அமெரிக்கா செல்லும் ரஜினியை சந்தித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

rajinikanth and gurumoorthyநான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் கட்சியை அறிவிப்பேன் என ஒரு சில வரிகள்தான் பேசினார் ரஜினிகாந்த்.

அதற்குள்ளேயே ரஜினியை விமர்சித்து பலரும் பல விதமாக பேசி வருகிறார்கள்.

ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களை கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் ரஜினியை நோக்கி கேட்கின்றனர்.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் ரஜினியை டார்கெட் செய்தே தங்களது அரசியலை முன்னெடுத்து செல்ல நினைக்கின்றனர்.

இதை எல்லாம் கண்டுக் கொள்ளாத ரஜினி தன் மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து தொண்டர்கள் சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று இரவு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கு 10 நாட்கள் தங்கிருந்து மருத்துவ பரிசோதனை செய்யவுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினியை இன்று காலை போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

அவர்கள் என்ன விவகாரம் குறித்து ஆலோசித்தார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்காவில் கட்சி சம்பந்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஆப்’ தொழில் நுட்பம் சார்ந்த பணிகளையும் ரஜினி பார்வையிட உள்ளாராம்.
மேலும் பல கட்ட நிபுணர்களையும் அரசியல் ஆலோசகர்களை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post