தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் மீண்டும் ஒரு புதிய மெகாத்தொடர் இனியா. உங்கள் SUN TV – ல் வரும் டிசம்பர் 5 ந்தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர்.
அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள்.
ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா,
ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலிஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தப்பையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன்.
எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும், யார் யாரை வெல்லப் போகிறார்கள், என்பதை சுவாரஸ்யமாகவும், திடீர் திருப்பங்களோடும் சொல்ல வருகிறாள் இனியா.
இனியாவாக ஆலியா மானஸா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார். சன் டிவியில் அவர் நடிக்கும் முதல் தொடர் இது.
சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி விக்ரமாக நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் மெகாத்தொடர் இது. மற்றும் சந்தான பாரதி, பிரவினா, L.ராஜா, மான்ஸி,தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி நடித்துள்ளனர்.
இந்தத் தொடரில் சரிகம நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளராக இருக்கும் B R விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குனர் L. ராஜா, தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்திய ஆகிய ஐந்து இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
சரிகம நிறுவனம் சார்பாக B R விஜயலட்சுமி தயாரிக்க கதை : சரிகம கதை இலாகா
திரைக்கதை : கலைமாமணி சேக்கிழார்
வசனம் : மாரிமுத்து
இயக்கம் : நாராயணமூர்த்தி
கிரியேட்டிவ் ஹெட் : ப்ரின்ஸ் இமானுவேல்
First Time Alya Manasa in Sun TV Mega Serial