‘கட்டம் சொல்லுது’.. என்ன சொல்லுது.? கார்த்தி அமீர்கான் சூர்யாவுடன் சேர்ந்து வர்றாங்களாம்.

‘கட்டம் சொல்லுது’.. என்ன சொல்லுது.? கார்த்தி அமீர்கான் சூர்யாவுடன் சேர்ந்து வர்றாங்களாம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் ஆகஸ்ட் 11 & 12 தேதிகளில் ரிலீசாகவுள்ள படங்களை பற்றி பார்ப்போம்.

ஹிந்தியில், ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான்.

அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.

பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதியில்…

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘கடமையை செய்’.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் யாசிகா ஆனந்த் நடித்துள்ளார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்செட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

——-

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 12ல் இப்படம் ரிலீசாகிறது.

இத்துடன் ‘கட்டம் சொல்லுது’ படமும் ஆகஸ்ட் 12ல் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

——–

அறிமுக இயக்குனர் எஸ் ஜி எழிலன் இயக்கத்தில் தீபா சங்கர், எழிலன், திடியன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ‘கட்டம் சொல்லுது’.

ஒளிப்பதிவாளர் சபரீஸ். இசையமைப்பாளர் தமீம் அன்சாரி. எடிட்டிங் – விஜய் வேலுக்குட்டி.

Kattam Solluthu movie to clash with Karthi and Ameer Khan films

ஹிந்தி தெரியாது போடா சொல்லிட்டு ஹிந்தி படத்தை ரிலீஸ் பண்றிங்களே.? அமீர்கான் முன்னிலையில் உதயநிதி விளக்கம்

ஹிந்தி தெரியாது போடா சொல்லிட்டு ஹிந்தி படத்தை ரிலீஸ் பண்றிங்களே.? அமீர்கான் முன்னிலையில் உதயநிதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில், ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான்.

ஹாலிவுட்டில் உருவான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் தழுவல் இப்படமாகும்.

அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.

இந்த வேடத்தில் தான் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் தமிழக வெளியீடு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பாக உதயநிதி பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை அமீர்கான் உள்ளிட்ட பட குழுவினர் சந்தித்தனர்.

இந்த விழாவில் உதயநிதியும் கலந்து கொண்டார்.

அப்போது.. “ஹிந்தி தெரியாது போடா என்று எதிர்க்கும் நீங்கள் ஹிந்தி படத்தை வெளியிடுவது ஏன்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு உதயநிதி பதிலளிக்கையில்…

“எந்த மொழியும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்க கூடாது என்பதைதான் கூறி வருகிறோம்.

இது நாங்கள் வெளியிடும் முதல் ஹிந்தி படம் ஆகும். இதற்கு முன்பு சில தெலுங்கு படங்களை வெளியிட்டு இருக்கிறோம்” என்று உதயநிதி பதிலளித்தார்

Explanation of Udayanidhi in the presence of Ameer Khan

இவர்தான் என் புது கணவர்.; நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி சொன்னதை கேளுங்க..

இவர்தான் என் புது கணவர்.; நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி சொன்னதை கேளுங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பு, காதல் கிசுகிசு, புலி முருகன், வீரம் & அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.

இவர் இயக்குநர் சிவாவின் தம்பி ஆவார்.

இவரின் முன்னாள் மனைவி அம்ருதா சுரேஷ். (தற்போது மறுமணம் செய்துவிட்டார் பாலா)

பின்னணி பாடகியான அம்ருதா மலையாள படங்களில் நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை அம்ருதா காதலித்து வருவதாக தகவல்கள் வந்தன.

இவர்களும் தங்களது நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

தற்போது அம்ரிதா தனது பிறந்த நாள் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ”உனக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளில்லை. எனக்கு இது மிகவும் சிறப்பான பிறந்த நாள். என் கணவரே, நீ சிறப்பானவர்’ என பதிவிட்டுள்ளார்.

கூடுதல் தகவல்..

தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

bala amrutha

Amrutha Suresh opens up about her relation ship with Gopi Sundar

பக்தியை விட படிப்பே முக்கியம்.. ‘விருமன்’ விழாவில் சூரி பேச்சு சர்ச்சை.; இயக்குனர் பேரரசு விளக்கம்

பக்தியை விட படிப்பே முக்கியம்.. ‘விருமன்’ விழாவில் சூரி பேச்சு சர்ச்சை.; இயக்குனர் பேரரசு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசும்போது…

சூர்யா வந்தாலே தாங்காது, மாறன் விருமன் இருவரும் வந்தால் சொல்லவா வேண்டும்? மதுரையே ஆரவாரமாக இருக்கிறது. ரசிகர்கள் சார்பாக சூர்யா அண்ணன் தேசியவிருது
பெற்றதற்கு வாழ்த்துகள்.

இந்த விருதுகளெல்லாம் சினிமாவில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்தது. ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட, ஆயிரமாயிரம் அன்னச் சத்திரம் கட்டுவதைவிட, ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மத்திற்கு பேசப்படும்.

அவரின் குடும்பமும் அதைத் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், உங்கள் பின்னால் உறுதுணையாக பலரும் இருக்கிறார்கள்.”

என பேசினார் சூரி. இந்த பேச்சு சர்ச்சையானது.

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு சூரிக்கு ஆதரவாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

அதை பாராட்டும் நோக்கத்தோடு சூரி பேசிய பேச்சு தான் கோயில் கட்டுவதைவிட படிக்க வைப்பது மேல் என்று பேசியுள்ளது.

பக்தியை விட படிப்பு முக்கியம் என்ற கருத்தைத்தான் சொல்ல வருகிறார்.

இதை கோயிலுக்கு எதிரானதாக, இந்து மதத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சூரி இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல !அவர் நடத்தும் உணவகம் பெயர் கூட அம்மன் உணவகம் என்றுதான் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அவரை தவறாக நினைப்பதையும் தவறாக விமர்சிப்பதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து.
*பேரரசு

Perarasu support Soori for Viruman event controversial speech

டெல்லிக்கு பறந்தார் நடிகர் ரஜினிகாந்த்.; ஓ இதுதான் விஷயமா.?

டெல்லிக்கு பறந்தார் நடிகர் ரஜினிகாந்த்.; ஓ இதுதான் விஷயமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் புதிய பட அறிவிப்பு சில மாதங்களில் வெளியானது.

இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்குகிறார்.

இது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 169 படமாகும்.

‘ஜெய்லர்’ என்று அறிவிக்கப்பட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

எனவே படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.

எனவே அவர் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடுப்பில் கலந்து கொள்வார் என் கூறப்படுகிறது.

இந்த முறை சென்னை விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வருவது யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth going to Delhi for Jailer shooting

தேவி ஸ்ரீ பிரசாத் உடன் ஆஷா போன்ஸ்லே & அமிதாப்பச்சன் பாடிய தேசப்பக்தி பாடல்

தேவி ஸ்ரீ பிரசாத் உடன் ஆஷா போன்ஸ்லே & அமிதாப்பச்சன் பாடிய தேசப்பக்தி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹர் கர் திரங்கா’ என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்தி பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் பாடலை, பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.

இதைப் பற்றி பேசிய டிஎஸ்பி…

“இந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது.

இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும். மேலும் இப்பாடல் எனக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்,” என்று கூறினார்.

“உலகெங்கிலும் நடைபெறும் எனது அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய இந்தியக் கொடியுடன் மேடையில் தோன்றி தேசபக்தி பாடல் ஒன்றை பாடுவேன்.

நம் தேசத்தின் மீது என் அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்துள்ளது.
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

எல்லா வயதினரையும், குறிப்பாக இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ள தேசபக்தி ததும்பும் இப்பாடலின் மூலம் தான் உண்மையிலேயே ஒரு இசை மேஸ்ட்ரோ என்பதை டிஎஸ்பி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

சமீபத்தில் ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்பட ஆல்பத்தில் நாம் பார்த்தது போல் தனது பாடல்களால் பார்வையாளர்களை கவர்வதில் தனித்திறமை கொண்டவராக டிஎஸ்பி திகழ்கிறார்.

பாடகரும் இசையமைப்பாளருமான இவர் தற்போது ‘புஷ்பா 2’ பல படங்களில் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

Music Composer Rockstar @ThisIsDSP ‘s Mesmerising Patriotic Song #HarGharTiranga goes viral!

It’s a proud moment that our own PAN INDIAN Rockstar has composed our National song for India.

Music Composer DSPs new song Har Ghar Tiranga goes viral

More Articles
Follows