ஷாரூக்கானை அடுத்து அல்லு அர்ஜீனை இயக்கும் அட்லி.?

ஷாரூக்கானை அடுத்து அல்லு அர்ஜீனை இயக்கும் அட்லி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் மட்டுமில்லாமல் இந்தியளவில் கலக்கும் ஹீரோவாக வளர்ந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் வேட்டை செய்து வருகிறது.

தற்போது மீண்டும் சில தியேட்டர்களில் புஷ்பா திரைப்படம் வெளியாவதே இதன் வெற்றிக்கு ஒரு சான்றாகும்.

’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அல்லுக்கு அட்லி சொன்ன ஒன்லைன் கதை பிடித்துவிட்டதால் விரைவில் முழுக்கதையும் தயாராகவுள்ளதாம்.

தமிழில் விஜய்க்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லி தற்போது ஷாருக்கான் நயன்தாரா நடித்து வரும் ’கிங்’ என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Atlee to direct stylish star Allu Arjun for his next ?

பஞ்சர் ஒட்டிய மாணவியின் வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

பஞ்சர் ஒட்டிய மாணவியின் வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவி செய்வதை வாடிக்கையாக கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நிறைய பேர் படிப்புக்கு உதவி வருவதை நாம் அறிவோம்.

இந்த நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி தேவசங்கரி.

இவர் நர்சிங் படிக்க விரும்பினாலும் இவரது குடும்ப வறுமை அதற்கு தடையாக உள்ளது.

எனவே தன் தந்தை நடத்தி வரும் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார் தேவசங்கரி.

இவரை பற்றிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது பார்த்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

எனவே தேவசங்கரியுடன் போனில் பேசி அவரின் படிப்புக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

அதன்படி நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நர்சிங் பயிற்சி கல்லூரியில் தேவசங்கரி படிக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan helps nagapattinam student for her higher studies

குட்டி பவானிக்கு ‘கரா(ரம்) கொடுக்கும் பெரிய பவானி

குட்டி பவானிக்கு ‘கரா(ரம்) கொடுக்கும் பெரிய பவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா, விஜயகுமார், மனோராமா உள்ளிட்டோர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ’நாட்டாமை’.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். அன்று முதல் மாஸ்டர் மகேந்திரன் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

பின்னர் ரஜினியுடன் படையப்பா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

வளர்ந்து வாலிபனாக ஆன பின்னர் ஓரிரு திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு உள்ளிட்ட படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.

கடந்த வருடம் 2021ல் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது,

இதில் சிறுவயது விஜய்சேதுபதியாக பவானி கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது குட்டி பவானிக்கு பெரிய பவானி கரம் கொடுக்கிறார்.

மகேந்திரன் நடித்து வரும புதிய படத்திற்கு ‘கரா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை பவானி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜனவரி 23ஆம் தேதி மாலை 3.20 மணிக்கு விஜய்சேதுபதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை அவதார் என்பவர் இயக்க ராஜேஷ் குமார் என்பவர் தயாரிக்கவுள்ளார். அச்சு ராஜாமணியின் இசையில், வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், கிரேசன் படத்தொகுப்பை பணிகளை செய்கின்றனர்.

கூடுதல் தகவல்.. : கடந்த 2021ல் டிசம்பர் மாதம் ப்ளாக்ஹோல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் மாஸ்டர் மகேந்திரன், சந்தோஷ், மைக்கேல் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.

குறும்பட இயக்குநர் ஏ.ஆர்.ஸ்டீபன் இயக்கும் இப்படம் ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது.

இதில் வைஷ்ணவி, ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

Vijay Sethupathi will release Mahendran’s new movie first look poster

வைகைப்புயல் வடிவேலு உடன் இணையும் ‘பிக்பாஸ்‘ ஷிவானி

வைகைப்புயல் வடிவேலு உடன் இணையும் ‘பிக்பாஸ்‘ ஷிவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஷிவானிக்கு பெரும் பாப்புலாரிட்டியை பெற்று கொடுத்துள்ளது.

இவர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில் ஆகியோர் நடிக்கும் ’விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் ஷிவானி.

பொன்ராம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

’பம்பர்’ படத்தில் வெற்றிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும்’வீட்ல விசேஷங்க’ படத்திலும் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறர் என்ற செய்தியை நம் தளத்தில் படித்தோம்.

இந்த நிலையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் ஷிவானி நடிக்கிறாராம்.

Shivani joins with Vadivelu for her next film

ஆர் யூ ரெடி..?.. மறுக்கப்படும் விஷயங்களை நேரலையில் விவாதிக்க வருகிறார் ஸ்ருதிஹாசன்

ஆர் யூ ரெடி..?.. மறுக்கப்படும் விஷயங்களை நேரலையில் விவாதிக்க வருகிறார் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால் ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர்.

அனைத்து ரசிகர்களின் பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார்.

இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.

இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாக சமூகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்.

இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்த தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாதிப்பார்.

நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விசயங்களை பற்றி உரையாடலை நிகழ்த்தி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில்..,

நேரடி அமர்வுகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே, இந்த தலைப்புகளைப் பற்றி சமூகத்தில் ஒரு விவாதத்தை, உரையாடலை துவக்கவேண்டும் என்பதே ஆகும். ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட, பல வழிகள் உள்ளன, ஆனால் என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது, நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களைத் சமூகத்தில் ஏற்படுத்துவதே ஆகும்.

இது குறித்து இன்னும் சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்புகளில் நிகழும், உரையாடலில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின் போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்களை குறித்து அவர்களை சிந்திக்க வைப்பதும், பகிரவும் மற்றும் விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

Shruti Haasan to conduct live sessions on social topics starting 27th January

‘ஜென்டில்மேன் 2’ அப்டேட் : முடிஞ்சா இசையமைப்பாளரை கண்டுபிடிங்க.. கே.டி.குஞ்சுமோன் தருகிறார் தங்க காசு..!

‘ஜென்டில்மேன் 2’ அப்டேட் : முடிஞ்சா இசையமைப்பாளரை கண்டுபிடிங்க.. கே.டி.குஞ்சுமோன் தருகிறார் தங்க காசு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன்.

ஜென்டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து தமிழ் சினிமாவையே வியக்க வைத்தவர்.

அந்த காலத்திலேயே பட ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளருக்கு (இவருக்கு தான்) பெரிய பெரிய கட்-அவுட்கள் வைத்து அசத்தியவர் இவர்.

தற்போது கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகவுள்ள, ‘ *ஜென்டில்மேன் 2* ‘ படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர்.

பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

அதன் ஆரம்பத்தையே அதிரடியான அறிவிப்புடன் செய்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

தற்போது *ஜென்டில்மேன் 2* படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் எவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்து அசத்தியுள்ளார். விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது.

ஆனால் அவர் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது. படத்தின் மற்ற குழுவினர் அறிவிப்பும் இவ்வாறே நிகழவுள்ளது.

எல்லாவற்றிலும் புதுமையையும் பிரமாண்டத்தையும் கையாளும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அவர்கள், *ஜென்டில்மேன்2* படத்திலும் பிரமாண்ட அறிவிப்புகளை துவங்கியிருப்பது, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே பாராட்டை குவித்து வருகிறது.

Producer KT Kunjumon announced his next project

More Articles
Follows