கல்யாணமாச்சா? நெற்றி வகிடில் ஏன் குங்குமப் பொட்டு..? ரசிகரை சந்தேகத்தை தீர்த்த ஷனம் ஷெட்டி

கல்யாணமாச்சா? நெற்றி வகிடில் ஏன் குங்குமப் பொட்டு..? ரசிகரை சந்தேகத்தை தீர்த்த ஷனம் ஷெட்டி

Sanam Shettyநடிகை சனம் ஷெட்டியும் பிக்பாஸ் தர்ஷனும் காதலித்தனர்.

பின்னர் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும் சனம் புகார் கொடுக்க அது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இருவரும் பின்னர் பிரிந்தனர்.

இந்த நிலையில் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஷனம் தன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.

இவர் பிக்பாஸில் இருந்த போதும் சேலை கட்டும் தருணங்களில் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.

இதனால் சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஏன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டை வைத்திருக்கிறார் என ரசிகர்கள் குழம்பினர்.

ஒரு ரசிகர் இதை ஷனம் ஷெட்டியிடம் கேட்டார்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்…

ஆஹா.. இதே கேள்வியைத்தான் நிறைய பேர் கேட்கிறாங்க.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..,

உங்கள் ஆசியுடன் விரைவிலேயே திருமணம் ஆகும் என நினைக்கிறேன்.

எங்க குடும்பத்தில் உச்சந்தலை வகிடில் குங்குமப் பொட்டு வைப்பது இயல்பானது.

திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவரும் வைப்போம் என பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகரோ… அவங்க (ஷனம்) கன்னடர் நண்பரே, கர்நாடகாவில் திருமணம் ஆகாத பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைக்கும் வழக்கும் உள்ளது என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

Bigg Boss sanam shetty married or not ?

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நடிகையுடன் ‘பிக்பாஸ்’ பாலாஜி காதல்.?

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நடிகையுடன் ‘பிக்பாஸ்’ பாலாஜி காதல்.?

balaji murugadoss yashikaஇருட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

இவர் நடிகர் மஹத்தை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதனை மறுத்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரன்னரான பாலாஜியுடன் யாஷிகா இணைந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது.

இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்த யாஷிகா, “இருவரும் நண்பர்களாக பழகி வருகிறோம். அவர் அடைந்துள்ள வளர்ச்சியில் எனக்கு சந்தோஷம்’’ என தெரிவித்துள்ளார்.

IAMK heroine is in love with Bigg Boss Balaji Murugadoss

முதல்வர் திறந்து வைத்த ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் அஜித் பங்களிப்பு

முதல்வர் திறந்து வைத்த ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் அஜித் பங்களிப்பு

Jayalalithaமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை ‘வேதா இல்லம்’ என நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றியுள்ளது.

ஆனால் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது எனவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே வேதா இல்லத்திற்குள் செல்ல வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ‘வேதா இல்லத்தை திறந்து வைத்தார்

இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட 9 அடி முழு உருவ ஜெயலலிதா சிலையை முதல்வர் திறந்துவைத்தார்.

மேலும் உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ‘ஜெயலலிதா வளாகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தின் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஆம்… ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் அஜித் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற துணியை ட்ரோன் மூலமாக அகற்றி முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இத்துடன் (அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன்) அஜித் வடிவமைத்த ட்ரோன் மூலமாக ஜெயலலிதா சிலை மீது மலரும் தூவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith’s contribution in Jaya Lalitha’s statue unveiling

பிப்ரவரி 5 முதல் ரவிதேஜாவுடன் ஸ்ருதி வரலட்சுமி சமுத்திரகனி இணைந்த ‘க்ராக்’

பிப்ரவரி 5 முதல் ரவிதேஜாவுடன் ஸ்ருதி வரலட்சுமி சமுத்திரகனி இணைந்த ‘க்ராக்’

krack telugu film (2)சங்கராந்தி சிறப்பு திரைபடமாக வெளியாகி பம்பர் ஹிட்டடித்த “க்ராக்” தெலுங்கு திரைப்படம் பிப்ரவரி 5 முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளிவரவுள்ளது.

தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா என கொண்டாடப்படும் நடிகர் ரவிதேஜா நடிப்பில், தயாரிப்பாளர் B. மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள தெலுங்கு படம் “க்ராக்”.

நீண்ட பொதுமுடக்க காலத்திற்கு பிறகு சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது.

தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் திரையரங்குகளுக்கு அலைஅலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இப்படம்.

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மாஸ், கிளாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்தது.

பல முன்னணி நடிகர்களின் இது வரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்து, சாதனை படைத்திருக்கிறது.

பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக்கோலம் காண வைத்தது இப்படம்.

இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பால் ஆஹா ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் தாண்டி தமிழ் மலையாளம் மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன், முக்கிய கதாப்பாத்திரத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், வில்லன்களாக சமுத்திரகனி, ஸ்டன் சிவா என தமிழக நடிகர்களே அதிகம் நடித்துள்ளனர்.

தமிழக தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பங்குகொண்டுள்ளனர்.

தமிழகத்திலும் கேரளாவிலும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டால் மொழி தெரியாத ரசிகர்கள் கூட்டமும் ரசிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இக்கோரியினை ஏற்ற படக்குழு “க்ராக்” படத்தின் டப்பிங் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்” பிப்ரவரி 5முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளிவரவுள்ளது…

Telugu hit Krack ‘s Tamil and Malayalam dubbed version to release on Feb 5th

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி மனைவி லதா.? அம்மன் கோயிலில் சௌந்தர்யா சிறப்பு பூஜை

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி மனைவி லதா.? அம்மன் கோயிலில் சௌந்தர்யா சிறப்பு பூஜை

நடிகர் ரஜினிகாந்த் 2020 டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுப்பட போவதில்லை என நீண்ட விளக்கம் அளித்தார்.

இதனால் ரஜினி் ரசிகர்களும் அவரது வருகையை எதிர்பார்த்த தமிழர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா & அவரது கணவர் விசாகன் ஆகியோர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ரஜினிக்காக சிறப்பு தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா ரஜினி தனது கணவருடன் வந்து வழிபாடு நடத்தினார்.

அப்போது அவர், தனது அம்மா லதா ரஜினி தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும் என வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் தன் அப்பா ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்ய வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் அனைத்து புது முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டதாம்.

எனவே இன்னும் சில தினங்களில் லதா ரஜினியின் புதிய கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தலைவா… என்ன நடக்குது..??

Latha Rajinikanth to start a new political party ?

soundarya rajinikanth

விக்ரம் பிரபுக்கு போட்டியாக சிவாஜி குடும்பத்திலிருந்தே அடுத்த நடிகர் பராக்..

விக்ரம் பிரபுக்கு போட்டியாக சிவாஜி குடும்பத்திலிருந்தே அடுத்த நடிகர் பராக்..

Dharshanதமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

மேடை நாடகங்களில் மூலம் நடிப்பை கற்று, சினிமாவில் நுழைந்து உலக கலைஞர்களுக்கே ஆதர்ஷ நாயகனாக மாறியவர் சிவாஜி கணேசன். இன்றுவரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது, அவரை முன்வைத்தே பாடமெடுக்கப்படுகிறது.

அப்படியான நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்திலிருந்து தன் தாத்தா வழியில் நடிப்பை கற்று திரையில் அறிமுகமாக காத்திருக்கிறார் தர்ஷன்.

நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் அவர்களின் இரண்டாவது மகன் தான் தர்ஷன். தர்ஷன் தன் தாத்தா போல் சிறுவயது முதலே, கலை ஆர்வம் அதிகம் உள்ள நபர்.

தன் தாத்தா மேல் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் தர்ஷன் நடிப்பை முறையாக் கற்று நடிப்பிற்காக முழுமையாக தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார்.

தனது கல்லூரி காலம் தொடங்கி, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மேடை நாடகங்களில் பங்காற்றிவருகிறார். டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா-வில் உள்ள பேராசிரியர்களின் கீழ் பயிற்சி பெற்றுவருகிறார்.

தர்ஷன் பல்வேறு விதமான நாடக முறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்ண்டுள்ளார்.

சபா நாடகம், தெருகூத்து, வீதி நாடக குழு, நாட்டுபுற நாடகம், தனி நடிப்பு மற்றும் சமூக நாடகம் போன்ற செயல்பாடுகளை மும்பை, புனே மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுதும் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தானே நாடக நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தியுள்ளார்.

இந்தியாவில் எந்த ஒரு வாரிசு நடிகரும் செய்யாத சாதனையாக தெருக்கூத்து, வீதி நாடக குழு ஆகியவற்றில் பணிபுரிந்து சாதனை படைத்திருக்கிறார் தர்ஷன்.

வாரணாசி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர் நடித்து, இயக்கிய “ராவி பார்” என்ற நாடகம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தன் தாத்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தன்னை முழுதாக நடிப்பிற்கு ஒப்புக்கொடுத்து அதன் தாத்பர்யங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்திருக்கும் தர்ஷன் அடுத்ததாக திரை உலகில் நுழைய தயாராகி வருகிறார் .

தர்ஷன் நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. நடிகர் திலகம் வீட்டிலிருந்து மற்றுமொரு பொக்கிஷம் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவுள்ளது.

ஏற்கெனவே பிரபு மகன் விக்ரம் தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர்களது குடும்பத்திலிருந்து மற்றொரு நடிகர் உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dharshan from Sivaji Ganesan family becomes hero

More Articles
Follows