*வீராபுரம்* படத்தில் மணற்கொள்ளையை சொல்லும் *அங்காடித்தெரு* மகேஷ்

Angadi Theru Mahesh starring Veera Puramஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத்தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கியுள்ள படம் “வீராபுரம்”.

இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. இப்படத்தின் நாயகன் அங்காடித்தெரு புகழ் மகேஷ் மற்றும் நாயகி உறுதிகொள் புகழ் மேகனாவும் நடித்திருக்கிறார்.

மணற்கொள்ளையை பற்றிய கருத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவ கதை.

தமிழ் சினிமாவில் வழக்கமாக சொல்லப்படும் காதல்கதை அல்லாது இப்படத்தில் ஒரு சமுதாய பிரசச்சனையை சொல்ல விரும்பிய இயக்குனர் மணற்கொள்ளையால் நடந்த ஒரு உருக்கமான உண்மைச் சம்பவத்தை மிகவும் அழகாக கையாண்டு வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரேம்குமார், இசை ரிதேஷ் & ஸ்ரீதர், எடிட்டிங் கணேஷ் குமார் மற்றும் சண்டைப்பயிற்சி எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Angadi Theru Mahesh starring Veera Puram

Overall Rating : Not available

Related News

அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை…
...Read More

Latest Post