லியோ விஜய் பற்றிய பாபு ஆண்டனியின் பதிவு வைரல்!

லியோ விஜய் பற்றிய பாபு ஆண்டனியின் பதிவு வைரல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி லியோவில் விஜய்யுடன் பணியாற்றியது குறித்து போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணை தாண்டி வருவாயா படங்களில் என் நடிப்பை பார்த்து எனக்கு ரசிகனாக மாறியதாக விஜய் என்னிடம் கூறியது எனக்கு பேரின்பத்தை தந்தது என தெரிவித்துள்ளார். தளபதி விஜயை முதன் முதலில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம் என மனதார பாராட்டியுள்ளார்.

Babu Antony post about Vijay goes viral

நேற்று ஜாலியாக ரீல்ஸ்.. இன்று தூக்கில் தொங்கிய பிரபல நடிகை!

நேற்று ஜாலியாக ரீல்ஸ்.. இன்று தூக்கில் தொங்கிய பிரபல நடிகை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆகன்ஷா டூபே. 25 வயதே ஆகும் இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

அடிக்கடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு ஆக்ட்டிவாக வளம் வரும் இவர் நேற்று பனாரஸ் ஹோட்டலில் தங்கியிருந்த சமயத்தில் நடன வீடியோ வெளியிட்டிருந்தார்.

இன்று தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிப்ரவரி 14 அன்று சமர் சிங் என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்திருந்தார். அவருடன் எதாவது பிரச்சனை இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Actress Akansha Dubey found dead in varanasi hotel

‘சந்திரமுகி’ ஆக மாறிய கங்கனா.; வைரலாகும் ராகவா லாரன்ஸ் போட்ட பதிவு

‘சந்திரமுகி’ ஆக மாறிய கங்கனா.; வைரலாகும் ராகவா லாரன்ஸ் போட்ட பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 15 வருடங்களுக்குப் பிறகு இயக்கி வருகிறார் பி வாசு.

இந்த படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க லைக்கா நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கேரக்டரில் நடிக்கிறார்.

இவர்களுடன் லஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா, மகிமா, ரவி மரியா, மனோ பாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘சந்திரமுகி 2’ படத்தில் தனது போர்ஷனை அண்மையில் தான் நடிகை கங்கனா ரனாவத் முடித்திருந்தார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன் சந்திரமுகி மேக்கப்பில் இருக்கும் கங்கணாவின் படத்தை பகிர்ந்து இருந்தார் ராகவா லாரன்ஸ்.

அந்த புகைப்படமும் அதன் தொடர்பான சந்திரமுகி பாடலும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Kangana who became ‘Chandramukhi’ . Raghava Lawrence’s post is going viral

https://www.instagram.com/p/Cp_vse1yeB2/?igshid=YmMyMTA2M2Y=

தேவையில்லாத கேள்வி.; அஜித் படம் பற்றி கேட்டதற்கு விக்னேஷ் சிவன் பதில்

தேவையில்லாத கேள்வி.; அஜித் படம் பற்றி கேட்டதற்கு விக்னேஷ் சிவன் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அஜித் 62’ ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இதிலிருந்து நீக்கப்பட்டார் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில் AK 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதனை அடுத்து ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு புதிய படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அதில் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பார் எனவும் அனிருத் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைத்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் விக்னேஷ் சிவன்.. அப்போது ஏகே 62 படம் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

இதற்கு விக்னேஷ் சிவன் பதிலளிக்கும் போது.. “இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாமல் கேள்வி இது. இந்த நிகழ்ச்சி பற்றி கேளுங்கள் நான் பதிலளிக்கிறேன் அது தேவையில்லாத கேள்வி” எனக் கூறி புறப்பட்டு சென்றார் விக்னேஷ் சிவன்.

Unnecessary question. Vignesh Shivan’s response to Ajith’s film

‘லவ் டுடே’ ஹிந்தி ரீமேக்..; அமீர்கான் – ஸ்ரீதேவி வாரிசு-கள் கூட்டணி

‘லவ் டுடே’ ஹிந்தி ரீமேக்..; அமீர்கான் – ஸ்ரீதேவி வாரிசு-கள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ படத்தை தொடர்ந்து பிரதீப் நங்கநாதன் நாயகனாக நடித்து இயக்கிய படம் ‘லவ் டுடே’.

