5 மணி நேர மேக்அப்; 3 கெட்டப்… அசத்த போகும் அதர்வா

5 மணி நேர மேக்அப்; 3 கெட்டப்… அசத்த போகும் அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaaமூன்று விதமான வேடங்களில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

பிரசன்ன எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்கிறார்.

இப்படத்தை இயக்கி மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் தானே தயாரிக்கிறார் ஆர் கண்ணன்.

இப்படத்திற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறாராம் அதர்வா.

மேக்கப் துறையில் சிறந்த கலைஞர்களான ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசா ஆகியோர் அதர்வாவுக்கு மேக் அப் போடுகின்றனர்.

இவர்கள் பத்மாவத், மாம் ஆகிய படங்களில் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது…

“இந்த கதையும், அதர்வாவின் கேரக்டரும் உருவான போது அதற்கு 3 விதமான தோற்றங்கள் தேவைப்பட்டது.

எனவே அதன்படி அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை அளவெடுத்து சென்றனர் மேக் அப் மேன்கள்.

அதன்பின்னர் சூட்டிங்கின் போது ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள்.

அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது.” என்றார்.

ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய முதல்வர் எடப்பாடி

ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய முதல்வர் எடப்பாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and edapadi palani swamyமதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அப்போது திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு முதல்வர் பேசியதாவது…

தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று புதிதாக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.

இங்கு காலியிடங்கள் எதுவும் இல்லை. எல்லாம் புல்லாகிவிட்டது. வேறு மாநிலத்திற்கு செல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை மறைமுகமாக தாக்கினார் முதல்வர்.

அண்மையில் ஒரு விழாவில் வெற்றிடம் இருப்பதால் அரசியலுக்கு வருகிறேன் என ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு திரைப்படத்துக்கான சிறந்த பட விருதை மெர்சல் வென்றது

வெளிநாட்டு திரைப்படத்துக்கான சிறந்த பட விருதை மெர்சல் வென்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalகடந்த 2017 வருடம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மெர்சல்’.

விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இப்படத்தை அட்லி இயக்க, ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் ரூ. 120 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இந்நிலையில், பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாக்குகளின் அடிப்படையில் ஏழு நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு மெர்சல், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமாருக்மணி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தயாரிப்பாளர் லாபம் பெற சினிமா செழிக்க விஷால் யோசனைகள்

தயாரிப்பாளர் லாபம் பெற சினிமா செழிக்க விஷால் யோசனைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சில கோரிக்கைகள் வைத்துள்ளார்.

அந்த கோரிக்கைகள் இதோ…

1. மக்களிடம் டிக்கட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

2. டிக்கட் கட்டணத்தை குறைத்து ஏழை, நடுத்தர, உயர்தர மக்கள் மூன்று தரப்பினரும் படம்பார்க்க டிக்கட் கட்டணத்தை முன்பு இருந்ததுபோல் முதல் வகுப்பு , இரண்டாம் வகுப்பு , மூன்றாவது வகுப்பு, என முறைபடுத்த வேண்டும்.

3.தயாரிப்பாளர்கள் முன்பு தியேட்டர்களுக்கு பிரிண்ட் தந்ததுபோல் தற்போது படத்தை மாஸ்டிரிங் செய்து கண்டன்ட் தருகிறோம். ப்ரொஜக்டர் வைத்து திரையிடுவது திரை அரங்க உரிமையாளர்களின் பொறுப்பு.

4.அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு அனைவருக்கும் உண்மையான வசூலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யப்படும்போது அந்த படத்தின் வசூல் உண்மையிலேயே குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றார்போல் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சம்பளம் குறைக்க படவேண்டும்.

5. ஒவ்வொரு ஏரியாவிலும் சில நபர்களால் 80% தியேட்டர்கள் கையகப்படுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய தியேட்டர்கள் தடுக்கபடுவதும்
திரையிடும் தியேட்டர்களில் தரப்படும் டெபாஸிட் பணம் கொடுக்கப்படாமலும் தனிநபர்களால் செய்யப்படுகிறது.

வசூல் தொகையில் மிகக்குறைவான சதவீதம் பணமே ஷேர் தொகையாக அதுவும் பல மாத இழுத்தடிப்பிற்கு பிறகே தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதனால் சிண்டிகேட் இல்லாமல் இனிமேல் அந்தந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான் நேரடியாக தயாரிப்பாளர்களுடன் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வேண்டும்.”

எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம்-ஸ்டெர்லைட் போராட்டம்; கமல் பரபரப்பு பேச்சு

காவிரி விவகாரம்-ஸ்டெர்லைட் போராட்டம்; கமல் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்கள் குறித்து
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

* காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம்.

* காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

* தூத்துக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி அன்று மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்கிறேன்.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணி அல்ல, மத்திய அரசு நினைத்தால் அமைக்கலாம் .

* காவிரி விவகாரத்தில், எம்.பி-க்கள் ராஜினாமா செய்தால் பாராட்டுவேன்.

* காவிரிக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்பது அரசியல் பித்தலாட்டம்.

ஆகியவற்றைப் பற்றி கமல் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு : ரஜினி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் மார்ச் 29 உடன்
நிறைவடைகிறது.

காவிரி விவகாரம் பற்றியோ, தீர்ப்பு பற்றியோ ரஜினிகாந்த் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று தீவிரமாக நம்புவதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows