கள் காலமாகிவிட்டதால், அவருடைய மனைவியிடம் இருந்து உரிமையைப் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது.
சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும்.
டாக்டர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும், வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர்.
பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர். ரெட் டிராகன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் உலகம்மையை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் பிரகாஷ் இயக்கத்தில், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வி ஜெய பிரகாஷ் தயாரித்துள்ள, சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்ட ‘உலகம்மை’-யில், கௌரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Ilaiyaraaja’s BGM from ‘Ulagammai’ released by K Bhagyaraj

‘ஜெய்பீம்’ சமயத்தில் தர்மசங்கடங்கள்..; ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் முதல் பெரிய மாற்றம் – சூர்யா சூடான பேச்சு

‘ஜெய்பீம்’ சமயத்தில் தர்மசங்கடங்கள்..; ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் முதல் பெரிய மாற்றம் – சூர்யா சூடான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், ”

இந்தப்படத்தில் சூர்யா சாருடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. படப்பிடிப்பின் முதல் நாளே காதல் காட்சி என்பதால் மிகுந்த தயக்கத்துடன் இருந்தேன். சூர்யா சார் இயல்பாக பேசி அந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்க உதவினார்.

அவர் ‘நடிப்பு நாயகன்’ என்பதால், நெருக்கமான காட்சிகளிலும் எளிதாக நடிக்க கற்றுக் கொடுத்தார். ” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில்..

, ” நான் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து எந்த நாயகனுக்கும், படத்தின் நாயகி பட்டம் வழங்கியதில்லை. ஆனால் சூர்யா போன்ற அழகான நாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை பிரியங்கா மோகன், ‘நடிப்பு நாயகன்’ என பட்டம் கொடுத்திருக்கிறார்.

நானும் இதுவரை ஏராளமான நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் ஆனால் ஒருபோதும் இதுபோன்ற பட்டத்தை எனக்கு வழங்கியதில்லை. ஆனால் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர்களுக்கு பட்டத்தை வழங்கியதை பார்த்திருக்கிறேன்.

ஏராளமான சுவர்களில் ‘வள்ளல் சூர்யா’ என்று எழுதி இருப்பார்கள். எங்கள் வீட்டுப்பிள்ளை சூர்யாவிற்கு ‘புரட்சி நாயகன்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பெரியாரின் தொண்டன் என்பதால், அது தொடர்பான ஒரு விழாவிற்கு கலந்து கொள்ள சென்றேன். அப்போது நான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் இயக்குநர்,‘ சார் இதெல்லாம் ரிஸ்க். நீங்கள் மேடையேறி ஏதாவது பேச, அது படத்தின் பிசினசுக்கு நெகட்டிவா போய்விடும். அது மட்டுமல்ல உங்கள் மார்க்கெட்டே போய்விடும்’ என்றார்.

அப்போது அவரிடம், ‘மார்க்கெட் போனாலும் பரவாயில்லை. நான் பெரியாரின் தொண்டன் என்பதை ஒருபோதும் மறுக்க மாட்டேன். மறக்கமாட்டேன். நிச்சயம் அந்த விழாவில் கலந்து கொள்வேன்’ என்றேன். இன்று சூர்யாவின் படங்களில் தொடர்ச்சியாக பெரியாரின் புகைப்படங்களும், அம்பேத்கரின் புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.

‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ போன்ற படங்களில் பெரியார், அம்பேத்கார் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பார். எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. இந்தப்படத்தில் வினய் அவர்களின் வில்லத்தனத்தை பார்த்துவிட்டு சூர்யா ரசிகர்களுக்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன்.

பொருத்தமான கதாபாத்திரம் அமைந்தால் நான் மீண்டும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன். ஏனெனில் ஒரு தலைமுறைக்கே நான் வில்லன் நடிகர் என்பது தெரியாமல் போய்விட்டது.

தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும், அட்டகாசமான வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன்.” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில்…

” சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டத்தை விட, படம் மிகச் சிறப்பாக இருக்கும். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு பிறகு – கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் மேடையேறி இருக்கிறேன்.

சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத் தளத்தில், ‘எங்கள் சூர்யா அண்ணனை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள்’ என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தனர். அப்போது, ‘மாஸான கிராமிய பின்னணியிலான குடும்ப சென்டிமென்ட் கலந்த ஸ்கிரிப்ட் ஒன்று தயாராக இருக்கிறது’ என சமூக வலைதளத்தில் பதிலளித்தேன். அப்போது ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன்.

என்னுடைய சமூக வலைதள பதிவை கவனித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார், உடனடியாக சூர்யாவை சந்தித்து, அந்த படைப்பையும் எங்கள் நிறுவனம் சார்பில் உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டனர்.