இதில் இவானா, ரவீனா, யோகி பாபு சத்யராஜ் ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

கிட்டத்தட்ட ரூ 6 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படம் 20 மடங்கு லாபத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு பெற்றுத் தந்தது. படமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே இந்த படத்தை ரீமேக் செய்ய பல்வேறு மொழிகளில் போட்டி உருவானது.

இந்த நிலையில் ஹிந்தியில் லவ் டுடே படத்தை ரீமேக் செய்ய பிரபல நிறுவனம் முன் வந்துள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக் அமீர்கான் மகன் நடிக்கிறாராம்.

ஹீரோயினாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Love today hindi remake updates

‘இறப்பின் ரகசியம்’ தெரியனுமா.? தைரியம் இருந்தா படத்தை பாருங்க.!

‘இறப்பின் ரகசியம்’ தெரியனுமா.? தைரியம் இருந்தா படத்தை பாருங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறப்பு எனும் துயர சம்பவத்தின் பின்னணியை மையப்படுத்தி ‘இறப்பின் ரகசியம்’ எனும் பெயரில் புதிய தமிழ் திரைப்படமொன்று தயாராகி வருகிறது.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மைம் கோபி, அப்புக்குட்டி, சம்பத்ராம், மணிமாறன், KPY பாலா, சில்மிஷம் சிவா, ராஜ் தேவ், ஆதாஷ், சபரி, குழந்தை நட்சத்திரம் சஞ்சனா, குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் இமானுவேல் (Director IMANUVEL) கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் திரைப்படம் ‘இறப்பின் ரகசியம்’.

இந்தத் திரைப்படத்திற்கு புதுமுக ஒளிப்பதிவாளர் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். 20க்கும் மேற்பட்ட பல பெரிய வெற்றிப்படங்களுக்குஅசோசியட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

படத்தொகுப்பு பணிகளை செஞ்சி மாதவன் கவனிக்கிறார்.இவர் தில்லுக்கு துட்டு 2,இடியட் போன்ற வெற்றிப் படங்களின் எடிட்டர் ஆவார். கன்னடப்படமான தேவராகன்சு, அட்டகத்தி தினேஷ் நடிக்கும் கருப்பு பல்சர், யோகிபாபு நடிக்கும் ஹைகோர்ட் மஹாராஜா போன்ற படங்களின் இசையமைப்பாளர் சாண்டி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ரூத்ர தாண்டவம், பகாசூரன், நெருங்கி வா முத்தமிடாதே போன்ற பலப்பல வெற்றி படங்களில் சண்டைப்பயிற்சியாளராக இருந்த சண்டை பயிற்சியாளர் மிரட்டல் செல்வா இப்படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை மனோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா (Mano creation A.RAJA ) தயாரித்திருக்கிறார்.

இப்படத்திற்கு டாக்டர் லட்சுமி பிரியா (Shakthi Pictures Co-Producer Dr.A.LAKSHMI PRIYA )இணை தயாரிப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” நாம் அனைவரும் பிறப்பின் ரகசியம் குறித்து மருத்துவ ரீதியாக தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இறப்பின் ரகசியம்.. இன்று வரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அதனால்தான் படத்தின் தலைப்புடன் ‘தெரிந்து கொள்ள தைரியம் தேவை’ என்ற டேக்லேனை இணைத்திருக்கிறோம்.

இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது இறப்பின் ரகசியம் ரசிகர்களுக்கு தெரியும். இந்த திரைப்படம் பேய் படம் அல்ல. தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ” என்றார்.

Producer -Mano creation A.Raja
Co-Producer -Shakthi Pictures Dr.A.lakshmipriya
Story,screenplay,dialogue,direction -Immanuvel
DOP- Vincent
Editer –Gingee /Madhavan
Music director –Sandy
Stunt- Miratal selva
Art- Sriman Balaji
Custumer –Dr.Lakshmi Priy
VFX & CG -Dhanasekar
SFX -PREM
PRO- SIVAKUMAR

Irappin Ragasiyam based on true life incidents

More Articles
Follows