சமுத்திரக்கனி-சசிகுமாரின் நாடோடிகள்2 படத்தில் இணைந்தார் அஞ்சலி

சமுத்திரக்கனி-சசிகுமாரின் நாடோடிகள்2 படத்தில் இணைந்தார் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anjali joins hands with Samuthirakani and Sasikumar for Nadodigal2சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இதன் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதை சமுத்திரகனி இயக்கி முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.

இந்நிலையில் இதில் நாயகியாக அஞ்சலி நடிக்கவிருக்கிறாராம்.

இசையை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொள்ள ஒளிப்பதிவை என்.கே.ஏகாம்பரம் செய்கிறார்.

கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.

Anjali joins hands with Samuthirakani and Sasikumar for Nadodigal2

கரப்பான் பூச்சி கவிதை எழுதிய நடிகை கீர்த்தி சுரேஷ்

கரப்பான் பூச்சி கவிதை எழுதிய நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal and Keerthy Suresh launched Lingusamy Haiku bookலிங்குசாமியின் ” லிங்கூ-அய்க்கூ” புத்தக வெளியிட்டு விழா சென்னை ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் – நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் , வசந்தபாலன் , கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் S.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

“லிங்கூ – ஹைக்கூ ” நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது…

“தாகூரின் கவிதை ஒன்று நியாபகம் வருகின்றது சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அணைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட பிடிப்பு உள்ளது.

பாலாஜி சார் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையை படித்து காட்டி என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார்.

பாலாஜி சாரை அறிமுகப்படுத்திய பாலன். இதே புஷ்கின் இலக்கிய பேரவைக்காக ஒரு மூன்று வரி கவிதையை எழுத வேண்டும் என்று முதல் முதலாக சந்தித்த பிருந்தா சாரதி அவர்கள் இப்பொது அதே ஹாலில் என்னுடைய கவிதை புத்தகத்தை வெளியீடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு மூன்று வரி கவிதை விகடனில் எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் நான் சென்னைக்கு வந்தேன்.

இப்பொதும் இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போன்று நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம். இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் இயக்குநர் லிங்குசாமி.

விஷால் பேசியதாவது…

எனக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை ஏன் லிங்குசாமி இங்கே அழைத்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவரை இயக்குநர் லிங்குசாமியாக தான் தெரியும். எனக்கு கவிதை, புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை.

ஆனால் இன்று முதல் இயக்குநர் லிங்குசாமி “ லிங்கு ஹைக்கு “ புத்தகம் கண்டிப்பாக என்னுடைய அறையில் இருக்க போகிறது. இது தான் நான் வாசிக்க போகும் முதல் கவிதை புத்தகம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை கீர்த்திசுரேஷ் அவரே சொந்தமாக ஒரு கவிதையை எழுதி வந்து வாசித்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார். “ கரப்பான பூச்சியை “ மையமாக கொண்ட கவிதை ஒன்றை கூறி இது தான் தனக்கு பிடித்த கவிதை என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தமிழ் பேசாத இக்காலத்தில். கீர்த்தி சுரேஷ் தமிழில் கவிதை ஒன்றை கூறியது. தனக்கு பிடித்த தமிழ் கவிதை பற்றி பேசியது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக பேசிய எழுத்தாளர்கள் அனைவரும் கூறினார்கள்.

Vishal and Keerthy Suresh launched Lingusamy Haiku book

lingusamy book launch

குடியரசு தினத்தில் கமல்ஹாசனின் அரசியல் கட்சி அறிவிப்பு

குடியரசு தினத்தில் கமல்ஹாசனின் அரசியல் கட்சி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 26th Jan Republic Day Kamal will launch Political partyஒரு பிரபல வார இதழின் சினிமா விருதுகள் விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துக் கொண்ட இளையராஜா, கமல்ஹாசன் ஒரே நேரத்தில் மேடையேறினர்.

வாழ்நாள் சாதனையாளருக்கான எஸ்.எஸ் வாசன் விருதை இசைஞானி இளையராஜாவிற்கு நடிகர் கமல்ஹாசன் அப்போது வழங்கினார்.

அப்போது இளையராஜாவுடனான தனது தருணங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார் கமல்.

விருதைப் பெற்ற இளையராஜா திடீரென கமல்ஹாசனிடம் அவரின் அரசியல் பிரவேசம் பற்றிக் கேட்டார்.

“ஜனவரி 26 முதல் அரசியல் களத்தில் இறங்கப்போகிறேன்.

அதற்குமுன் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறேன்.

பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

On 26th Jan Republic Day Kamal will launch Political party

ilayaraja kamal vikatan award

இனி விதைப்பது நற்பயிராகட்டும்… : கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

இனி விதைப்பது நற்பயிராகட்டும்… : கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan

உழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அதிகாலையிலேயே பொங்கலிட்டு சூரியனை வழபடுவது வழக்கம்.

சாதி, மத பேதமின்றி உலக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் விழா.

பொங்கல் பண்டிகைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள  கமல்…

“அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.” என குறிப்பிட்டுள்ளார்.

Actor Kamalhassan Pongal wishes

சந்தானம் படத்தை இயக்கும் சுசீந்திரன்

சந்தானம் படத்தை இயக்கும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran may direct Actor Santhanams next projectசிம்பு இசையமைப்பில் சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படம் கடந்த டிசம்பர் 22ல் ரிலீஸானது.

இதனையடுத்து அவரது நடிப்பில் 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவரது புதிய படத்தை சுசீந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி வரும் சுசீந்திரன் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Suseenthiran may direct Actor Santhanams next project

சூர்யா படத்திற்காக தமிழ் ராக்கர்ஸிடம் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

சூர்யா படத்திற்காக தமிழ் ராக்கர்ஸிடம் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TSK director Vignesh Shivan request to Tamil rockersவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் நேற்று வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனர் விக்னேஷ்சிவன் கூறியுள்ளதாவது…

நிறைய பேரின் கடின உழைப்பை இப்படத்தில் போட்டுள்ளோம். தயவுசெய்து தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை இணையத்தில் வெளியிடக் கூடாது என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

TSK director Vignesh Shivan request to Tamil rockers

More Articles
Follows