பேட்ட டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் கதையில் அதர்வா..?

பேட்ட டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் கதையில் அதர்வா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa Likely To Be Part Of Jigarthanda Telugu Remake

பீட்சா, ஜிகர்தண்டா, மெர்க்குரி படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ்.

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இவர் இயக்கியஜிகர்தண்டா படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர்.
சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றிருந்தார்.

இதில் சித்தார்த் வேடத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும், லட்சுமி மேனன் வேடத்தில் மிருணாளினியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 100 என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Atharvaa Likely To Be Part Of Jigarthanda Telugu Remake

ஒரு பக்கம் உற்சாகம் மறுபக்கம் பதட்டம்…. ‘குப்பத்து ராணி’ ஓபன் டாக்

ஒரு பக்கம் உற்சாகம் மறுபக்கம் பதட்டம்…. ‘குப்பத்து ராணி’ ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Palak Lalwani speaks on Kuppathu Rajaஜிவி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்துள்ள குப்பத்து ராஜா படம் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் நாயகியாக பாலக் லால்வானி நடித்துள்ளார்.

இப்பட நாயகி இப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது.

என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” என்றார் பாலக் லால்வானி.

படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது, “நான் முன்பே குறிப்பிட்டது போல சென்னையின் சேரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன்.

டிரைலர் மற்றும் பிற காட்சி விளம்பரங்களில் பார்க்கும்போது, படம் சீரியஸான விஷயங்களை பேசுவது போல உள்ளது, உங்கள் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என கேட்டால், “பாபா பாஸ்கர் சார் என்னிடம் ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே, கதையில் கமெர்சியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது குறித்து மிகவும் உற்சாகமடைந்தேன்.

நீங்கள் குறிப்பிட்டு என் கதாபாத்திரத்தை சொன்னால், அது மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் KL படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா திரைப்படம்.

Actress Palak Lalwani speaks on Kuppathu Raja

ஜிவி ப்ரோ பாட்ட கேட்டு சிலிர்த்துட்டேன்…. சூர்யா பாராட்டு

ஜிவி ப்ரோ பாட்ட கேட்டு சிலிர்த்துட்டேன்…. சூர்யா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya send bouquet and note to GV Prakash and praises his songs‘என்.ஜி.கே’ மற்றும் ‘காப்பான்’ ஆகிய படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார் என்பதையும் பார்த்தோம்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது அனைத்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இப்பட பாடல்கள் அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் “ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். சூப்பர் பாடல்கள்” என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார்.

இதனை போட்டோ எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Suriya send bouquet and note to GV Prakash and praises his songs

‘நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ … ஜிப்ரானிடம் அஜித் வாக்குறுதி

‘நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ … ஜிப்ரானிடம் அஜித் வாக்குறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Ghibran reveals Ajith wanted to work with him soonஉலகநாயகன் கமல்ஹாசனின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளர் என்றால் அது ஜிப்ரான் தான்.

கடந்த சில வருடங்களில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் உள்ளிட்ட படங்களுக்கு ஜிப்ரான் இசையைமைத்திருந்தார்.

தற்போது கமல் தயாரிப்பில் உருவாகி வரும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்திற்கும் இவரேதான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தை ஜிப்ரான் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து ஜிப்ரான் குறிப்பிட்டுள்ளதாவது…

அதில், “தல அஜித்துடன் அவரது உண்மையான ரசிகன்!.. அவரைப் பற்றி பலரும் சொல்வதைக் காட்டிலும் மேலானவர்.

அவர் சொன்னதிலேயே, ஒரே ஒரு வார்த்தை மட்டும் தொடர்ந்து என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் அது தான் ‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ . நன்றி, இனிய ஞாயிறு” என குறிப்பிட்டுள்ளார்.

Music Composer Ghibran reveals Ajith wanted to work with him soon

மோடி-சின்னய்யா-சின்னம்மா… கலாய்த்து தள்ளும் யோகி பாபு

மோடி-சின்னய்யா-சின்னம்மா… கலாய்த்து தள்ளும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babus Dharmaprabhu Teaser slams Indian Political Leadersவிமல், வரலட்சுமி ஜோடியாக இணைந்துள்ள `கன்னிராசி’ படத்தை இயக்கியவர் முத்துகுமரன்.

அந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது யோகிபாபுவை நாயகனாக வைத்து `தர்மபிரபு’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் யோகிபாபு எமதர்மனாக நடித்துள்ளார். அவரின் தந்தையாக ராதாரவி மற்றும் தாயாக ரேகா நடித்துள்ளனர்.

இவருடன் `வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.
அதில் ‘இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் இருக்கிறார்களா?, அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற அரசியல் வசனங்கள் வருகிறது.

மேலும் இந்தியர்கள் வங்கி கணக்கில் ரூ 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி சொன்னதையும் கிண்டல் செய்துள்ளனர்.

இது தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Yogi Babus Dharmaprabhu Teaser slams Indian Political Leaders

கடவுள் நம்பிக்கையும் யோகாவும் இணைந்தால் சக்தி கிடைக்கும் : ரஜினி

கடவுள் நம்பிக்கையும் யோகாவும் இணைந்தால் சக்தி கிடைக்கும் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக புகழ் பெற்ற ஆன்மீக நூல் -ஒரு யோகியின் சுயசரிதம் ஒலிநூல் வெளியீடு விழா சென்னையில் 30.3.19 இன்று மாலை 6 மணிக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது .
இந்த விழாவில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

கடவுளின் மீது உண்மையான நம்பிக்கை வையுங்கள், பக்தியுடன் கூடிய யோகா பயிற்சி செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும்.

யோகியின் சுயசரிதம் 125 வருடங்களாக ஆன்மிக உலகினை புரட்டி போட்ட புத்தகம்” என அவர் பேசினார்.

Rajini speech At Autobiography of a Yogi Tamil audio book launch event

Rajini speech At Autobiography of a Yogi Tamil audio book launch event

More Articles
Follows