தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் மற்றும் கைரா அத்வானி இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த நிலையில் திடீரென அமீர்கானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
எனவே அந்த பட நாயகி கைரா அத்வானிக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
அவரும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
கடந்தாண்டில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன் & ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் குணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bollywood Super Star Aamir Khan tests positive for corona