ஒரு நல்ல திரைக்கதை, தனக்கான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து கொள்ளும் என்பார்கள். அந்த வகையில்தான் சூர்யா முதல் அனைவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்தனர். அவர்களும் தங்களது உழைப்பை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இப்படத்தின் கிளைமாக்சை மட்டும் விமர்சனத்தில் குறிப்பிடவேண்டாம். அதனை படம் பார்க்கும் ரசிகர்களிடமே விட்டுவிடுங்கள். இதனை ஒரு அன்பு வேண்டுகோளாகத்தான் முன்வைக்கிறேன். ” என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில்….

” இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால் உக்ரைனில் எதுவுமே அறியாத அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு கூட்டு பிரார்த்தனை என் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப வேண்டுமென ஒரு சில நிமிடங்கள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்திப்போம்.

நான் திரையரங்கில் தான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். வெற்றி படமா.. தோல்வி படமா.. நல்ல படமா.. தரமான படமா.. என்பதை திரையரங்குகள் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். அதுவும் ரசிகர்கள் மூலமாகவே அதனை சந்தித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு பொருத்தமான படமாகத்தான் ‘எதற்கும் துணிந்தவன்’ தயாராகியிருக்கிறது.

ஏனைய படங்களின் படப்பிடிப்பு போலல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவிட் காரணமாக மறக்க முடியாததாக இருந்தது. வழக்கமான படப்பிடிப்பை போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதற்கு ஒத்துழைத்த படக்குழுவினருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும், படப்பிடிப்பு தளம் முழுவதும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து பிறகு வேலை செய்தனர்.

படப்பிடிப்பில் கலந்துகொண்ட கடைநிலை ஊழியர் முதல் அனைவருக்கும் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முழு அக்கறையுடன் பேணி பாதுகாத்தனர். திருவிழா காட்சி படமாக்கும் போதும் இதனை முறையாக பின்பற்றினர்.

இந்தப்படத்தின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்காவிடம் ‘காக்க காக்க’ படத்தை பார்த்த போது உங்கள் வயது என்ன? எனக் கேட்டேன். அவர் ‘மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்’ என்றார். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய ரசிகையாக இருந்த பெண், தற்போது எனக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு ஏராளமாக இருக்கிறது. பழைய மூடநம்பிக்கைகளாக இருக்கலாம். பழகிக் கொண்ட வசதிகளாக இருக்கலாம். சௌகரியங்களாக இருக்கலாம். இது போன்றவற்றை இழக்கத் தயாராகி, புது முயற்சியுடன் பயணப்பட்டால் ஏராளமான இலக்குகளை அடையலாம். இழப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.

கோவிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகாலம் அனைத்தும் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. எல்லா விசயத்திலும் எல்லை தாண்டி சிந்திக்காதீர்கள். உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ..! அதை மட்டும் கேளுங்கள்.

இப்படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ், நான் 2டி எனும் நிறுவனத்தை தொடங்க காரணமாக இருந்தவர். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதை விவரிக்கும் முன்னர் என்னிடம், ‘உங்கள் ரசிகனாக இருந்து இப்படத்தை இயக்கவிருக்கிறேன்’ என சொன்னார்.

அப்போதுதான் அவருடைய மனதில் எந்த உயரத்தில் நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் தான் சொல்கிறேன், ‘இந்தப் படம் எதற்கும் துணிந்த ரசிகர்களான உங்களுக்குத்தான். உங்களுக்காகத்தான்’. இந்தப்படத்தில் யாரும் பேசாத ஒரு விசயத்தை, பொறுப்புணர்வுடனும் அற்புதமான கதையாக விவரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

‘ஜெய்பீம்’ பட வெளியீட்டின்போது சில எதிர்பாராத சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெற்றது. சில தவறுகளும், சில தர்ம சங்கடங்களும் ஏற்பட்டன. அனைவரும் அனைத்து விசயங்களையும் புரிந்து கொண்டனர்.

ஆனால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் பல நெருக்கடிக்கு ஆளானார்கள். அதனை ரசிகர் மன்றத்தினர் மிகவும் பக்குவப்பட்ட மனநிலையில் கையாண்டனர்.

இதையும் நான் பார்த்தேன். இந்த இளம் வயதில் உங்களிடம் இருந்த பக்குவத்தை கண்டு நான் வியந்தேன். அதற்கு நான் தலை வணங்குகிறேன். கடந்த 25 ஆண்டு காலமாக என் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களை கடவுளாக தான் காண்கிறேன். மார்ச் 10ஆம் தேதி முதல் மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.” என்றார்.

Actor Suriya speech at Etharkkum Thunindhavan trailer launch event

More Articles
Follows