OFFICIAL தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி

OFFICIAL தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட்லுக் ஜூன் 30ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

கேப்டன் மில்லர்

captain miller first look will be released on june 30

‘நா ரெடி’ பாடலுக்கு எதிர்ப்பு.; அடிப்பணிந்த ‘லியோ’ டீம் செய்த மாற்றம்

‘நா ரெடி’ பாடலுக்கு எதிர்ப்பு.; அடிப்பணிந்த ‘லியோ’ டீம் செய்த மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்’லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பாடலில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதால், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம், இந்தப் பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளித்தார். அதில், ‘போதைப் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளது என கூறிருந்தார்.

இந்நிலையில், ’நான் ரெடி’ பாடலில் ‘லியோ’ படக்குழு ஒரு சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

யூடியூபில் இருக்கும் இப்பாடலில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

லியோ

‘Leo’ movie team necessary action to mute ‘Naa Ready’ song controversies

18 ஆண்டுகளுக்கு பிறகு… ‘7G ரெயின்போ காலனி’ படத்தின் பார்ட் 2 அப்டேட்

18 ஆண்டுகளுக்கு பிறகு… ‘7G ரெயின்போ காலனி’ படத்தின் பார்ட் 2 அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை கலக்கிய திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ‘7G ரெயின்போ காலனி’.

ஏ எம் ரத்னம் தயாரித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதில் இடம்பெற்ற நா முத்துக்குமார் எழுதிய கண் பேசும் வார்த்தைகள் என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது.

இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

7G Rainbow Colony part 2 updates is here

இந்தியா.? சிங்கப்பூர்.? சூப்பர் ஸ்டார்களின் ‘ஜெயிலர்’ பட இசை விழா எங்கே? எப்போ.?

இந்தியா.? சிங்கப்பூர்.? சூப்பர் ஸ்டார்களின் ‘ஜெயிலர்’ பட இசை விழா எங்கே? எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

இதில் இந்தியாவின் ஒவ்வொரு மாநில சூப்பர் ஸ்டாரர்களும் இணைந்துள்ளனர்.

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பபிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை என ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்த படக்குழு திட்டமிட்டதாக தகவல்கள் பறந்தன.

ஆனால் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாகவும் டிரைலர் வெளியீட்டு விழாவை மற்ற மாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஜூலை இறுதி வாரத்தில் (23 தேதி) இந்த இசை விழா நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Rajinikanths Jailer audio launch venue updates

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த படமான ‘கொலை’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘கொலை’ படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இதில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் கொலை படம் வெளியாகிறது.

கொலை

Vijay Antony’s next kolai movie release date is here

தனது மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்த பிரபுதேவா; குடும்பத்தினர் அதிர்ச்சி

தனது மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்த பிரபுதேவா; குடும்பத்தினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என கலக்கி வருபவர் பிரபுதேவா.

இவர் தனது டான்ஸ் திறமையால் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

இவருக்கு முதலில் 1995-ம் ஆண்டு ரமலத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார், இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தது.

 நயன்தாரா

சில ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை நயன்தாராவை சிறிது காலம் காதலித்து வந்தார்.

அதன்பிறகு கொரோனா சமயத்தில் பிசியோதெரபிஸ்ட்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரபுதேவா – ஹிமானி சிங் தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிரபுதேவா தன் செல்ல மகளுக்கு தனது முன்னாள் காதலியான நயன்தாராவின் பெயரை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சில யூடியூப் சேனல்களும் பிரபுதேவா மகளின் பெயர் நயன்தாரா என தெரிவித்துள்ளன.

மேலும், இவை அனைத்தும் வதந்தி என்று பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.

prabhudeva named his daughter as nayanthara

More Articles
Follows